Search
Generic filters
Exact matches only

TNPSC MODEL QUESTION – GROUP I GROUP II GROUP IV 28 DOWNLOAD

0 3 years ago
TNPSC MODEL QUESTION GROUP I GROU II GROUP IV

TNPSC MODEL QUESTION – GROUP I GROUP II GROUP IV

TNPSC MODEL QUESTION

31. சரியாகப் பொருந்தியுள்ளவனவற்றைத் தேர்ந்தெடுக்க -(Race)
A) அஸ்ஸாம் – மங்கோலிய இனம்
B) மராட்டியம் பகுதி – ஆரிய திராவிட இனம்
C) வங்கதேசம் – இரானிய இனம்
D) காஷ்மீர் – துருக்கிய இனம்

 

32. எந்த இரு பகுதிகளிடையே இடைப்படு நாடாகப் புதுக்கோட்டை இருந்தது -(Location)
A) சோழ மற்றும் விஜயநகர அரசுகள்
B) சோழ மற்றும் பாண்டிய அரசுகள்
C) சேர மற்றும் பாண்டிய அரசுகள்
D) சோழ மற்றும் சேர அரசுகள்

 

33. கீழ்க்காணும் கூற்றுகளை வாசித்து சரியான கூற்றை வெளிக் கொணர்க -(Hist. of Tamil Soc.)
i) எட்டுத் தொகை, பத்துப்பாட்டு ஏறத்தாழ 2400 பாடல்கள் கொண்ட கருவூலமாகும்
ii)சங்கம் மருவிய காலத்தை சேர்ந்த, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அவை பெரும்பாலும் நீதி பற்றியும் ஒழுக்க நெறிமுறைகளைப் பற்றியும் பேசுவனவாகும்.
iii) முதன்மை காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் பண்பாடு மற்றும் மத வரலாற்றுக்கு சிறந்த சான்றுகளாக பயன்படுபவை
iv) சமூக உருவாக்கத்தை நாம் புரிந்து கொள்ள சங்க இலக்கியங்கள் பெரிதும் துணை புரிகின்றன
A) i, ii, ii &iv
B) ii &iv
C) iii & iv
D) i, iii &iv

TNPSC MODEL QUESTION

 

34. ‘பண்பாடு’ என்ற சொல்லைத் தமிழில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் ……………… ~(Custom)
A) இளங்கோவடிகள்
B) டி.கே.சிதம்பரநாதனார்
C) தொல்காப்பியர்
D) வ.உ.சிதம்பரனார்

 

35. 1857 ஆம் ஆண்டு புரட்சியின் போது நானா சாகேப்பின் படைகளைத் தோற்கடித்தவர்………… -(Early Uprising against British rule)
A) ஹென்றி லாரன்ஸ்
B) மேஜர் ஜெனரல் ஹோவ்லாக்
C) சர் ஹீயூக் வீலர்
D) ஜெனரல் நீல்

TNPSC MODEL QUESTION

 

36. குப்தர் காலம் குறித்த கீழ்க்கண்ட சான்றுகளில் எது நம்ப முடியாதது என்று நீங்கள் கருதுகிறீர்கள் -(Guptas)
A) இலக்கியச் சான்றுகள்
B) கல்வெட்டு சான்றுகள்
C) நாணயச் சான்றுகள்
D) கதைகள், புராணங்கள்

 

37. சொல்லுக சொல்லைப் பிறிதோர் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்னம அறிந்து’-(Thirukkural)
“அச்சொல்லை” என திருவள்ளுவர் உரைப்பது எதை
A) நீங்கள் பயன்படுத்திய பொருளில் வேறொரு சொல்.
B) சொல்லுக்கு மாற்றாக வேறு சொல்
C) நீங்கள் பயன்படுதிய சொல்லுக்கு வேற்றுமொழிச்சொல்
D) மற்றவர்களால் வெல்ல முடியாத உங்களுடைய சொல்

 

38. பின்வரும் கூற்றையும் அதன் காரணத்தையும் படித்து, விடைக்குறிப்பைத் தேர்ந்தெடுக்க.
கூற்று-1 : பீட பூமிகள் என்பவை மழை குறைந்த உயர்நிலங்களாகும்.
கூற்று-2 : கனிம வளங்களும் சில வேளாண்பொருட்களும் இப்பகுதியில் விளைகின்ற ன. -(Physical features)
A) கூற்று-1 சரி, கூற்று-2 தவறு
B) கூற்று-1 தவறு, கூற்று-2 சரி
C) கூற்று-1, கூற்று-2 இரண்டும் சரி
D) கூற்று-1, கூற்று-2 இரண்டும் தவறு

