• Read more
    தினம் ஒரு தகவல்🔴🔴 ☘️வாக்காளர் அடையாள அட்டை எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது ? ஹரியானா ☘️மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி எது ? ஈரல் ☘️மலேசியாவின் கரன்சி எது ? ரிங்கிட் ☘️காந்த கேடயமாக எந்த இரும்பு பயன்படுகிறது ? தேனிரும்பு ☘️புரதச்சத்துக்கள் எதனால் உற்பத்தியாகிறது ? அமினோ அமிலத்தினால் ☘️மயில்களின் சரணாலயம் எது ? விராலிமலை #General_Knowledge
    0 Comments 0 Shares 9K Views
  • Read more
    TNPSC MATHS MODEL QUESTION ரூ 625 க்கு 4% வட்டி விகித்தில் 2 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டுவட்டி காண்க A. ரூ 54 B.ரூ 50 C.ரூ 32 D.ரூ 51 Ans: D அரையாண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடும் முறையில் ரூ.350க்கு4%வட்டி வீதத்தில் ஓர் ஆண்டுக்கு கிடைக்கும் கூட்டு வட்டி காண்க A.ரூ . 15 B.ரூ 13 C.ரூ 15.10 D.ரூ 14.14 Ans: C காலாண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடும் முறையில் ரூ 2000க்கு10%வட்டி வீதத்தில்1 1/4 வருடங்களுக்கு கிடைக்கும் கூட்டு வட்டி காண்க A.ரூ .2265 B.ரூ .2260 C.ரூ .2262.8 D.ரூ 2260 Ans: C ஒரு குறிப்பிட்ட அசலானது 5%தனிவட்டி வீதத்தில் 6ஆண்டுகளில் ரூ. 2613யை தருகிறது எனில் அசல் தொகையை காண்க. A.ரூ. 2010 B.ரூ 2020 C.ரூ.2300 D.ரூ 2000 And: A TNPSC MATHS MODEL QUESTION ஒரு குறிப்பிட்ட தொகையானது 7% தனிவட்டி வீதத்தில் எட்டு மடங்காகிறது எனில் எந்த வட்டி வீதத்தில் அந்த அசல் தொகை நான்கு மடங்காகும் A.3% B.8% C.5% D.4% Ans: A ரூ 300 அசலுக்கு 5% தனிவட்டி வீதத்தில் 7ஆண்டுகளில் கிடைக்கும் தனிவட்டி மற்றும் மொத்த தொகை காண்க A.ரூ 410 B.ரூ 430 C.ரூ 400 D.ரூ 405 Ans: D ஒரு குறிப்பிட்ட அசலானது 20 ஆண்டுகளில் 6 மடங்காகிறது எனில் அதன் வட்டி வீதம் காண்க A.25% B.30% C.20% D.35% Ans: A ரூ. 2000 அசலுக்கு5% வட்டி வீதத்தில் 2 1/2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டுவட்டி காண்க A.ரூ.300 B.ரூ . 260 C.ரூ.280 D.ரூ 269 Ans: B ஒரு குறிப்பிட்ட தொகையானது 6ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில் அதே தொகை அதே வட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில்16 மடங்காக மாறும்? A.50 years B.30 years C.24 years D. 20 years Ans: C ஒரு குறிப்பிட்ட தொகையானது 3 ஆண்டுகளில் ரூ. 550 ஆகவும் 4 ஆண்டுகளில் ரூ 650 ஆகவும் முதிர்வு பெறுகிறது எனில் அசல் தொகை காண்க A.ரூ 250 B.ரூ 300 C.ரூ 150 D.ரூ 400 Ans: A #Model_Question #Maths TNPSC MATHS MODEL QUESTION
    0 Comments 0 Shares 19K Views
  • Read more
