பேரண்டத்தின் இயல்பு

அண்டம்

வான்பொருள்களின் இயக்கங்கள், இருப்பிடங்கள் மற்றும் அவற்றின் ஆக்கக் கூறுகள் (composition) போன்றவற்றை அறியும் அறிவியலின் பிரிவு வானவியல் (astronomy) எனப்படும்.

விண்மீனான (star) சூரியனை கோள்கள் சுற்றிவருகின்றன. நமது விண்மீன் திரளில் (Galaxy) இருக்கக்கூடிய நூறு பில்லியன் விண்மீன்களில் சூரியனும் ஒன்று. இது பால்வழித்திரள் (milky way) எனப்படும்.

ஈர்ப்பியல் விசை காரணமாக ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட ஏராளமான விண்மீன்களின் தொகுப்பு விண்மீன் திரள் எனப்படும். இது போன்று பில்லியன்கள் விண்மீன்கள் சேர்ந்தது அண்டம் ஆகும்.

ஆகவே, சூரியக் குடும்பம், விண்மீன்கள் மற்றும் விண்மீன் திரள்கள் போன்றவை அண்டத்தின் பகுதிகளாகும்.

அண்டத்தின் தோற்றம்

அண்டத்தின் தோற்றம் பற்றி மூன்று கொள்கைகள் விளக்குகின்றன.
1. பெருவெடிப்புக் கொள்கை
2. துடிப்புக் கொள்கை
3. நிலை மாறாக் கொள்கை

அண்டத்தின் கட்டுறுப்புகள்

கோடிக்கணக்கான விண்மீன்களை உள்ளடக்கிய, ஒளி வீசக்கூடிய விண்மீன் திரள்களே அண்டத்தின் அடிப்படைக் கூறுகளாகும்.

புவி, கோள்கள், விண்மீன்கள், வான்வெளி மற்றும் விண்மீன் திரள்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய அமைப்பே அண்டம் ஆகும்.

தங்களால் பார்க்க முடிந்ததை வைத்து அண்டத்தின் அளவை அறிவியலாளர்கள் கணிக்கின்றனர். இதற்கு பார்க்கக்கூடிய அண்டம் என்று பெயர். இந்த பார்க்கக் கூடிய அண்டம் 93 பில்லியன் ஒளி ஆண்டுகள் அளவு கொண்டது. (1 ஒளி ஆண்டு = 9.4607 × 102 கிமீ ஒரு ஆண்டு காலத்தில் ஒளி செல்லும் தொலைவு)

அண்டத்தின் பெரும்பகுதி இருண்ட பொருள் மற்றும் இருண்ட ஆற்றலாகவே உள்ளது.

அண்டத்தின் வயது (வாழ்நாள்)

ஒரு மாபெரும் வெடிப்பிலிருந்துதான் அண்டம் தோன்றியது என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

அண்டத்திலுள்ள அனைத்துப் பொருள்களும் அதிக அடர்த்தி கொண்ட ஓர் பருப்பொருளில் செறிந்திருந்தன. ஏறத்தாழ 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பெருவெடிப்பு ஏற்பட்டு விண்மீன் திரள்களின் வடிவில் அனைத்துப் பொருள்களும் அனைத்துத் திரள்களிலும் வெடித்துச் சிதறின.

அண்டத்திலுள்ள அனைத்துப் பொருள்களும் பெருவெடிப்பின் போது, தோன்றிய, அடிப்படைத் தனிமங்களான ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் ஆகியவற்றால் ஆனவை.
#Science
#Study_Material_Science
பேரண்டத்தின் இயல்பு அண்டம் வான்பொருள்களின் இயக்கங்கள், இருப்பிடங்கள் மற்றும் அவற்றின் ஆக்கக் கூறுகள் (composition) போன்றவற்றை அறியும் அறிவியலின் பிரிவு வானவியல் (astronomy) எனப்படும். விண்மீனான (star) சூரியனை கோள்கள் சுற்றிவருகின்றன. நமது விண்மீன் திரளில் (Galaxy) இருக்கக்கூடிய நூறு பில்லியன் விண்மீன்களில் சூரியனும் ஒன்று. இது பால்வழித்திரள் (milky way) எனப்படும். ஈர்ப்பியல் விசை காரணமாக ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட ஏராளமான விண்மீன்களின் தொகுப்பு விண்மீன் திரள் எனப்படும். இது போன்று பில்லியன்கள் விண்மீன்கள் சேர்ந்தது அண்டம் ஆகும். ஆகவே, சூரியக் குடும்பம், விண்மீன்கள் மற்றும் விண்மீன் திரள்கள் போன்றவை அண்டத்தின் பகுதிகளாகும். அண்டத்தின் தோற்றம் அண்டத்தின் தோற்றம் பற்றி மூன்று கொள்கைகள் விளக்குகின்றன. 1. பெருவெடிப்புக் கொள்கை 2. துடிப்புக் கொள்கை 3. நிலை மாறாக் கொள்கை அண்டத்தின் கட்டுறுப்புகள் கோடிக்கணக்கான விண்மீன்களை உள்ளடக்கிய, ஒளி வீசக்கூடிய விண்மீன் திரள்களே அண்டத்தின் அடிப்படைக் கூறுகளாகும். புவி, கோள்கள், விண்மீன்கள், வான்வெளி மற்றும் விண்மீன் திரள்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய அமைப்பே அண்டம் ஆகும். தங்களால் பார்க்க முடிந்ததை வைத்து அண்டத்தின் அளவை அறிவியலாளர்கள் கணிக்கின்றனர். இதற்கு பார்க்கக்கூடிய அண்டம் என்று பெயர். இந்த பார்க்கக் கூடிய அண்டம் 93 பில்லியன் ஒளி ஆண்டுகள் அளவு கொண்டது. (1 ஒளி ஆண்டு = 9.4607 × 102 கிமீ ஒரு ஆண்டு காலத்தில் ஒளி செல்லும் தொலைவு) அண்டத்தின் பெரும்பகுதி இருண்ட பொருள் மற்றும் இருண்ட ஆற்றலாகவே உள்ளது. அண்டத்தின் வயது (வாழ்நாள்) ஒரு மாபெரும் வெடிப்பிலிருந்துதான் அண்டம் தோன்றியது என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர். அண்டத்திலுள்ள அனைத்துப் பொருள்களும் அதிக அடர்த்தி கொண்ட ஓர் பருப்பொருளில் செறிந்திருந்தன. ஏறத்தாழ 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பெருவெடிப்பு ஏற்பட்டு விண்மீன் திரள்களின் வடிவில் அனைத்துப் பொருள்களும் அனைத்துத் திரள்களிலும் வெடித்துச் சிதறின. அண்டத்திலுள்ள அனைத்துப் பொருள்களும் பெருவெடிப்பின் போது, தோன்றிய, அடிப்படைத் தனிமங்களான ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் ஆகியவற்றால் ஆனவை. #Science #Study_Material_Science
0 Comments 0 Shares 8K Views
Sponsored