TNPSC MODEL QUESTION - GROUP I GROUP II GROUP IV 27-04-2020

TNPSC MODEL QUESTION – GROUP I GROUP II GROUP IV 27-04-2020

TNPSC MODEL QUESTION – GROUP I GROUP II GROUP IV

21. பின்வரும் கூற்றுகளுள் சரியான விடையை தேர்ந்தெடுக்க -(Indus Valley Civilization)
1. சித்திர எழுத்துக்கள் இடமிருந்து வலமாக எழுதப்பட்டவை.
2. சித்திர எழுத்துக்கள் வலமிருந்து இடமாக எழுதப்பட்டவை.
3. சித்திர எழுத்துக்கள் மேலிருந்து கீழாக எழுதப்பட்டவை.
4. சித்திர எழுத்துக்கள் கீழிலிருந்து மேலாக எழுதப்பட்டவை.
A) 1-ம், 3-ம் சரி
B) 1-ம், 2-ம் சரி
C) 1-ம், 4-ம் சரி
D) 3-ம், 4-ம் சரி

 

22. 2019-ம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு டாக்டர் அபிஜித் பானர்ஜி மற்றும் இருவருக்கு அவர்களது எந்த தேர்வாய்வு அணுகுமுறையின் பொருட்டு வழங்கப்பட்டது -(Current Events)
A) கறுப்பு பண ஒழிப்பு
B) பன்னாட்டு பண நிதியத்தை வலுப்பெற செய்தல்
C) வேலை செய்யும் இடங்களில் பாலின பாகுபாட்டை ஒழித்தல்
D) உலகளாவிய வறுமையை மட்டுப்படுத்துதல்

 

23. வீராய்டுகளை வைரஸ்களிலிருந்து வேறுபடுத்தும் பண்பு -(Life Science)
A) புரத உறையை உடைய RNA மூலக்கூறுகள்
B) பரத உறையற்ற RNA மூலக்கூறுகள்
C) புரத உறையை உடைய DNA மூலக்கூறுகள்
D) புரத உறையற்ற DNA மூலக்கூறுகள்

 

24. 1908 முதல் ஒரு பைசாத் தமிழன் (பின்னர் தமிழன்) என்ற பெயரில் வாராந்திரப் பத்திரிகை ஒன்றை தொடங்கி தான் இயற்கை எய்தும் காலம் வரை அந்தப் பத்திரிகையை நடத்தியவர் -(Socio. Pol. Mov in TN)
A) ஆப்ரஹாம் பண்டிதர்
B) சிங்கார வேலர்
C) இலட்சமி நரசு ரெட்டி
D) அயோத்திதாச பண்டிதர்

 

25. இளவரசர் குஸ்ருவுடன் இணைந்து கலத்தை தூண்டி விட்டதற்காக ஜஹாங்கீரால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர். ……………. ஆவார் -(Mughals)
A) குரு அர்ஜீன் தேவ்
B) குரு ஹர் கோபிந்த்
C) குரு தேஜ்பகதூர்
D ) குரு ஹர் ராய்

 

26. கப்பலின் ஒட்டகம் எனச் சொல்லப்படும் தொழில்நுட்பத்தை உலகத்திலேயே கண்டறிந்த முதல் அரசர் -(Mughals)
A) அக்பர்
B) ஷாஜகான்
C) ஷெர்சா
D) பாபர்

 

27. சிந்துவெளி நாகரீகம் பரவியிருந்த இடங்களை தற்போது அமைந்திருக்கும் அதன் இடங்களோடு பொருத்துக -(Indus valley Civilization)

சிந்து வெளி நாகரீகம்மாநிலம்
i. ரூபார்1. பஞ்சாப்
ii.சாகுந்தாரோ 2. இராஜஸ்தான்
iii. பனவாலி3. ஹரியானா
iv. தோல்வீரா4. குஜராத்

A) i-(2), ii-(3), iii-(1), iv-(4)

B) i-(4), ii-(2), iii-(3), iv-(1)

C) i-(1), ii-(3), iii-(2), iv-(4)