    TNPSC 10th Social Science Book Back Questions TNPSC 10th Social Science Book Back Questions 19 ஆம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள் புத்தக வினாக்கள் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும் 1. எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல்( சதி) ஒழிக்கப்பட்டது 2. தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்ட சமாஜத்தின் பெயர் யாது? 3. யாருடைய பணியும் இயக்கமும் ,1856ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது? 4. “ராஸ்ட் கோப்தார்” யாருடைய முழக்கம்? 5. நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்? 6. சுவாமி ஸ்ரத்தானந்தா என்பவர் யார்? 7. விதவை மறுமண சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்? 8. “சத்யார்த்த பிரகாஷ் எனும் நூலின் ஆசிரியர் யார்? TNPSC 10th Social Science Book Back Questions கோடிட்ட இடங்களை நிரப்புக: 1. —————சமரச வேத சன்மார்க்க சங்கத்தை நிறுவினார் 2. புனே சர்வஜனிக் சபாவை நிறுவியவர்———- 3. சத்திய சோதக் சமாஜத்தை தொடங்கியவர்—- 4. குலாம்கிரி நூலை எழுதியவர்—- 5. சத்யபிரகாஷ் எனும் நூல் — —-நேர்மறை கொள்கைகளை பட்டியலிடுகிறது 6. ராமகிருஷ்ணா மிஷன்———-ஆல் நிறுவப்பட்டது 7. —- அகாலி இயக்கத்தின் முன்னோடி ஆகும் 8. — கேரளாவின் சாதிய கட்டுமானத்தில் வியத்தகு மாற்றங்களை கொண்டுவந்தது 9. ஒரு பைசா தமிழன் பத்திரிக்கையை துவக்கியவர்———– சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்: a. ராஜாராம் மோகன்ராய் ஒரு கடவுள் கோட்பாட்டை போதித்தார் b. அவர் உருவ வழிபாட்டை ஆதரித்தார் c. சமூகத் தீமைகளை கண்டனம் செய்வதை எதிர்த்து அவர் சிற்றேடுகளை வெளியிட்டார் d. ராஜாராம் மோகன்ராய் கவர்னர் வில்லியம் பென்டிங் கால் ஆதரிக்கப்பட்டார் a. பிரார்த்தனை சமாஜம் டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங் ரால் நிறுவப்பட்டது b.இந்த சமாஜம் அனைத்து சாதியினரும் பங்கேற்கும் சமபந்திகளையும் சாதிக் கலப்பு திருமணங்களையும் ஊக்குவித்தது c. ஜோதிபா பூலே ஆண்களின் மேம்பாட்டிற்காக பணியாற்றினார் d. பிரார்த்தனை சமாஜம் பஞ்சாபை பிறப்பிடமாகக் கொண்டது a. ராமகிருஷ்ணா மிஷன் கல்வி, உடல்நலம் , பேரிடர்களின் போது நிவாரணப் பணி செய்தல், போன்ற சமூகப் பணிகளில் செயலூக்கத்துடன் ஈடுபட்டது b. பேரின்ப நிலை எய்தும் பழக்கங்களின் மூலம் ஆன்ம ரீதியாக இறைவனோடு இணைவதை ராமகிருஷ்ணர் வலியுறுத்தினார் c. ராமகிருஷ்ணர் ராமகிருஷ்ணா மிஷன் ஏற்படுத்தினார் d. ராமகிருஷ்ணர் வங்கப் பிரிவினையை எதிர்த்தார் 4. கூற்று:ஜோதிபா பூலே ஆதரவற்றோர் கான விடுதிகளையும், விதவைகளுக்கான விடுதிகளையும் திறந்தார் காரணம்: ஜோதிபா பூலே குழந்தை திருமணத்தை எதிர்த்தார் , விதவை மறுமணத்தை ஆதரித்தார் பொருத்துக: அ. அய்யாவழி- விதவை மறுமணச் சீர்திருத்தச்சட்டம் ஆ. திருவருட்பா- நிரங்காரி இயக்கம் இ. பாபா தயாள் தாஸ்- ஆதி பிரம்ம சமாஜம் ஈ. ஈஸ்வர சந்திர வித்யாசாகர் – வைகுண்ட சுவாமிகள் உ தேவேந்திரநாத்- ஜீவகாருண்ய பாடல்கள் TNPSC 10th Social Science Book Back Questions ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்க கால கிளர்ச்சிகள் (புத்தக வினாக்கள்) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: 1. கிழக்கிந்திய கம்பெனியின் நாடு பிடிக்கும் ஆசை யை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்? 