Search
Generic filters
Exact matches only

TNPSC Study Material History 16-05-2020 Download

0 2 years ago
tnpsc study material histoy

tnpsc study material histoy

TNPSC Study Material History 16-05-2020 Download

இன்று இரவு இதில் இருந்து  கேள்விகள் கேட்கப்படும் 

பௌத்த சமய மாநாடு

பௌத்த மாநாடு
தலைமைஅரசர்
முதலாம் (இராஜகிருகம்)மகாகசபர்அஜாதசத்ரு
இரண்டாம் (வைசாலி)சபாசமிகாகாலசோகன்
மூன்றாம் (பாடலிபுத்திரம்)மொக்காலி புத்ததிசாஅசோகர்
நான்காம் (குந்தல்வனம்)வசுமித்திரர்கனிஷ்கர்
  • முதல் பௌத்த சமய மாநாட்டில் புத்தரின் போதனைகளுக்கு வடிவம் தரப்பட்டது.
  • மூன்றாம் பௌத்த சமய மாநாட்டில் பௌத்த தத்துவ விளக்கங்களைக் கூறும் அபிதம்ம பீடகம் என்ற நூல் தொகுக்கப்பட்டது.
  • நான்காம் பௌத்த சமய மாநாட்டில் பௌத்த சமய நூல்களின் (பீடகங்கள்) விளக்க உரையான விபாஷங்கள் தொகுக்கப்பட்டன.
    இம்மாநாட்டில் பௌத்த சமயம் மகாயானம், ஹீனயானம் என்ற இரு பிரிவுகளாக பிரிந்தது.
ஹீனயானம்மகாயானம்
புத்தருக்கு உருவ வழிபாடு இல்லைபுத்தருக்கு உருவ வழிபாடு உண்டு
வீடுபேறு அடைவதற்காகத் துறவறம் சிறந்ததுஎன்கிறதுதுறவறத்தை வலியுறுத்த வில்லை
தன் முயற்சியிலேயே ஒருவன் மெய்யறிவு பெற வேண்டும் என்கிறதுபோதிசத்துவர்களின் துணையோடு தான் மெய்யறிவை அடைய முடியும் என்கிறது
பாலி மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதுசமஸ்கிருத மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது
ஆன்மா உண்டு என நம்பவில்லைஆன்மாவை நம்புகிறது
புத்தரின் கருத்துகளைப் பெரிதும் கடைபிடிக்கிறதுஇந்து சமயம் போன்று சடங்குகள் செல்வாக்கு மிகுந்து
காணப்படுகிறது

பின்னர் வஜ்ராயனம் என்ற பிரிவும் தோன்றியது. வஜ்ராயனம் என்றால் வைர வாகனம் என பொருள்படும். அது பௌத்தத்தில் மாந்திரீக யோகத்தை பரிந்துரைத்து திபெத், பூட்டான் போன்ற நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது.

 

இரண்டாம் சந்திரகுப்தர்

இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் தான் பாஹியான் என்ற பௌத்த அறிஞர் சீனாவிலிருந்து இந்தியா வந்தார். இவர் குப்தப் பேரரசின் வளம் குறித்து பதிவு செய்திருக்கிறார்.

வங்கத்தின் தாமிரலபதி கிழக்குக் கடற்கரையின் முக்கியமான வணிக மையம் என்று பாஹியான் குறிப்பிடுகிறார். இந்தியா – சீனா இடையிலான கடல் பயணத்தில் எதிர் கொள்ள நேரும் இடர்கள் குறித்தும் பாஹியான் குறிப்பிடுகிறார்.

 

திராவிடம் பாணியிலான கலைகள்

குப்தர் காலத்தில் நகரம், திராவிடம் பாணியிலான கலைகள் வளர்ந்தன. இந்தியக் கட்டடக் கலை வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க, படைப்பாக்கம் கொண்ட காலமாகும். பிறகாலத்தில் கலைகள் தோன்றுவதற்கான ஊற்றுக் கண்கள் இக்காலத்தில் தோன்றின.

மிகவும் குறிப்பிடத்தக்க குடைவரைக் கோயில்கள் அஜந்தா, எல்லோரா (மஹராஷ்டிரம்) மற்றும் பாக் (மத்தியப் பிரதேசம்) ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. உதயகிரி குகைளும் (ஒடிசா)
இவ்வகையைச் சேர்ந்தவை தான்.

