
TNPSC MODEL QUESTION FREE DOWNLOAD 07-05-2020
Table of Contents
81. நெருப்பு சுவாலையில் ஒரு இரும்புத் துண்டு சுடப்படுகிறது. அது முதலில் இளஞ்சிவப்பாகவும் பின் சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்துடனும் இறுதியில் வெண் சூடேற்ற நிலையையும் அடைகிறது. இந்த உற்று நோக்கலின் சரியான விளக்கம் எந்த விதியின் அடிப்படையில் சாத்தியமாகும்
-(Gen Sci. Laws)
- A) கிர்க்காஃப் விதி
- B) நியூட்டனின் குளிர்வு விதி
- C) ஸ்டீஃபன் விதி
- D) வியன் இடப்பெயர்ச்சி விதி
82. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் நேச நாடுகளிடம் சரணடைந்த பின்பு சுபாஷ் சந்திரபோஸ் எங்கு சென்றார் -(Emer. of Lead.)
- A) ஆஸ்திரலியாவிலுள்ள சிட்னி
- B) சிங்கப்பூர்
- C) ஃபார்மோசாவிலுள்ள தைப்பே
- D) தென்கொரியாவின் சியோல்
83. ஒளி வேதியில் பனியின் முக்கியமான பகுதிப் பொருள் (Photochemical Smog) எது? -(Light)
- A) ஓசோன்
- B) அக்ரோலின்
- C) பெராக்சி அசிட்டைல் நைட்ரேட்
- D) குளோரோ புளுரோ கார்பன்
84. கீழ்க்க ண்ட எந்த துறையால் SwachhParyatan என்ற அலைபேசி செயலி செயல்படுத்தப்படுகிறது -(Science & Tech.)
- A) மனித வளத்துறை அமைச்சகம்
- B) சுற்றுலா வளர்ச்சி துறை அமைச்சகம்
- C) சுகாதாரத்துறை அமைச்சகம்
- D) வனத்துறை அமைச்சகம்
85. எந்நோய் கொசுவினால் கடத்தப்படும் நுண்ணுயிரியினால் நிணநீர் நாளங்களில் நாள்பட்ட அழற்சி ஏற்படுத்துகிறது? -(Health & Diseses)
- A) அஸ்காரியாசிஸ்
- B) ரிங்க்வார்ம் (படர்தாமரை)
- C) எலிஃபேன்டியாசிஸ்
- D) அமீபையாசிஸ்
86. பின்வரும் கூற்றுகளில் எது சரியானது அல்ல?
- A) என்ஸைம்கள் பொதுவாக தாவர – வேதியியல் வினைகட்கு வினைவேகமாற்றிகளாக செயல்படுகின்றன. -(Bio Chemical)
- B) என்ஸைம்களின் வினைவேக மாற்றும் திறனை இணை என்ஸைம்கள் அதிகரிக்கின்றன.
- C) ஒரு வினைவேக மாற்றி ஒரு வினையை தோற்றுவிப்பது இல்லை.
- D) வேதிச் சமநிலையில் உள்ள ஒரு வினையின் வேதிச்சமநிலை மாறிலியின் மதிப்பை ஒரு வினை வேக மாற்றி மாற்றுகிறது.
87. அரசியலமைப்பு (44வது திருத்தச்) சட்டம் 1978, சொத்துரிமையை -(Amnd.)
I. அடிப்படை உரிமையிலிருந்து சட்ட உரிமையாக மாற்றியது
II. சட்ட உரிமையிலிருந்து அடிப்படை உரிமையாக மாற்றியது
III. அடிப்படை உரிமையிலிருந்து அடிப்படைக் கூறாக மாற்றியது மேற்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
- A) I மட்டும்
- B) II மட்டும்
- C) III மட்டும்
- D) II & III மட்டும்
88. கூற்று 1 : சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மிகவும் அதிகமாக உள்ள மாவட்டங்கள் கன்னியாகுமரி, தேனி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர், நீலகிரி.
கூற்று 2 : சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மிகவும் குறைவாக உள்ள மாவட்டங்கள் : விருதுநகர், திருப்பூர், கரூர், தர்மபுரி, கிருஷ்ண கிரி, வேலூர். -(Physical Fe.)
- A) கூற்று-1 சரி, கூற்று-2 தவறு
- B) கூற்று-1 தவறு, கூற்று-2 சரி
- C) கூற்று-1, கூற்று-2 இரண்டும் சரி
- D) கூற்று-1, கூற்று-2 இரண்டும் தவறு
89. பாலும் நீரும் கலந்த இரு கலவைகள் உள்ளன.