2. கர்நாடகப் போர்களில் ஈடுபட்டு இருந்தபோது ஏற்பட்ட செலவினங்களுக்காக கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து கடனாக பணத்தை வாங்கியவர் யார்? 3. சந்தா சாகிப்பின் 3 முகவர்களும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்? 4. சிவசுப்பிரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்? 5. திருச்சிராப்பள்ளி சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டவர் யார்? 6. வேலூர் புரட்சி எப்போது வெடித்தது? 7. வேலூர் கோட்டையில் புதிய ராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்த காரணமாய் இருந்த தலைமை தளபதி யார்? 8. வேலூர் புரட்சி பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்? கோடிட்ட இடத்தை நிரப்புக: 1. பாளையக்காரர் முறை தமிழகத்தில் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது? 2.——- பாளையக்காரரை தவிர மேற்குப்பகுதியில் வீற்றிருந்த பாளையக்காரர்கள் அனைவரும் பூலித்தேவரை ஆதரித்தனர்? 3. வேலுநாச்சியாரும் அவரது மகளும் 8 ஆண்டுகளாக யார் பாதுகாப்பில் இருந்தனர்? 4. கட்டபொம்மனை சரணடைய கோரும் தகவலை தெரிவிக்க பானர்மேன் யாரை அனுப்பி வைத்தார்? 5. கட்டபொம்மன் எந்த இடத்தில் தூக்கிலிடப்பட்டார்? 6. மருது சகோதரர்களின் புரட்சி பிரிட்டிஷ் குறிப்புகளில் ——- என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது? 7. என்பவர் புரட்சிக் காரர்களால் வேலூர் கோட்டையில் புதிய சுல்தானாக அறிவிக்கப்பட்டார்? 8. வேலூர் கோட்டையில் புரட்சியை ஒடுக்கியவர்———- ஆவார் TNPSC 10th Social Science Book Back Questions சரியான கூற்றை தேர்வுசெய்யவும் 1. a. பாளையக்காரர் முறை காகதீய பேரரசின் நடைமுறையில் இருந்தது b. கான்சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும் சேவல் 1764 இல் மீண்டும் கைப்பற்றினார் 6. கம்பெனி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்காமல் பாளையக்காரர்கள் ஓடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் யூசுப் கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764 இல் தூக்கிலிடப்பட்டார் d. ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படை பிரிவுகளில் ஒன்றை தலைமையேற்று வழிநடத்தினார் 2. a. கர்னல் கேம்பல் தலைமையின் கீழ் ஆங்கிலேய படைகள் மாபூஸ்கான் படைகளோடு இணைந்து சென்றனர் b. காளையார் கோவில் போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டபின் வேலு நாச்சியார் மீண்டும் அரியணையை பெறுவதற்கு மருது சகோதரர்கள் துணை புரிந்தனர் c. திண்டுக்கல் கூட்டமைப்பிற்கு கோபால நாயக்கர் தலைமையேற்று வழிநடத்தினார் d. காரன்வாலிஸ் மே 1799இல் கம்பெனி படைகளை திருநெல்வேலி நோக்கி செல்ல உத்தரவிட்டார் 3. கூற்று : பூலித்தேவர், ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியை பெற முயன்றார் காரணம்: மராத்தியர்கள் ஏற்கனவே தொடர் போர்களில் ஈடுபட்டுக் கொண்டே இருந்ததால் ஹைதர் அலியால் பூலித்தேவருக்கு உதவ முடியாமல் போனது 4. கூற்று: புதிய ராணுவ நெறிமுறை மட்டுமல்லாமல் தலைப்பாகையில் வைக்கப்படும் தோலாலான இலச்சினையும் கடும் எதிர்ப்பை விளைவித்தது காரணம்: தோல் இலட்சினை விலங்குகளின் தோலில் செய்யப்பட்டது பொருத்துக: 1. தீர்த்தகிரி- வேலூர் புரட்சி 2. கோபால நாயக்கர்- ராமலிங்கனார் 3. பானர்மேன்- திண்டுக்கல் 4. சுபேதார் ஷேக் ஆதம்- வேலூர் கோட்டை 5. கர்னல் பேன் கோர்ட்- ஓடாநிலை #Social_Science #Book_Back_Questions
    0 Comments 0 Shares 18K Views
  • Read more
    தினம் ஒரு தகவல்🔴🔴 ❣️ரங்கசாமி கோப்பை எந்த விளையாட்டுக்கு தரப்படுகிறது - ஹாக்கி. ❣️அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தை இணைக்கும் பாலம் -தோலா சதியா பாலம். ❣️மௌரிய ராஜ்ஜியத்தின் தலைநகரம் அமைந்துள்ள இடம் - பாடலிபுத்ரா. ❣️உலகிலேயே மிகவும் உயரமான மனிதர் - சுல்தான் கோசன் (2.52 மீ). ❣️உலக சிட்டுக்குருவி தினம் - மார்ச் 20. #General_Knowledge
    0 Comments 0 Shares 11K Views
  • #Current_Affairs
    #Current_Affairs
    0 Comments 0 Shares 12K Views
  • வரலாறு என்ற சொல் ___________மொழிச் சொல்லான 'இஸ்டோரியா’ என்பதிலிருந்து பெறப்பட்டது
    வரலாறு என்ற சொல் ___________மொழிச் சொல்லான 'இஸ்டோரியா’ என்பதிலிருந்து பெறப்பட்டது
    0
    0
    0
    0
    1 Comments 0 Shares 5K Views
  • இரும்புக் கால கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் _______.
    இரும்புக் கால கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் _______.
    0
    0
    0
    1
    1 Comments 0 Shares 5K Views
  • Read more
    வாஸ்கோடாகாமா கள்ளிக்கோட்டையை அடைந்தபோது அவரை வரவேற்ற மன்னர் ஜஹாங்கீர் சாமரின் காப்ரல் ஒளரங்கசீப் #History
    1 Comments 0 Shares 7K Views
  • Read more
    பேரண்டத்தின் இயல்பு அண்டம் வான்பொருள்களின் இயக்கங்கள், இருப்பிடங்கள் மற்றும் அவற்றின் ஆக்கக் கூறுகள் (composition) போன்றவற்றை அறியும் அறிவியலின் பிரிவு வானவியல் (astronomy) எனப்படும். விண்மீனான (star) சூரியனை கோள்கள் சுற்றிவருகின்றன. நமது விண்மீன் திரளில் (Galaxy) இருக்கக்கூடிய நூறு பில்லியன் விண்மீன்களில் சூரியனும் ஒன்று. இது பால்வழித்திரள் (milky way) எனப்படும். ஈர்ப்பியல் விசை காரணமாக ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட ஏராளமான விண்மீன்களின் தொகுப்பு விண்மீன் திரள் எனப்படும். இது