TNPSC Group 4 New Syllabus 2025

0
5Кб

TNPSC Group 4 New Syllabus 2025

TNPSC GROUP 4 - புதிய பாடத்திட்டம் - (பொதுத்தமிழ்)

அலகு 1: இலக்கணம் (25 கேள்விகள்)

எழுத்து: பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல் - சந்திப்பிழை - குறில், நெடில் வேறுபாடு லகர, ளகர, ழகர வேறுபாடு னகர, ணகர வேறுபாடு ரகர, றகர வேறுபாடு இனவெழுத்துகள் அறிதல் - சுட்டு எழுத்துகள் வினா எழுத்துகள் - ஒருமைப் பன்மை அறிதல்.

-

சொல்: வேர்ச்சொல் அறிதல் -வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், பெயரெச்சம் வகை அறிதல் - அயற்சொல் தமிழ்ச்சொல், எதிர்ச்சொல் வினைச்சொல் எழுத்துப் பிழை, ஒற்றுப்பிழை அறிதல் - இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு அறிதல்.

-

அலகு II: சொல்லகராதி (15 கேள்விகள்)

(i) எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல், ஓரெழுத்து ஒரு மொழி, உரிய பொருளைக் கண்டறிதல் ஒருபொருள் தரும் பல சொற்கள், பொருந்தா சொல்லைக் கண்டறிதல், அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்; ஒருபொருள் பன்மொழி - இருபொருள் குறிக்கும் சொற்கள் - பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு - சொல்லும் பொருளும் அறிதல் - ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல் அறிதல்.

(ii) கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் -(எ.கா.) பள்ளிக்குச் சென்று கல்வி பயிலுதல் சிறப்பு (பயிலுதல், எழுதுதல்) - வானில் முகில் தோன்றினால் மழை பொழியும் (முகில், நட்சத்திரம்); பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் - (எ.கா.) ஊடகம் - தகவல் தொடர்புச் சாதனம் (செய்தி, தகவல் தொடர்புச் சாதனம்) - சமூகம் - மக்கள் குழு மக்கள் குழு, கூட்டம்); ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக (எ.கா.) புதுச்சேரி புதுவை, மன்னார்குடி - மன்னை, மயிலாப்பூர் - மயிலை; பிழை திருத்துக. (எ.கா.) ஒரு - ஓர்; பேச்சு வழக்குச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைத்தல் - (எ.கா.) வெத்தில - வெற்றிலை, நாக்காலி - நாற்காலி;

(ii) பேச்சு வழக்குத் தொடர்களிலுள்ள பிழை திருத்தம் - (எ.கா.) நேத்து மழ பேஞ்சுது- நேற்று மழை பெய்தது; சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல்: மற்றும், அல்லது, ஆல், பிறகு, வரை, இதுவுமல்ல, இருப்பினும், எனினும், இதனால்; அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல் (எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை, பின்பு) - (எ.கா.) நான் காட்டிற்குச் சென்றேன். அதனால் புலியைப் பார்த்தேன் - மாலைநேரம் முடியும் வரை விளையாடுவேன். தேர்வு முடிந்த பின்பு சுற்றுலா செல்லலாம்; பொருள் தரும் ஓர் எழுத்து (எ.கா.) ஆ-பசு, ஈ-கொடு, தை- மாதம், தீ - நெருப்பு; பல பொருள் தரும் ஒரு சொல்லைக் கூறுக (எ.கா.) கமலம், கஞ்சம், முளரி, பங்கயம் இச்சொற்கள் தாமரையைக் குறிக்கும்.

அலகு III: எழுதும் திறன் (15 கேள்விகள்)

-

(i) சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல் தொடர் வகைகள் - செய்வினை, செயப்பாட்டு வினை - தன்வினை, பிறவினை -ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்.

-

(ii) மரபுத் தமிழ்: திணை மரபு -உயர்திணை: அம்மா வந்தது -அம்மா வந்தாள்; அஃறிணை: மாடுகள் நனைந்தது மாடுகள் நனைந்தன; பால் மரபு: ஆண்பால்: அவன் வந்தது - அவன் வந்தான்; பெண்பால்: அவள் வந்தது அவள் வந்தாள்; பலர் பால்: அவர்கள் 

வந்தார்கள் அவர்கள் வந்தனர்; ஒன்றன் பால்: அது வந்தன - அது வந்தது; பலவின் பால்: பறவைகள் பறந்தனர் - பறவைகள் பறந்தன; காலம்: நேற்று மழை பெய்யும் - நேற்று மழை பெய்தது; நேற்று வருவேன் - நேற்று வந்தேன்; இளமைப் பெயர்: பசு கன்று; ஆடு - குட்டி; ஒலிமரபு: நாய் கத்தியது - நாய் குரைத்தது; வினைமரபு: கூடைமுடை, சோறு உண்; தொகை மரபு: மக்கள் கூட்டம் ஆட்டு மந்தை; நிறுத்தல் குறியீடுகள்: கால்புள்ளி, அரைப் புள்ளி, முக்கால் புள்ளி, முற்றுப் புள்ளி, வியப்புக் குறி, வினாக்குறி அமையும் இடங்கள்.