அமிர் குஸ்ரு

பாரசீக உரைநடையிலும் கவிதையிலும் ஒரு முக்கியமான நபராக விளங்குபவர் அமிர் குஸ்ரு. தமது ஒன்பது வானங்கள் (Nu Siphr) நூலில் தம்மை ஓர் இந்தியன் என்று அழைத்துக் கொள்வதில் அவர் பெருமிதம் கொள்கிறார். இந்நூலில் அவர் இந்தியாவின் வானிலையை, அதன் மொழிகளை குறிப்பாக சமஸ்கிருதத்தை அதன் கலைகளை, அதன் இசையை, அதன் மக்களை,
அதன் விலங்குகளையும் கூடப் போற்றுகிறார்.

ஜிஸியா வரி

இந்தியாவில் முதன் முறையாக இஸ்லாமியர் அல்லாதவர் மீது ஜிஸியா வரியை விதித்தவர் குத்புதீன் ஐபக். முகலாய அரசர் அக்பர், பதினாறாம் நூற்றாண்டில் ஜிஸியாவை ஒழித்தார் என்றாலும், பதினேழாம் நூற்றாண்டில் ஒளரங்கசீப் அவ்வரியை மீண்டும் அறிமுகப்படுத்தினார்.

கற்காலப் பண்பாடும் ஹரப்பா நாகரிகமும்

காஷ்மீர் பகுதியில் நிலவிய புதிய கற்காலப் பண்பாடும் ஹரப்பா நாகரிகமும் ஒரே சமகாலத்தவையாகும். இக்காலக்கட்டத்தைச் சேர்ந்த முக்கியமான ஆய்விடமான பர்சாஹோம் பெருங்கற்காலத்துக்கும் தொடக்க வரலாற்றுக் ‘காலத்துக்கும் சான்றாக உள்ளது.

இங்கு மக்கள் குளிரிலிருந்துகாத்துக் கொள்ள ஏறத்தாழ 4 அடி ஆழம் கொண்ட குழி வீடுகளில் வசித்தார்கள். முட்டை வடிவம் கொண்ட இவ்வீடுகள் அடிப்பகுதியில் அகலமாகவும் மேல்பகுதியில் குறுகியதாகவும் இருந்தன. இவற்றுக்கு அருகே ஒரு வேயப்பட்ட கட்டுமானத்துக்கான தூண்களை ஊன்றுவதற்கான குழிகளைக் காண முடிகிறது.

புதிய கற்காலத்தில் காஷ்மீரில் வளர்ப்பு விலங்குகளாகச் செம்மறியும் வெள்ளாடும் இருந்தன. தாவரங்களைப் பயிரிட்டார்கள். பர்சாஹோமைச் சேர்ந்த புதிய கற்கால மக்கள் ஹரப்பா மக்களோடு வணிகத்தில் ஈடுபட்டார்கள். கையால் வனைந்த மட்பாண்டங்களையும் எலும்பிலான கருவிகளையும் பயன்படுத்தினார்கள்.

கற்கோடாரி, உளி, வாய்ச்சி (மரம் செதுக்கும் கருவி), உலக்கை, மத்து போன்ற கருவிகள் மக்களிடம் இருந்தன. குளிரைத் தாக்குபிடிப்பதற்காகத் துணியில் விலங்குகளின் தோலைச் சேர்த்துத் தைப்பதற்குக் குத்தூசிகள் பயன்படுத்தப்பட்டன. தோல்களைக் கொண்டு வேலை செய்ய செதுக்குவதற்கான அல்லது சீவுவதற்கான கருவியை மக்கள் பயன்படுத்தினர்.

ஆர்யபட்டர் கணிப்பு

சூரிய சித்தாந்தா என்ற நூலில் ஆரியபட்டர் சூரிய கிரகணங்களின் உண்மையான காரணங்களை ஆராய்ந்தார். பூமியின் சுற்றளவு கணக்கீட்டில் ஆர்யபட்டர் கணிப்பு நவீன மதிப்பீட்டிற்கு மிக நெருக்கமாக உள்ளது.