 

39. சிந்து சமவெளிநாகரிகத்தின்ஹரப்பாபண்பாட்டில் நாட்டியப் பெண் உருவ பொம்மையானது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த உலோகத்தால் செய்யப்பட்டது? -(Indus Valley Civil.)
A) வெண்கலம்
B) பித்தளை
C) பொன்
D) இரும்பு

 

40. கணிதத்தில் புலமை பெற்றவராகவும், சிறந்த கவிஞராகவும் எழுத்தாளராகவும் விளங்கிய பாமினி அரசர்? -(Bamini)
A) முகமது கவான்
B) முதலாம் முகமது
C) பாமன்ஷா
D) மூன்றாம் முகமது

TNPSC MODEL QUESTION

 

MODEL QUESTION ANSWERS AND EXPLANATION

[sociallocker id=5075]

TNPSC MODEL QUESTION GROUP I GROU II GROUP IV

31. A) அஸ்ஸாம் – மங்கோலிய இனம்
விளக்கம்:

இந்திய இனங்கள் * காஷ்மீர், பஞ்சாப், இராஜபுதனம் ஆகிய பகுதியில் உள்ளவை. இந்தோ – ஆரிய இனம். தமிழகம், ஆந்திரம், மைய மாநிலங்கள், சோட்டா நாக்பூர் பகுதிகளிலும் வாழும் திராவிட இனம். 1 அஸ்ஸாம் நேபாள எல்லையில் வாழும் மங்கோலிய இனம். | * ஐக்கிய மாநிலங்கள், பீகார் பகுதிகளில் வாழும்
ஆரிய – திராவிட இனம். * வங்காளம், ஒட்டரதேசம் (ஒடிசா) பகுதியில் வாழும் மங்கோல் – திராவிட இனம். மராட்டிய பகுதியில் வாழும் மக்கள் சிந்திய – வடமேற்கு எல்லைபுறத்தில் வாழும் துருக்கிய – இரானிய இனம்.

TNPSC MODEL QUESTION

32. B) சோழ அரசு மற்றும் பாண்டிய அரசு
விளக்கம்:

புதுக்கோட்டை ‘ஒரு சிறிய சிற்றரசாக மதுரை மற்றும் தஞ்சாவூர் நாயக்க அரசுகளின்
இடையில் அமைந்திருந்தது. முந்தைய காலத்தில் சோழ பாண்டிய அரசுகளுக்கிடையே இடைப்படு நாடாக இருந்துள்ளது. இராமநாதபுரம் பகுதி வாழ் மக்களைப் போலவே புதுக்கோட்டை பகுதி வாழ் மக்களும் போர் புரியும் மரபை சார்ந்தவர்களாவர். இதன் காரணமாகவே தொண்டைமான்களின் தலைமையில் இப்பகுதி ஒரு சிற்றரசு என்னும் மதிப்பை பெற்றது. இத்தொண்டைமான்கள் சேதுபதி, மதுரை, தஞ்சை நாயக்க அரசர்களின் அரண்மனையில் முக்கியப் பணிகளில் பணியாற்றினர்.

 

33. A) i, ii, ii &iv

 

34. B) டி.கே.சிதம்பரநாதனார்
விளக்கம்:

பண்படு என்னும் வேர்ச்சொல்லிருந்து தோன்றியதே பண்பாடு ஆகும். பண்படு என்பதற்குச் சீர்படுத்துதல், செம்மைப்படுத்துதல் என்பது பொருள். பண்பாடு என்ற சொல்லைத் தமிழில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்
டி.கே.சிதம்பரநாதனார்.

 

35. B) மேஜர் ஜெனரல் ஹோவ்லாக்
விளக்கம்:

1857 பெருங்கிளர்ச்சியின் போது கான்பூரில் நானா சாகிப் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கினார். பெண்களும் குழந்தைகளும் உட்பட சுமார் 125 ஆங்கிலேயர்களும் ஆங்கில அதிகாரிகளும் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் ஒரு கிணற்றுக்குள் வீசப்பட்டன. கான்பூர் படுகொலை என்றறியப்பட்ட இந்நிகழ்வு ஆங்கிலேயரைக் கோபம் கொள்ளச் செய்தது. நிலைமைகளை எதிர்கொள்ள அனுப்பப்பட்ட தளபதி ஹென்றி ஹேவ்லக் படுகொலைக்கு மறுநாளே நானா சாகிப்பைத் தோற்கடித்தார். ஆங்கில இராணுவ அதிகாரி நீல் கொடூரமான பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார். படுகொலைக்கு காரணமானவர்கள் எனக் கருதப்பட்டோர் அனைவரும் கொல்லப்பட்டனர். நவம்பர் மாத இறுதியில் தாந்தியா தோபே கான்பூரைக் கைபற்றினார். ஆனால் இது விரைவில் காம்ப்பெல் என்பவரால் மீட்கப்பட்டது.