அலகு IV: கலைச் சொற்கள் (10 கேள்விகள்)

பல்துறை சார்ந்த கலைச் சொற்களை அதாவது அறிவியல், கல்வி, மருத்துவம், மேலாண்மை, சட்டம், புவியியல், தொழில்நுட்பம், ஊடகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்துறை சார்ந்த கலைச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொற்களை அறிந்திருக்க வேண்டும். (உதாரணம்: search engine -தேடு பொறி, வலசை Migration, ஒவ்வாமை Allergy, மரபணு - Gene, கடல் - Nautical Mile)

அலகு V: வாசித்தல் - புரிந்து கொள்ளும் திறன் (15 கேள்விகள்)

கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் - செய்தித்தாள் தலையங்கம் - முகப்புச் செய்திகள் - அரசு சார்ந்த செய்திகள்-கட்டுரைகள் -இவற்றை வாசித்தல் - புரிந்து கொள்ளும் திறன் - உவமைத் தொடரின் பொருளறிதல்-மரபுத் தொடரின் பொருளறிதல் - பழமொழிகள் பொருளறிதல் ஆவண உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்ளும் திறன்.

அலகு VI: எளிய மொழி பெயர்ப்பு (5 கேள்விகள்)

ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அறிதல் வேண்டும் பயன்பாட்டில் உள்ள ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்த்தல் வேண்டும் (சான்று: pendrive, printer, computer, keyboard) - ஆவணங்களின் தலைப்பு கோப்புகள் - கடிதங்கள் மனுக்கள் - மொழிபெயர்ப்பு புரிந்து கொள்ளுதல்.

அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் (15 கேள்விகள்) திருக்குறள் தொடர்பான செய்திகள் (இருபது அதிகாரங்கள் மட்டும்) ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, ஊக்கமுடைமை, விருந்தோம்பல், அறன் வலியுறுத்தல், ஈகை, பெரியாரைத் துணைக்கோடல், வினை செயல்வகை, அவையஞ்சாமை, கண்ணோட்டம், அன்புடைமை, கல்வி, நடுநிலைமை, கூடா ஒழுக்கம், கல்லாமை, செங்கோன்மை, பண்புடைமை, நட்பாராய்தல், புறங்கூறாமை, அருளுடைமை மேற்கோள்கள் - அறநூல் தொடர்பான செய்திகள் (நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னாநாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, அவ்வையார் பாடல்கள்) - தமிழின் தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள் உ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள் - தேவநேய பாவாணர், அகரமுதலி பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு.போப், வீரமாமுனிவர் தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள் - தமிழ்ச் சான்றோர் பற்றிய செய்திகள்: பாவேந்தர், டி.கே.சிதம்பரனாதர், தவத்திரு குன்றக்குடி அடிகளார், கண்ணதாசன், காயிதே மில்லத், தாரா பாரதி, வேலுநாச்சியார், பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம், முடியரசன், தமிழ் ஒளி, உருத்திரங்கண்ணனார், கி.வா.ஜகந்நாதர், நாமக்கல் கவிஞர்.

குறிப்பு: அலகு VII-க்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு வரையிலான (upto SSLC Standard) பாடப் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது.

 

TNPSC Group 4 Syllabus PDF Download 2025

TNPSC Group 4 Updated Syllabus 2025

TNPSC Group 4 Exam Pattern 2025

TNPSC Group 4 Subjects 2025

TNPSC Group 4 2025 Syllabus Tamil

TNPSC Group 4 Syllabus in Tamil PDF 2025

TNPSC Group 4 Preparation Strategy 2025

TNPSC Group 4 2025 Syllabus Changes

TNPSC Group 4 VAO Syllabus 2025

 

Поиск
Категории
Больше
Без категории
"தமிழ் மொழியின் உலகப் பயணம்: A Journey Through World Tamil Conferences"
  "தமிழ் மொழியின் உலகப் பயணம்: A Journey Through World Tamil Conferences"...
От tnpsc 2025-05-26 14:45:40 0 4Кб
Без категории
2023 TNPSC Model Questions Free Download
August Month Free Files 06-08-2023 வழங்கப்பட்ட Model  Question Download Here 13-08-2023...
От tnpsc 2023-09-04 15:17:15 0 42Кб
Без категории
Aptitude Questions for TNPSC Exam
The Tamil Nadu Public Service Commission (TNPSC) exams include a section on Aptitude and Mental...
От tnpsc 2025-05-26 14:29:10 0 4Кб
TNPSC SYLLABUS
TNPSC Group 4 New Syllabus 2025
TNPSC Group 4 New Syllabus 2025 TNPSC GROUP 4 - புதிய பாடத்திட்டம் - (பொதுத்தமிழ்) அலகு 1:...
От tnpsc 2025-06-03 17:15:28 0 5Кб