வராகமிகிரரின் (ஆறாம் நூற்றாண்டு) பிருஹத் சம்ஹிதா என்ற நூல் வானவியல், புவியியல், தாவரவியல், இயற்கை வரலாறு ஆகியவற்றிற்கான கலைகளஞ்சியமாகும். பஞ்ச சித்தாந்திகா, பிருஹத் ஜாதகா ஆகியவை இவரது மற்ற படைப்புகளாகும். பிரம்மகுப்தர் கணிதம் மற்றும் வானவியலுக்கான முக்கிய நூல்களான பிரும்மஸ்புத – சித்தாந்தா, கண்டகாத்யகா ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

மருந்துகள் தயாரிப்பதற்கு உலோகங்களைப் பயன்படுத்துதல், பாதரசம் மற்றும் இரும்பு ஆகியவற்றின் பயன்பாடு குறித்து வராஹி மிகிரரும் பிறரும் எழுதியிருப்பதைப் பார்க்கும் போது குப்தர் ஆட்சிக் காலகட்டத்தில் வேதியியலில் பெரும் முன்னேற்றம் நிகழ்ந்திருப்பது தெரிகிறது.

நவனிதகம் என்ற மருத்துவ நூல் நோய்களுக்கான மருந்துகள், மருந்துகள் தயாரிக்கும் முறை ஆகியவற்றைக் கூறுகிறது. பாலகாப்யா எழுதிய ஹஸ்த்யாயுர்வேதா என்ற நூல் விலங்குகளுக்கான மருத்துவ நூலாகும். இது குப்தர் காலத்தில் மருத்துவ அறிவியல் எந்த அளவிற்கு வளர்ந்து இருந்தது என்பதைக் காட்டுகிறது.

முதலாம் சந்திரகுப்தர்

பொ.ஆ 335 இல் முதலாம் சந்திரகுப்தர் தனது புதல்வர் சமுத்திரகுப்தரைத் தனது வாரிசாக நியமித்தார். சமுத்திரகுப்தர் அறிஞர்களையும், ஹாசேனர் போன்ற கவிஞர்களையும் ஆதரித்தார். இதன் மூலம் சமஸ்கிருத இலக்கியத்தை வளர்ப்பதில் பங்காற்றினார். வைணவத்தை அவர் தீவிரமாக பின்பற்றினார் என்றாலும் வசுபந்து என்ற மாபெரும் பௌத்த அறிஞரையும் ஆதரித்தார். கவிதை, இசைப்பிரியரான இவருக்குக் கவிராஜா என்ற பட்டம் வழங்கப்பட்டது. குப்தர் நாணயங்களில் அவர் வீணை வாசிப்பது போன்ற
சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

குப்தர் காலத்தின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்கள்

தொடக்க கால பௌத்த இலக்கியங்கள் மக்கள் மொழியான பாலி மொழியில் இருந்தன. பின்னர் சமஸ்கிருதக் கலப்புடன் கவிதையும் வசனமுமாக மீண்டும் எழுதப்பட்டன. ஆர்ய தேவர், அர்ய அசங்கர் ஆகியோர் குப்தர் காலத்தின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்கள் ஆவர். தர்க்க அறிவியல் சார்ந்த முதலாவது முழுமையான பௌத்த நூல் வசுபந்துவால் இக்காலக்கட்டத்தில் எழுதப்பட்டது. வசுபந்துவின் சீடரான திக்நாதரும் பல அரிய நூல்களை எழுதினார்.

ஹரப்பா   மக்களின் வேளாண்மை

ஹரப்பா மக்கள் நிலையாக வாழ்வதற்கு வேளாண்மை முக்கிய ஆதாரமாக விளங்கியது. கோதுமை, பார்லி, அவரை வகைகள், கொண்டைக் கடலை, எள், வெவ்வேறு தினை வகைகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களைப் பயிரிட்டார்கள். வேளாண்மையில் கிடைத்த உபரி வருவாய் முக்கியமான பல செயல்பாடுகளுக்கு ஆதாரமாக விளங்கியது. ஹரப்பா மக்கள் இரட்டைப்பயிரிடல் முறையைப் பின்பற்றினார்கள்.

ஹரப்பா மக்கள் உழவுக்கு கலப்பையைப் பயன்படுத்தினார்கள். நிலத்தை உழுது, விதைக்கும் வழக்கத்தை அவர்கள் கொண்டிருந்திருக்கலாம். உழுத நிலங்களைக் காலிபங்கனில் காண முடிகிறது. அவர்கள் பாசனத்துக்குக்
கால்வாய்களையும் கிணறுகளையும் பயன்படுத்தினார்கள்.

TNPSC Group 1 Online Test 15-05-2020 Free

 

DOWNLOAD OUR ANDROID APP

TNPSC Study Material History 16-05-2020 Download 1

Leave a Reply