TNPSC MODEL QUESTION

36. D) கதைகள், புராணங்கள்
விளக்கம்:

குப்தர் காலத்து வரலாற்றை மீள் உருவாக்கம் செய்ய 3 வகையான சான்றுகள் உள்ளன.

1. இலக்கிய சான்றுகள் – புத்த, சமண இலக்கியங்கள் = காளிதாசர் படைப்புகள் = பாஹியான் குறிப்புகள்

2. கல்வெட்டுச் சான்றுகள் = மெஹ்ரோலி இரும்புத் தூண் கல்வெட்டு = அலகாபாத் தூண் கல்வெட்டு

 

3. நாணய ஆதாரங்கள் குப்த அரசர்கள் வெளியிட்ட நாணயங்களில் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தத் தங்க நாணயங்கள் குப்த அரசர்களின் பட்டங்கள் குறித்தும் அவர்கள் நடத்திய வேதச் சடங்குகள் குறித்தும் தெரிவிக்கின்றன.

 

37. D) மற்றவர்களால் வெல்ல முடியாத உங்களுடைய சொல்

விளக்கம்:

சொல் வெல்லவும் வீழ்த்தவும் செய்யும் என்பதால் திறனறிந்த சொல்ல வேண்டும். பல சொல்ல விரும்பாமல் மறுக்க முடியாதபடி சொல்லை சொல்ல வேண்டும். அதாவது சொல்லப்படும் சொல்லுக்கு மேலான சொல் இலலாதபடியும், வெல்ல முடியாதபடியும் ஆராய்ந்து சொல்ல வேண்டும்.

 

38. C) கூற்று-1, கூற்று-2 இரண்டும் சரி
விளக்கம்:

பீடபூமிகள் என்பவை மழை குறைந்த உயர் நிலங்களாகும். இப்பகுதியில், கனிம வளங்களும் சில வேளாண் பொருட்களும் விளைகின்றன. சோட்டாநாக்பூர் பீடபூமியில் கனிம வளங்களும், மாளவ பீட பூமியில் தினைப் பொருட்களும், தக்காண பீடபூமியில் பருப்பு வகைகளும், எண்ணெய் வித்துக்களும் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன.

 

39. A) வெண்கலம்
விளக்கம்:

சிந்துவெளி மக்கள் நுண்கலைகளில் சிறந்து விளங்கினர். பானை ஓவியங்கள், சுடுமண் பொம்மைகள், அணிகலன்கள், வெண்கலத் தாலான நடனப்பெண்களின் உருவம், யோகி சிற்பம் ஆகியவை அம்மக்களின் கலை ஆர்வத்தை வெளிப்படுத்தும் சான்றுகளகத் திகழ்கின்றன.

 

40. A) முகமது கவான்
விளக்கம்:

பாரசீகத்தில் பிறந்த முகமது கவான் புகழ்பெற்ற இஸ்லாமிய சமய வல்லுநராகவும், பாரசீக மொழியில், கணிதத்தில் புலமை பெற்றவராகவும் விளங்கினார். அவர் சிறந்த கவிஞராகவும் எழுத்தாளராகவும் விளங்கினார். பீடாரில் ஒரு மதரசாவை நிறுவிய அவர் அதில் ஒரு பெரிய நூலகத்தையும் அமைத்தார். அந்நூலகத்தில் 3000 கையெழுத்து நூல்கள் இருந்தன. இவை இவருடைய புலமையை உணர்த்த வல்லன

TNPSC MODEL QUESTION

DOWNLOAD PDF HERE

TNPSC MODEL QUESTION GROUP I GROU II GROUP IV

[/sociallocker]

TNPSC MODEL QUESTION – GROUP I GROUP II GROUP IV 27-04-2020

How To Ask TNPSC Questions

 

DOWNLOAD OUR ANDROID APP

TNPSC MODEL QUESTION - GROUP I GROUP II GROUP IV 28 DOWNLOAD 1

Leave a Reply