TNPSC TAMIL 8th STANDARD NEW SYLLABUS
Table of Contents
TNPSC TAMIL 8th STANDARD NEW SYLLABUS
15.07.2019 பொதுத்தமிழ் – எட்டாம் வகுப்பு (புதிய பாடத்திட்டம்)
* இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போருக்கு வித்திட்டவர் சி.சுப்பிரமணிய பாரதியார்.
*சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த்தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம்பாட வந்த மறவன்
என்றெல்லாம் புகழப்படுபவர் – பாரதியார் புகழ்ந்த வர் – பாரதிதாசன்
சொல்லும் பொருளும்
a) வைப்பு -நிலப்பகுதி
b) சூழ்க லி -சூழ்ந்துள்ள அறியாமை இருள்
c) தொல்லை-பழமை, துன்பம்
d) வண்மொழி – வளமிக்க மொழி
- சொல்லும் பொருளும்
a) மயக்கம் -கலவை
b) வழாஅமை – தவறாமை
c) தழாஅல் -தழுவுதல் (பயன்படுத்துதல்)
d) செய்யுள் -பாட்டு
e) விசும்பு-வானம்
தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்
தமிழில் நமக்கு கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் –
எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டது தொல்காப்பியம் –
தொல்காப்பியத்தின் ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது.
tamil eluthukkal
இளமைப் பெயர்கள்
1. புலி – பறழ்
2. சிங்கம் – குருளை
3. யானை – கன்று
4. கரடி – குட்டி
5. பசு ப – கன்று
ஒலி மரபு
புலி – உறுமும்
சிங்கம் – முழங்கும்
யானை – பிளிறும்
கரடி – கத்தும்
பசு – கதறும்
- தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.
*ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை என்பர்.
- தமிழ் எழுத்துகளின் பழையவரி வடிவங்களைக் கோவில்களிலுள்ள கருங்கல் சுவர்களிலும், செப்பேடுகளிலும் காணமுடிகிறது.
*கல்வெட்டுக்கல் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
- செப்பேடுகள் கி.பி.ஏழாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
- கல்வெட்டுக்கள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை வட்டெழுத்து, தமிழெழுத்து என இருவகையாகப் பிரிக்கலாம்.
- வட்டெழுத்து என்பது வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து ஆகும்.
- சேர மண்டலம், பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளில் எட்டாம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் வட்டெழுத்துக்களே இடம்பெற்றுள்ளன
TNPSC TAMIL 8th STANDARD NEW SYLLABUS
முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக்காலமான பதினொன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழெழுத்துக்கள் காணப்படுகின்றன.கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் கண்ணெழுத்துகள் என்று அழைக்கப்பட்டன.
*’கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொறி’ – இவ்வடிகள் இடம்பெறும் நூல் சிலப்பதிகாரம் பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர்.
*தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும் கலந்து எழுதப்பட்ட கல்வெட்டு அரச்சலூர் கல்வெட்டு. * ஓலைகளில் நேர்கோடுகளையும், புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால் வளைகோடுகளை அதிகமாகப் பயன்படுத்தினர்.
- எகர ஒகர குறில் எழுத்துக்களைக் குறிக்க எழுத்துக்களின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் தொல்காப்பியர் காலம் முதல் இருந்து வந்துள்ளது.
- தமிழ் எழுத்துக்களில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் வீரமாமுனிவர்,
- எகர ஒகர வரிசை எழுத்துக்களில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை களைந்தவர் வீரமாமுனிவர்
- இருபதாம் நூற்றாண்டில் தந்தை பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் செய்தார்.
- தமிழ் எழுத்துக்கள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற அச்சுக்கலை காரணமாக அமைந்தது.
*தமிழில் சொல் என்பதற்கு நெல் என்பது ஒரு பொருள்
- ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்பது தொல்காப்பியர் மொழி.
- நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒரு மொழி என்பார் தொல்காப்பியர்.
*காட்டுப் பசுவுக்கு ‘ஆமா’ என்று பெயர்
*முள்ளம்பன்றியின் பழம்பெயர் எய்ப்பன்றி
- அம்பை எய்பவர் எயினர், அவர்தம் மகளிர் எயினியர்.
- உரிய கடமை புரிபவன் – ஏவலன்
அம்பு விடும் கலை – ஏகலை
அம்பு விடுவதில் வல்லவன் – ஏகலைவன்
செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் இரா. இளங்குமரனார். இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம் ஆகிய நூல்களை எழுதியவர் இரா.இளங்குமரனார். திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும், பாவாணர் நூலகமும் அமைத்தவர் இரா.இளங்குமரனார்.
- மரபு பறவைகளின் ஒலிமரபு
ஆந்தை – அலறும்
காகம் – கரையும்
சேவல் – கூவும்
குயில் – கூவும்
புறா – குனுகும்
கோழி – கொக்கரிக்கும்
மயில் – அகவும்
கிளி – பேசும்
கூகை – குழறும்
வினை மரபு
சோறு – உண்
தண்ணீ ர் – குடி
முறுக்கு – தின்
சுவர்- எழுப்பு
பால் – பருகு
பூக் – கொய்
இலை – பறி
பானை – வனை
கூடை – முடை
தொகை மரபு
மக்கள் – கூட்டம்
ஆ – நிரை
ஆட்டு – மந்தை
- எழுத்துக்களின் பிறப்பினை இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு என இரண்டு வகையாகப் பிரிப்பர்.