போன்று பில்லியன்கள் விண்மீன்கள் சேர்ந்தது அண்டம் ஆகும். ஆகவே, சூரியக் குடும்பம், விண்மீன்கள் மற்றும் விண்மீன் திரள்கள் போன்றவை அண்டத்தின் பகுதிகளாகும். அண்டத்தின் தோற்றம் அண்டத்தின் தோற்றம் பற்றி மூன்று கொள்கைகள் விளக்குகின்றன. 1. பெருவெடிப்புக் கொள்கை 2. துடிப்புக் கொள்கை 3. நிலை மாறாக் கொள்கை அண்டத்தின் கட்டுறுப்புகள் கோடிக்கணக்கான விண்மீன்களை உள்ளடக்கிய, ஒளி வீசக்கூடிய விண்மீன் திரள்களே அண்டத்தின் அடிப்படைக் கூறுகளாகும். புவி, கோள்கள், விண்மீன்கள், வான்வெளி மற்றும் விண்மீன் திரள்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய அமைப்பே அண்டம் ஆகும். தங்களால் பார்க்க முடிந்ததை வைத்து அண்டத்தின் அளவை அறிவியலாளர்கள் கணிக்கின்றனர். இதற்கு பார்க்கக்கூடிய அண்டம் என்று பெயர். இந்த பார்க்கக் கூடிய அண்டம் 93 பில்லியன் ஒளி ஆண்டுகள் அளவு கொண்டது. (1 ஒளி ஆண்டு = 9.4607 × 102 கிமீ ஒரு ஆண்டு காலத்தில் ஒளி செல்லும் தொலைவு) அண்டத்தின் பெரும்பகுதி இருண்ட பொருள் மற்றும் இருண்ட ஆற்றலாகவே உள்ளது. அண்டத்தின் வயது (வாழ்நாள்) ஒரு மாபெரும் வெடிப்பிலிருந்துதான் அண்டம் தோன்றியது என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர். அண்டத்திலுள்ள அனைத்துப் பொருள்களும் அதிக அடர்த்தி கொண்ட ஓர் பருப்பொருளில் செறிந்திருந்தன. ஏறத்தாழ 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பெருவெடிப்பு ஏற்பட்டு விண்மீன் திரள்களின் வடிவில் அனைத்துப் பொருள்களும் அனைத்துத் திரள்களிலும் வெடித்துச் சிதறின. அண்டத்திலுள்ள அனைத்துப் பொருள்களும் பெருவெடிப்பின் போது, தோன்றிய, அடிப்படைத் தனிமங்களான ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் ஆகியவற்றால் ஆனவை. #Science #Study_Material_Science
    0 Comments 0 Shares 8K Views
  • Read more
    பூமியில் நமது இருப்பை நிலைநாட்ட முக்கியத் தேவையான ஆற்றலை வெப்பமாகவும் ஒளியாகவும் நமக்குக் கடத்திக் கொண்டிருக்கும் நமது குடும்பத்தின் முக்கிய அங்கமான தலைவர் சூரியனை நோக்கி இன்று முற்பகல் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 11:50 இந்திய நேரத்திற்கு விண்ணில் ஆதித்யா - எல் ஒன் ஏவப்பட உள்ளது. சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நட்சத்திரமான நம் சூரியன் தொடர்ந்து தனது ஒளி மூலமும் வெப்பம் மூலமும் 1500 லட்சம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்தாலும் தனது இருப்பை ஒரு தாய் போல தந்தை போல உணர்த்திக் கொண்டே இருக்கிறது. சூரியன் ஒரு மாபெரும் ஹைட்ரஜன் ஒன்றிணைவு தத்துவத்தில் நிகழும் அணுகுண்டு வெடிப்பு தொடர்ந்து அங்கு பல ஹைட்ரஜன் அணுகுண்டுகள் வெடித்துக் கொண்டே இருக்கின்றன அத்தகைய சூரியனில் ஏற்படும் புயல்கள், சூறாவளிகள், எரிமலை வெடிப்புகள் அதனால் அதனைச் சுற்றியுள்ள வெளியில் அது வீசும் அக்கினிச் ஜுவாலைகள், நெருப்புக் கீற்றுகள் , அதிலிருந்து