தொகை நிலைத் தொடர்கள்
உருபுகள் மறைந்து வரும் தொடர்கள் தொகை நிலைத் தொடர்கள்
( வினை , உவமை , வேற்றுமை , ஏதேனும் ஒன்று மறைந்து வரும் )
எக : கயல்விழி – இதில் “போன்ற “ என்ற உவம உருபு மறைந்து உள்ளது
தொகை நிலை தொடர்கள் 6 வகைப்படும்
- வேற்றுமை தொகை
- வினைத்தொகை
- பண்புத்தொகை
- உவமைத்தொகை
- உம்மைத்தொகை
- அன்மொழி தொகை
பெயரின் பொருளை வேறுபடுத்தி காட்டும் உருபு – வேற்றுமை உருபு
வேற்றுமைகள் 8 வகைப்படும்
வேற்றுமை உருபுகள் – ஐ , ஆல் கு , இன் , அது , கண்
இரு சொற்களுக்கிடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது வேற்றுமை தொகை ஆகும்
பால் பருகினான் – பால் +ஐ +பருகினான் – 2 வது வேற்றுமை தொகை
தலை வணங்கினான் – தலை + ஆல் + வணங்கினான் – 3 வது வேற்றுமை தொகை
வேலன் மகன் – வேலன் + கு + மகன் – 4வது வேற்றுமை தொகை
ஊர் நீங்கினான் – ஊர் +இன் +நீங்கினான் -5 வது வேற்றுமை தொகை
செங்குட்டுவன் சட்டை – செங்குட்டுவன் + அது +சட்டை -6 வது வேற்றுமை தொகை
குகைப்புலி – குகை +தண் +புலி – 7 வது வேற்றுமை தொகை
இரு பெயரொட்டு பண்பு தொகை : சிறப்பு பெயர் + பொது பெயர்
“மல்லிகைப் பூ “
தொகா நிலைத் தொடர்
ஒரு தொடரில் இரு சொற்கள் அமைந்து இரண்டிற்கும் இடையில் சொல்வோ உருபோ மறையாது பொருளை உணர்த்துவது தொகா நிலைத் தொடர்
தொகா நிலைத் தொடர் 9
- எழுவாய் தொடர்
- விளித் தொடர்
- வினைமுற்று தொடர்
- பெயரெச்ச தொடர்
- வினையெச்ச தொடர்
- வேற்றுமை தொகா நிலை தொடர்
- இடைசொர்றொடர்
- உரிச்சொற்றொடர்
- அடுக்கு தொடர்
[sociallocker id=62]Download PDF Here[/sociallocker]