D) i-(1), ii-(2), iii-(3), iv-(4)

 

28. பொய்மையும் வாய்மை யிடத்த………………..
புறந்தூய்மை நீராமையு மகந்தூய்னா …………….
இவ்விரண்டு குறள்களையும் ஒரு சேர மனதில் கொண்டு கீழ்க்கண்ட எந்த விளைவு மிகுந்த முக்கியத்துவம் உள்ளதாக கருதுவீர்? -(Thirukkural)
A) பொய்மை
B) வாய்மை
C) புறந்தூய்மை
D) புரைதீர்ந்த நன்மை

 

29. வெப்பமான கோடை காலத்தில் சாதாரண நீரில் குளித்த பின்னர் நமது உடலின் -(Heat)
A) அக ஆற்றல் குறையும்
B) அக ஆற்றல் அதிகரிக்கும்
C) வெப்பம் குறையும்
D) அக ஆற்றல் மற்றும் வெப்பத்தில் மாற்றம் நிகழாது

 

30. கெஜர்லியின் கருப்பு செவ்வாயோடு தொடர்புடைய இராஜஸ்தான் பெண்மணி ~(C.C S. C. H of India)
A) ஸ்ரேயா ரவுல்
B) நீலம் சஞ்சிதா
C) அம்ரிதா தேவி
D) ஷப்ன ம் கவுர்

TNPSC MOCK TEST

[sociallocker id=5075]

21. B) 1-ம், 2-ம் சரி
விளக்கம்:
சிந்துவெளி முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ள சித்திர எழுத்துக்கள் சிந்துவெளி மக்களின் மொழிக்குரிய எழுத்துக்களாகும்.
இந்த எழுத்துக்கள் இடமிருந்து வலமாக ஒரு வரியும் வலமிருந்து இடமாக மற்றொரு வரியாகவும் எழுதப்பட்டுள்ளன.
தமிழகத்தின் கீழ்வாலை, குளிர்சுனை, புறக்கல், ஆலம்பாடி, செத்தவாரை, நேகனூர்பட்டி ஆகிய இடங்களில் காணப்படும் எழுத்துக்கள், சிந்துவெளியிலுள்ள எழுத்துக்களோடு தொடர்புடைய தொல் தமிழ் எழுத்துக்களாகும்.
வடபிராமி எழுத்துக்களும், தென்பிராமி எழுத்துக்களும் சிந்துவெளி எழுத்துக்களிலிருந்து வளர்ச்சி பெற்றவையாகும்.
சிந்துவெளி நாகரீக மக்களின் பேச்சு மொழி, எழுத்துக்கள் தொடர்பாக இன்னும் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிந்துவெளி எழுத்துக்களுக்கும், திராவிட எழுத்துக்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்று ஹீராஸ் பாதிரியார், ஐராவதம் மகாதேவன், பாலகிருஷ்ணன் போன்ற வரலாற்றாய்வாளர்கள் நிருபித்துள்ளனர்.

22. D) உலகளாவிய வறுமையை மட்டுப்படுத்துதல்

விளக்கம்:
2015 ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் துறை பரிசு பெற்றவர்கள்

இயற்பியல்
ஜேம்ஸ் பீபிள்ஸ் – அண்டவியல்
இயற்பியலில் கோட்பாடு சார்ந்த கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்பட்டது மைக்கேல் மேயர் மற்றும் டிடியர் குலோஸ் – ஒரு சூரியனைப் போன்ற நட்சத்திரத்தை சுற்றி வரும் ஒரு அண்ட வெளி கிரகத்தை கண்டறிந்தற்காக வழங்கப்பட்டது

வேதியியல்

ஜான் பி குடெனோஃப், எம் ஸ்டான்லி
லிட்டிங்ஹோம் மற்றும் அகிரா யோஷினோ – லித்தியம் அயன் பேட்டரிகளை மேம்படுத்தியதற்காக வழங்கப்பட்டது
தரம்
இலக்கியம்

