For Group 1, 2 Mains
கலைஞர் மகளிர் உரிமை தொகை விவரி ?
திராவிட இயக்க தலைவர்கள் அனைவருமே பெண்கள் உரிமைக்காகவும், பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் குரல் கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் பாதையில் அடியொற்றி நடக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. தேர்தல் அறிக்கையிலேயே, மகளிர் நலனுக்காக பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்று, மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டதுதான். இதை அவர் இலவசம் என்று சொல்லவில்லை. இது மகளிரின் உரிமை என்ற வகையில், உரிமை தொகை என்று சொல்லி, மகளிருக்கு பெருமை சேர்த்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக பெண்கள் ஆயிரம் ரூபாய் உதவி தொகை எப்போது தங்களுக்கு கிடைக்கும்? என்று எதிர்பார்த்துக்கொண்டு இருந்தனர். எதிர்க்கட்சிகளும் தேர்தல் அறிக்கையில், பெண்களுக்குமாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சொன்ன வாக்குறுதி என்ன ஆச்சு? என்று மேடைதோறும் முழங்கினர். அறிக்கைகள் வெளியிட்டனர். சொன்ன சொல்லை காப்பாற்றும் விதமாக கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், “குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தோம். 'சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்' என்ற இலக்கின்படி, தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்ப தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் ரூ.1,000 | உரிமை தொகையாக வழங்கப்பட இருக்கிறது. சமையல் கியாஸ், விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்ப செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்ப தலைவிகளுக்கு, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்கு பேருதவியாக இருக்கும். இந்த திட்டம் கலைஞரின் நூற்றாண்டான இந்த ஆண்டில் திராவிட இயக்க மாதம் என்று சொல்லத்தக்க, செப்டம்பர் மாதத்தில் அறிஞர் அண்ணா பிறந்தநாளான 15-ந் தேதி முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தை செயல்படுத்த மகளிர் உரிமை தொகை திட்ட சிறப்பு அதிகாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி இளம்பகவத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த திட்ட செயலாக்கத்தின் பூர்வாங்க பணிகள் இப்போதே தொடங்கிவிட்டது. இதற்காக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த மகத்தான திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என்று பெயர் சூட்டப்படுகிறது. இதற்காக ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பயனைப்பெற ஒன்றரை கோடி விண்ணப்பங்கள் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்களைப்பெற ரேசன் கடைகள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.
எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டு விடக்கூடாது என்று பேசினார்.
இதைத்தொடர்ந்து, இந்த ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை பெற தகுதியான மகளிர் யார்-யார்? என்பதை விளக்கும் 14 வழிகாட்டு நெறிமுறைகள் அரசால் வெளியிடப்பட்டுள்ளன. வசதி படைத்தவர்களுக்கு இந்த உரிமை தொகை தேவையில்லை, வசதியில்லாத அனைவருக்கும் இந்த உதவி தொகை தேவை என்ற அளவில், இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. தகுதியான எந்த பயனாளியும் விடுபட்டுவிடக்கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்களுக்கு கூறிய அறிவுரை, ஏழை பெண்களுக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களின் வாழ்வில் இந்த ஆயிரம் ரூபாய் என்பது பேருதவியாக இருக்கும்.

0 Comments
0 Shares
4K Views