- எழுத்துக்களின் இடப்பிறப்பு
உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
வல்லின மெய் எழுத்துக்கள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன
மெல்லின மெய் எழுத்துக்கள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
இடையின மெய் எழுத்துக்கள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது. - எழுத்துக்களின் முயற்சிப் பிறப்பு
உயிர் எழுத்துகள்அ, ஆ ஆகிய இரண்டும் வாய் திறத்தலாகிய முயற்சியால் பிறக்கின்றன.
இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்தும் வாய்திறக்கும் முயற்சியுடன் நாக்கின் அடி ஓரமானது மேல்வாய்ப் பல்லைப் பொருந்தும் முயற்சியால் பிறக்கின்றன.
உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய ஐந்தும் வாய்திறக்கும் முயற்சியுடன் இதழ்களைக் குவிப்பதால் பிறக்கின்றன. மெய் எழுத்துக்கள்
க், ங் – ஆகிய இருமெய்களும் நாவின் முதற்பகுதி, அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
ச், ஞ் – ஆகிய இருமெய்களும் நாவின் இடைப்பகுதி, நடு அண்ணத்தின் இடைப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
ட், ண் – ஆகிய இருமெய்களும் நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கின்றன. த், ந் – ஆகிய இருமெய்களும் மேல்வாய்ப்பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துவதால் பிறக்கின்றன.
ப், ம் – ஆகிய இருமெய்களும் மேல் இதழும் கீழ் இதபும் பொருந்துவதால் பிறக்கின்றன.
ய் – இது நாக்கின் அடிப்பகுதி, மேல் வாய் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கிறது.
ர், ழ் – ஆகிய இருமெய்களும் மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கின்றன.
ல் – இது மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கிறது.
ள் – இது மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துப் தடவுதலால் பிறக்கிறது.
வ் – இது மேல்வாய்ப்பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கிறது.
ற், ன் – ஆகிய இருமெய்களும் மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கின்றன.
*ஆய்த எழுத்து வாயைத் திறந்து ஒலிக்கும் முயற்சியால் பிறக்கிறது.
கலைச்சொல் அறிதல்
i) கல்வெட்டு -Epigraph
சித்திர எழுத்து -Pictograph
iii) மெய்யொலி – Consonant
iv) உயிரொலி -Vowel
- பொருள் அறிதல்
கெடிகலங்கி-மிக வருந்தி
சேகரம்-கூட்டம்
வின்னம்- சேதம்
வாகு -சரியாக
காலன்-எமன்
மெத்த-மிகவும்
சம்பிரமுடன்-முறையாக - செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் இரா. இளங்குமரனார். –
*பேச்சுத் தமிழில் அமைந்த கும்மிப் பாடல்கள் பஞ்சக்கும்மிகள் என்று அழைக்கப்பட்டன.
- காத்து நொண்டிச் சிந்து – நூலின் ஆசிரியர் வெங்கம்பூர் சாமிநாதன்.
*அமெரிக்காவில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர் சுகுவாமிஷ் பழங்குடியினர். அவர்களின் தலைவராக விளங்கியவர் சியாட்டல்
TNPSC TAMIL 8th STANDARD NEW SYLLABUS
*பக்தவத்சல பாரதி எழுதிய நூல் – தமிழகப் பழங்குடிகள்
*கூரன் – சருகுமான்
*வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் – உவமை அணி
சொல்லும் பொருளும்
1. உவசமம் -அடங்கி இருத்தல்
2. நிழல் இகழும் -ஒளிபொருந்திய
3. பேர்தற்கு -அகற்றுவதற்கு
4. தெளிவு -நற்காட்சி
5. பூணாய் -அணிகலன்களை அணிந்தவளே
6. ஓர்தல் -நல்லறிவு
7. கூற்றவா-பிரிவுகளாக
8. திறத்தன-தன்மையுடையன
9. பிறவார்-பிறக்கமாட்டார்
*பிறவித் துன்பங்கள் அகற்றும் மருந்துகள் நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் என்ற மூன்றாகும் என்கிறது நீலகேசி.
- நீலகேசி கூறும் நோயின் வகைகள் –
- ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ – என்பது பழமொழி. ‘உடலின் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம்’ – என்கிறார் கவிமணி தேசிய விநாயகம்
*ஆசியஜோதி, மருமக்கள்வழி மான்மியம், கதர் பிறந்த கதை, மலரும் மாலையும் ஆகிய நூல்களை படைத்தவர் – கவிமணி தேசிய விநாயகம்
*பரப்பிக்குளம், ஆனைமலைப் பகுதிகளில் காடர்கள் எனும் மிகச்சிறிய பழங்குடிச் சமுதாயத்தினர் உள்ளனர். அவர்கள் பேசும் மொழி – ஆல்அலப்பு
சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி – உவமை அணி,
- வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று – இல்பொருள் உவமையணி
- கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து – பிறிது மொழிதல் அணி
- வேர்பாடு, தழைபாடு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே என்றனர் சித்தர்கள்.
- கூற்று : தமிழர் மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை .
காரணம் : மருந்து என்பதே உணவின் நீட்சியாக இருக்கிறது.
*சுஜாதாவின் இயற்பெயர் – ரங்கராஜன்
*மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் சுஜாதாவின் பங்கு முக்கியமானது.
தலைமைச் செயலகம், என் இனிய எந்திரா, மீண்டும் ஜீனோ, ஸ்ரீரங்கத்துத் தேவதைகள், தூண்டில் கதைகள் உள்ளிட்ட நூல்களை எழுதியவர் – சுஜாதா
tamil ezhuthukal
TNPSC TAMIL 8th STANDARD NEW SYLLABUS
[sociallocker id=2244]
DOWNLOAD PDF HERE
[/sociallocker]