பீட்டர் ஹேண்ட்கே – சமுதாயத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இவரின் படைப்பானது வாசிப்பவருக்கு புதிய அனுபவத்தை உருவாக்கும்

அமைதி
அபி அகமது அலி – அண்டை நாடான எரித்திரியாவுடனான எல்லை மோதலைத் தீர்ப்பதற்கான அவரது முயற்சிகளுக்காக வழங்கப்பட்டது

பொருளாதாரம்

அபிஜித் பானார்ஜி, எஸ்தர் பப்லோ மற்றும் மைக்கேல் கிரெமர் – உலகளாவிய அளவில் வறுமையை ஒழிப்பதற்கான சோதனை அணுகுமுறைக்காக வழங்கப்பட்டது

மருத்துவம்

வில்லியம் ஜி கெலின் ஜீனியர், சர் பீட்டர் ஜே ராட்கிளிஃப் மற்றும் கிரெக் எல் செமன்சா – செல்கள் ஆக்ஸிஜன் இருப்பை எவ்வாறு உணர்கின்றன என்பதை கண்டறிந்தற்காக வழங்கப்பட்டது

23. B) புரத உறையற்ற RNA மூலக்கூறுகள்
விளக்கம்:
வைரஸ் மரபுபொருளாக RNA அல்லது DNAயைக் கொண்டிருக்கும். எப்பொழுதும் இரண்டையும் கொண்டிருக்காது.
இந்தப் மரபுப்பொருள் கேப்சிட் எனப்படும் புரத உறையினால் சூழப்பட்டுள்ளது.
வைரியான்கள் என்பது தனித்த RNA கொண்ட புரத உறை அற்ற அமைப்பாகும்.
வைரியான்களின் RNA குறைந்த மூலக்கூறு எடை கொண்டது.

24. D) அயோத்திதாச பண்டிதர்
விளக்கம்:
அயோத்திதாச பண்டிதர் சாதி எதிரானக் கொடுமைகளில் குரல் கொடுத்தவர்களில் முதன்மையானவர்.
இவர் தமிழறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார்.
திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் இவரும் ஒருவராவார்.
1891 திராவிட மகாஜன சபையை உருவாக்கினார்.
சென்னையில் சாக்கிய பௌத்த சொசைட்டியை தோற்றுவித்து தென்னிந்தியா முழுவதும் அதன் கிளைகளை ஏற்படுத்தினார்.
அயோத்திதாசர் சுமார் 25க்கு மேற்ப்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இவர் தொடங்கிய இதழ்கள்
01. திராவிடப் பாண்டியன் (1885) ரெவரென்ட் ஜான் ரத்தினத்துடன் இணைந்து
02. ஒரு பைசாத் தமிழன் (தமிழன் (1907 – 1914)

25. A) குரு அர்ஜீன் தேவ்
விளக்கம்:
அக்பருக்குப் பின் அவருடைய மகன் சலீம், நூருதீன் ஜஹாங்கீர் என்ற பட்டப் பெயருடன் அரியணை ஏறினார்.
இவர் அரசரானதை எதிர்த்து இவருடைய மூத்த மகன் இளவரசர் குஸ்ரு சீக்கிய குரு அர்ஜீன் தேவின் ஆதரவோடு கலகத்தில் இறங்கினார்.
கலகம் ஒடுக்கப்பட்டு இளவரசர் குஸ்ரு கைது செய்யப்பட்டு விழிகள் அகற்றப்பட்டன.
கலகத்தை தூண்டியதாக குரு அர்ஜீன் தேவ் கொல்லப்பட்டார்.

26. A) அக்பர்
விளக்கம்:
கப்பலின் ஒட்டகம் எனச் சொல்லப்படும் தொழில் நுட்பத்தை உலகத்திலேயே கண்டறிந்த முதல் மனிதர் என அக்பர் புகழப்படுகின்றார்.
இத்தொழில் நுட்பத்தின்படி ஒரு பெரிய படகின் மீதே கப்பல் கட்டப்படும்.
அவ்வாறு கட்டப்படுவது அக்கப்பல்களைக் கடலுக்குள் கொண்டு செல்வதை எளிதாக்கியது.