வெளிப்படும் அணுக்கதிர்கள், புற ஊதாக்கதிர்கள் அதனால் சூரிய குடும்பத்தில் வசிக்கும் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் நாம் விண்வெளியில் நிலைநிறுத்தி வைத்திருக்கும் 10,000 சொச்சம் செயற்கைக் கோள்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என பலவற்றை தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய வேண்டிய தேவை இருக்கிறது அதன் ஒரு பகுதியாக 1500 லட்சம் கிமீ தூரத்தில் இருக்கும் சூரியனை 15 லட்சம் கிலோமீட்டர் தூரம் இங்கிருந்து பயணித்து சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட ஒரு புள்ளியில் இருந்து சூரியனை தொடர்ந்து கவனித்து வந்தால் எப்படி இருக்கும்? அது தான் "ஆதித்யா - எல் 1" விண்ணாய்வுக் கருவித் திட்டத்தின் நோக்கமாகும் அது என்ன எல்-1 ? எல் - 1 என்றால் லேக் ரேஞ்ச் - 1 பாய்ண்ட் என்று அர்த்தம் நமக்கு தெரியும் ஏனைய கோள்களைப் போல பூமிக்கு என பிரத்யேக ஈர்ப்பு விசை உண்டு. அதே போல சூரியனுக்கும் பலமான ஈர்ப்பு விசை உண்டு. பூமியை விட்டு அதன் ஈர்ப்பு விசையை மீறி சூரியனை நோக்கி செல்லும் போது ஓரிடத்தில் இவ்விரண்டு விண்வெளி அங்கங்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை மிக மிகக் குறைவாக உணரப்படும் இடமே "LAG RANGE 1 POINT" குறிப்பிட்ட அந்த பகுதியை அடைந்து அந்த புள்ளியை சுற்றி வட்டமடித்துக் கொண்டே சூரியனை நோக்கி ஆராய்ச்சிகள் செய்வதே ஆதித்யா-எல் 1 இன் பணியாகும். இதற்கான பயணத்திட்டம் இதோ - பூமியில் இருந்து இன்று ஏவப்பட இருக்கும் ஆதித்யா -எல் 1 பூமியின் கீழ் வட்டப் பாதையில் சுற்றி வரும் இஸ்ரோவிடம் நேரடியாக பூமியின் ஈர்ப்பு விசையை உடைத்து வெளியே கிளம்பும் வண்ணம் ஆற்றலுடைய இஞ்சின் தொழில்நுட்பம் தற்போது இல்லை. பூமியின் ஈர்ப்பு விசையை உடைத்து வெளியேற "எஸ்கேப் வெலாசிட்டி" எனும் வேகத்தை ஒரு பொருள் அடைய வேண்டும். அதற்கு நிறைய ஆற்றல் தேவை. அவ்வளவு ஆற்றல் வேண்டுமென்றால் அவ்வளவு எரிபொருள் வேண்டும் அவ்வளவு எரிபொருளை ஏற்றிக் கொண்டு விண்வெளிக்குச் செல்லும் அளவு ஆற்றலுடைய இஞ்சின் வேண்டும். அது நம்மிடம் தற்போது இல்லை எனினும் இத்தகைய குறையை சரிசெய்ய "ஹாஹ்மேன் ட்ரான்ஸ்ஃபர் ஆர்பிட்" எனும் முறை பயன்படுத்தப்படுகிறது. இதை பேச்சு வழக்கில் "ஸ்லிங் ஷாட் முறை" என்று அழைக்கிறோம். கவண் எரிவது போல சுழற்றி சுழற்றி வீசும் போது நாம் வீசும் பொருள் பல மடங்கு வேகமும் தூரமும் சென்று சேருமில்லையா? அதைப்போல ஆதித்யா எல் ஒன்னும் குறைவான எரிபொருளை உபயோகித்து பூமியின் ஈர்ப்பு விசையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பூமியை மூன்று முறை நீள்வட்டப்பாதையில் சுற்றும் இவ்வாறு ஒவ்வொரு முறை சுற்றும் போது "பெரிக்ரி பர்ன்" செய்யப்படும். அதாவது ஒரு சுற்று முடியும் போது இஞ்சின் ஆன் செய்யப்பட்டு அடுத்த கட்ட உயரத்தை அடையும் இவ்வாறு