முதல் கலவையில் பால், நீரின் விகிதம் 5 : 3 எனவும் இரண்டாவது கலவையில் பால், நீரின் விகிதம் 5 : 4 என உள்ளது. இரு கலவையையும் எந்த விகிதத்தில் கலந்தால் பாலும் நீரும் 4 : 3 என்ற வீதத்தில் இருக்கும்? -(GMT)
- A) 4 :3
- B) 3:4
- C) 3:1
- D) 1:3
90. ஆங்கில வெடிமருந்து கிடங்குகளை அழிக்க பெண் உளவாளிகளை பயன்படுத்தியவர் -(Ecology)
- A) வேலு நாச்சியார்
- B) ராணி மங்கம்மாள்
- C) ஜான்சி ராணி
- D) அயோத்தி பேகம்
TNPSC GROUP 1 , 2, 4 QUESTIONS ANSWERS
81. D) வியன் இடர்பெயர்ச்சி விதி
விளக்கம்
எனவே இரும்புத் துண்டை சூடேற்றும் போது
2… குறைகிறது. அதாவது வெப்பநிலை அதிகரிக்கும் போது உமிழப்படும் பெரும செறிவுடைய கதிர்வீச்சுகள் குறைந்த அலைநீளப்பகுதிக்கு இடம்பெயருகின்றன.
எனவே சூடேற்றப்படும் பொருளின் நிறம் அதிக அலைநீளப் பகுதியிலிருந்து (சிவப்பு) குறைந்த அலைநீளப்பகுதி வரை மாறுகின்றன.
எல்லா அலைநீளங்களை உமிழும் அளவுக்கு பொருளின் வெப்பநிலை உயரும் போது பொருள் நிறம் வெண்மையாக மாறும்.
82. C) ஃபார்மோசாவிலுள்ள தைப்பே
83.D) குளோரோ புளுரோ கார்பன்
விளக்கம்
ஆக்ஸிஜனேற்றமடைந்த ஹைட்ரோ கார்பன்கள் மற்றும் ஒசோன் ஈரப்பதத்தின் முன்னிலையில் ஒளி வேதியியல் பணியினை நிகழ்த்துகின்றன.
ஹைட்ரோகார்பன்கள் +0,, +NO,, NO, CO, 0, > பெராக்சைடுகள், பார்மல் டிஹைடு, பெராக்சி அசிட்டைல் நைட்ரேட் (PAN), அக்ரோலின் மற்றும் பல,
ஆதலால், குளோரோ புளுரோ கார்பன்கள் ஒளிவேதியியல் பணியின் முக்கியமான பகுதிப் பொருள் அல்ல.
84. B) சுற்றுலா வளர்ச்சி துறை அமைச்சகம்
85. C) எலி ஃபேன்டியாசிஸ் (யானைக் கால் நோய்)
விளக்கம்
நிணநீர் ஃபைலேரியா நோய் அல்லது யானைக்கால் நோயானது கொசுக்களால் பரப்பப்படும் ஒட்டுண்ணி நோயாகும்.
(ஃகியுலிக்ஸ் கொசு). இக்கொசுக்களின் உருளைப் புழுக்களான (உச்சேரியா பேன்கிராப்டி) என்பது மனிதனில் காணப்படும் உருளை புழுவாகும்.
அவை மனிதனுக்கு யானைக்கால் நோயினை பரப்புகின்றன.
இந்த உருளைப் புழுவானது நிணநீர் அமைப்பினால் பாதிப்பு ஏற்படுத்துகிறது.
இதனால் நிணநீரானது பாதிக்கப்பட்ட பகுதியில் குவிந்து தடுப்பாற்றல் அமைப்பாக செயல்படுகின்றது.
நிணநீர் அமைப்பானது உடலை பாதுகாத்து நோய் எதிர்ப்பு திறன் கொண்டதாக செயல்படுகிறது.
86. D) வேதிச் சமநிலையில் உள்ள ஒரு வினையின் வேதிச்சமநிலை மாறிலியின் மதிப்பை ஒரு வினை வேக மாற்றி மாற்றுகிறது.
87. A) | மட்டும் 88. C) கூற்று-1, கூற்று-2 இரண்டும் சரி
விளக்கம்
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மிகவும் அதிகமாக உள்ள மாவட்டங்களாவன கன்னியாகுமரி, தேனி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர், நீலகிரி.
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மிகவும் குறைவாக உள்ள மாவட்டங்களாவன விருதுநகர், திருப்பூர், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர்.
89. D) 1:3
90.A) வேலு நாச்சியார்
விளக்கம்
வேலு நாச்சியார் ஒரு பெண்கள் படையை உருவாக்கியிருந்தார்.
அவர் ஆங்கிலேயரின் வெடிமருந்துக் கிடங்குகளைக் கண்டுபிடிப்பதற்கு தன் உளவாளிகளைப் பயன்படுத்தினார்.
நாச்சியாரின் படையில் இருந்த குயிலி தன் மீது நெருப்பு வைத்துக் கொண்டு, ஆங்கிலேயரின் வெடிமருந்து கிடங்கில் நுழைந்து அதை அழித்தார்.
நாச்சியாரின் படையிலிருந்த இன்னொரு உளவாளி அவரால் தத்தெடுக்கப்பட்ட உடையாள் ஆவார்.
இவர் ஆங்கிலேயரின் ஓர் ஆயுதக் கிடங்கை வெடிக்கச் செய்தவதற்காகத் தன்னையே அழித்துக் கொண்டார்.
Very nice. App and useful