27. D) i-(1), ii-(2), iii-(3), iv-(4)
விளக்கம்:
சிந்து வெளி நாகரீகம் பரவியிருந்த இடங்கள்.

சிந்து நாகரீகம்பரவியிருந்த இடங்கள்
ஹரப்பாராவி நதியோரம் மேற்கு வங்காளம்
(தற்போதைய பாகிஸ்தான்)
மொகஞ்சதாரோசிந்தி நதியோரம் மேற்கு பஞ்சாப்
(தற்போதைய பாகிஸ்தான்)
ரூபார்சட்லஜ் நதியோரம், பஞ்சாப்
லோத்தல் சட்லஜ் நதியோரம், குஜராத்
காலிபங்கன்காகர் நதி தென் கரையோரம்,
இராஜஸ்தான்
சாகுந்தாரோ சரஸ்வதி
நதியோரம்,
இராஜஸ்தான்
தோல்வீராகபீர் மாவட்டம், குஜராத்
கோட்டிஜி சிந்து மாகாணம்
பனவாலிஹரியானா
சுர்கோட்டாகுஜராத்

28. B) வாய்மை
விளக்கம்:
உண்மை என்பது அடுத்தவருக்கு துன்பம் தராமல் இருப்பது.
தனக்கு தானே உண்மையாக இல்லாவிடின் நமக்கு நாமே எதிரியாக இருப்போம்.
வெளிச்சம் போன்ற தீர்ககமான முடிவை பெற நினைக்கும் சான்றோர் பொய்யாமையை போற்ற வேண்டும்.
உண்மையை விட உலகில் சிறந்தது உலகில் இல்லை .

29. A) அக ஆற்றல் குறையும்

30. C) அம்ரிதா தேவி
விளக்கம்:
அம்ரிதா தேவி என்ற வீர மங்கை இராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டம், கெஜர்லி கிராமத்தை சார்ந்தவர்.
இவர் பிஷ்னாய் தர்மத்தை காப்பதற்காக தன்னுடைய வாழ்வை தியாகம் செய்தவர்.
1730 இல் ராஜஸ்தானின் மர்வார் பகுதியை ஆண்ட அபய் சிங் (Abay Singh) என்ற மன்னர், தன்னுடைய புதிய அரண்மனையை கட்டுவதற்குத் தேவையான சுண்ணாம்பு கற்களை எரிக்க பச்சை கெஜ்ரி (Khejri) (புரோஸோபிஸ் சினரேரியா) மரங்களை வெட்ட வேண்டியிருந்தது. பிஷ்னாய் கிராமத்திலும், தார் பாலைவனத்தின் மத்திய பகுதியிலம் பல பசுமையான மரங்கள் இருந்ததால் மன்னர் கெஜ்ரி மரங்களிலிருந்து மரக்கட்டைகளை கொண்டு வர உத்திரவிட்டார். மன்னரின் படையினரால் மரங்கள் வெட்டப்படுவதை அறிந்த அம்ரிதா தேவியும் மற்றும் பலரும் மரங்கள் வெட்டப்படுவதிலிருந்து காக்க கெஜ்ரி மரங்களை கட்டியணைத்துக் கொண்டனர்.
ஆனால் மன்னரின் படையினர் 363 பிற பிஷ்னாய்களுடன் சேர்த்து அம்ரிதா தேவியுைம் கொன்றனர்.
இது செவ்வாய் அன்று நடந்ததால், அந்த நாள் கெஜ்ரிலியின் கருப்பு செவ்வாய் ஆனது.
மரங்களை பாதுகாப்பதற்காக நடந்த இந்நிகழ்வு இந்திய வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.

 

DOWNLOAD PDF HERE

 

[/sociallocker]

TNPSC GROUP I GROUP II GROUP IV MODEL QUESTION

 

DOWNLOAD OUR ANDROID APP

TNPSC MODEL QUESTION - GROUP I GROUP II GROUP IV 27-04-2020 1

Leave a Reply