மூன்று ரவுண்ட் சுற்றி முடிக்கும் போது பூமியின் ஈர்ப்புக் கரங்களை விட்டு வெளியேறி சூரியனை நோக்கிய பாதையில் நிலை கொள்ளும். இந்த நிலையை அடைவதற்கு 18 நாட்கள் தேவைப்படும். எப்படி பள்ளி முடித்த குழந்தைகள் பள்ளிக்கு வெளியே காத்திருக்கும் தனது தாயை நோக்கி விரைந்து செல்வரோ அதே போல பூமியின் ஈர்ப்பை விட்டுப் பிரிந்த விண்கலம் சூரியனின் ஈர்ப்பால் உந்தப்பட்டு அதை நோக்கி தானாக நகரும். இப்போது மிகக் குறைவான எரிபொருளில் சூரியனின் ஈர்ப்பு விசையை பெரும்பகுதி பயன்படுத்தி மெதுவாக அதே சமயம் தொடர்ச்சியாக சூரியனை நோக்கிய தனது பயணத்தை விண்கலம் ஆரம்பிக்கும். சுமார் 109 நாட்கள் "க்ரூஸ் மோடில்" பயணித்த பிறகு தனது திட்டப்படி லேக் ரேஞ்ச் -1 பாய்ண்ட்டை அடையும். அந்த புள்ளியை மையமாக வைத்து வட்டமாகவும் இல்லாமல் நீள்வடிவமாகவும் இல்லாமல் இது ஏன் ஒரே வட்டப்பாதையிலும் இல்லாமல் "லிசாஜஸ் கர்வ்" என்றழைக்கப்படும் பல கோணங்களில் பல வடிவங்களில் அந்த புள்ளியை அடுத்த ஐந்து வருடங்களுக்கு "ஹாலோ ஆர்பிட்டில்" சுற்றிக் கொண்டே இருக்கும். இதில் சிறப்பான விசயம் என்னவென்றால் அந்த புள்ளியின் ஒரு பக்கம் செல்லும் போது சூரியனின் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி சுற்றும் மற்றொரு பக்கம் செல்லும் போது பூமியின் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி சுற்றும். எப்படி கயிறு இழுக்கும் போட்டியில் மாறி மாறி இழுப்போமோ அது போல பூமியும் சூரியனும் மாறி மாறி அங்கிட்டும் இங்கிட்டும் இழுக்க அந்த புள்ளியை ஐந்து வருடங்கள் சுற்றுவதற்கு மிக மிக குறைவான எரிபொருளே தேவைப்படும். குறைவான செலவு குறைவான எரிபொருள் நீண்ட கால பயணத்திட்டம் வேகத்தை விட விவேகத்தை பயன்படுத்துவது சந்தர்ப்ப சூழ்நிலைகளை சாதகமாக்கி வெற்றி காண உழைப்பது இதுவே இஸ்ரோவின் நிகழ்கால வெற்றிக்கு அடிப்படையாக உள்ளன. இதுவரை நடைபெற்ற விண்வெளி திட்டங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளே தலைமை இயக்குநர்களாக பணிபுரிந்துள்ளனர். சந்திரயான் மற்றும் தற்போதைய ஆதித்யா -எல் 1 வரை திரு. மயில்சாமி அண்ணாதுரை திரு.கே. சிவன் திருமதி. வனிதா திரு . வீரமுத்துவேல் தற்போதைய இந்த ஆதித்யா எல்1 திட்டத்திற்கு தென்காசியைச் சேர்ந்த விஞ்ஞானி திருமதி. நிஹர் சாஜி அவர்கள் இயக்குநராக செயல்பட உள்ளார்கள் என்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாகும். நாம் ஒவ்வொருவரும் அமைதியாக துயில் கொள்ளச் செல்வதே அடுத்த நாள் புதிதான மற்றொரு விடியலைப் பார்ப்போம் என்ற நம்பிக்கையில் தானே.. அத்தகைய விடியலை நமக்கு நாள்தோறும் பரிசளிக்கும் சூரியனை நோக்கிய நமது பயணம் இனிதே வெற்றி பெற வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும் நன்றி Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை #History #Current_Affairs
    0 Comments 0 Shares 11K Views
Sponsored