TNPSC MODEL QUESTION FREE DOWNLOAD 06-05-2020

TNPSC MODEL QUESTION FREE DOWNLOAD 06-05-2020

TNPSC MODEL QUESTION FREE DOWNLOAD 06-05-2020

TNPSC MODEL QUESTION FREE DOWNLOAD 06-05-2020

71. 1984-ம் ஆண்டு போபாலில் உள்ள யூனியன் கார்பைடு எனும் பூச்சிக் கொல்லி ஆலையில் ஏற்ப்பட்ட வெடிப்பால் கீழ்க்கண்ட எந்த நச்சுத்தன்மை கொண்ட வாயு காற்றில் கலந்தது -(Pesticides)

 • A) மெத்தில் ஐசோ சயனேட்
 • B) எத்தில் ஐசோ சயனைடு
 • C) மெத்தில் ஐசோ சயனைடு
 • D) எத்தில் ஐசோ சயனேட்

 

72. ‘ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகறா றகலாக் கடை” – மேற்காணும் குறளில் இருந்து நீவிர் அறிவது யாது? -(Thirukkural)

 • A) வரவைப் பெருக்குவதற்குக் கடினமாக உழைக்க
 • B) செலவைக் கவனமாக மேலாண்மை செய்தால் வரவு குறைவானலும் எவ்விதத் துன்பமின்றி வாழ முடியும்.
 • C) வரவு எத்தகையதாயினும் செலவின் பெருக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்துக.
 • D) வரவு, செலவு இரண்டையும் அதிகரித்துக் கொள்ள வேண்டும்

 

73. பாக்டீரியாவில் DNA இரட்டிப்படைதல் நடைபெறுவது …………. -(Genetics)

 • A) பிளத்தலுக்கு முன்
 • B) படியாக்கத்திற்கு முன்
 • C) S நிலையின் போது
 • D) நியூக்ளியோலஸிற்குள்

TNPSC MODEL QUESTION FREE DOWNLOAD 06-05-2020

74. குறிப்பிட்ட இடங்களில் வெட்டுவது எதன் கண்டுபிடிப்பால் சாத்தியமானது -(Genetics)

 • A) ரெஸ்டிரிஷன் எண்டோநியூக்ளியேஸ்
 • B) ஊடுருவி
 • C) தெரிவு செய்யக்கூடிய குறிப்பு
 • D) லைகேஸ்கள்

 

75. பின்வருவனவற்றில் எது பிளாஸ்மிடுகளுக்கான பண்பு அல்ல? ~(Genetics)

 • A) டிரான்ஸ்பெரேஸ்
 • B) ஒரு இழை உடையது
 • C) தன்னிச்சையான இரட்டிப்பாதல்
 • D) வட்ட வடிவம்

TNPSC MODEL QUESTION FREE DOWNLOAD 06-05-2020

76. கீழ்க்காண்பவற்றை பொருத்துக ~(Thirukural)

i.............மாடல்ல மற்றயவை'a. இன்முகத்தோடு எதிர்கொள்ள வேண்டிய அவசியம்
ii.'இடுக்கன் வருங்கால் .........'b.சரியான சந்தர்ப்பம் அறிந்து செயல்படுதல்
iii.'கொக்கொக் கூம்பும் ............'c. கல்வி கற்றல்
 • A) i-(a), ii-(b), iii-(c)
 • B) i-(b), ii-(c), iii-(a)
 • C) i-(c), ii-(a), iii-(b)
 • D) i-(c), ii-(b), iii-(a)

77. ஆறு மாதங்களுக்கு முன்பு சமவெளியில் வசித்த மக்கள், அருகிலுள்ள ரோஹ்தாங் பாஸ் (உயரமான மலைப்பாதை) என்னும் பகுதிக்கு இடம் பெயர்ந்த னர். அவர்கள் -(Physical Features)

 • A) அதிக இரத்த சிவப்பு செல்களையும் குறைந்த ஆக்ஸிஜன் இணைவுதிறன் கொண்ட ஹீமோகுளோபின்களைப் பெற்றிருப்பர்
 • B) கால்பந்து போன்ற விளையாட்டுகளை விளையாடுவதற்கேற்ற உடல் தகுதியைப் பெற்றிருக்கவில்லை
 • C) குமட்டல், சோர்வு போன்ற முகடு நோய் அறிகுறிகாளல் அவதியுறுவர்
 • D) இயல்பான இரத்த சிவப்பு செல் எண்ணிக்கையைக் கொண்டிருப்பர். ஆனால் அதிக ஆக்ஸிஜன் இணைவுத்திறன் கொண்ட ‘ ஹீமோகுளோபின்களைப் பெற்றிருப்பர்

 

78.தவறான கூற்றைக் கண்டறிக -(Tamil Society)

 • A) பங்குனி உத்திரம் முழுநிலவு நாளில் கொண்டாடப்படுகிறது
 • B) பங்குனி உத்திரம் முருகனின் திருமண நாளாகக் கருதப்படுகிறது
 • C) பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்த நாள்
 • D) பங்குனி உத்திரம் இந்திரனுக்கு உகந்த நாள் என்பர்

 

79. நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கிடையே உள்ள பீடபூமி -(Physical Features)

 • A) பாரமஹால் பீட பூமி
 • B) கோயம்புத்தூர் பீட பூமி
 • C) சிகூர் பீட பூமி
 • D) கிருஷ்ண கிரி பீட பூமி

 

80. எந்த கூற்று தவறானது ~(Indus valley)

 • A) சிந்து சமவெளி மக்கள் சுட்ட செங்கற்களை பயன்படுத்தினர்
 • B) சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன்பு இந்நாகரிகம் மலர்ந்தது
 • C) ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு ‘புதையுண்ட நகரம்’ என்பது பொருள்
 • D) சதுர் வடிவிலான நூற்றுக்கணக்கான முத்திரைகள் இங்கு கண்டெடுக்கப்பட்டது

TNPSC MODEL QUESTION FREE DOWNLOAD 06-05-2020

71. C) மெத்தில் ஐசோ சயனைடு
விளக்கம்
1984 ம் ஆண்டு , டிசம்பர் மாதம் 3 ஆம் நாள் அதிகாலையில் இந்திய நகரமான போபாலில், உலகிலேயே அதிக மோசமான இரசாயன பேரழிவு நிகழ்ந்தது. யூனியன் கார்பைடு எனும் நிறுவனத்தின் பூச்சிக் கொல்லி ஆலையில் ஏற்பட்ட வெடிப்பால் நச்சுத் தன்மை கொண்ட வாயு (மெத்தில் ஐசோ சயனைடு) காற்றில் கலந்தது. இந்த வாயு காற்றை விட இரு மடங்கு கனமானது, எனவே காற்றில் கலைந்து செல்லாமல் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் போர்வை போல சூழ்ந்து கொண்டது. இது மக்களின் நுரையீரலை தாக்கி, சுவாசித்தலை பாதித்தது. ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாழாகியது. உயிர் பிழைத்தவர்களின் நுரையீரல்கள், மூளை, கண்கள் மற்றும் இரைப்பைக் குடல், நரம்பு மண்டலம் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பு ஆகியன மிக மோசமாக
பாதிக்கப்பட்டன.

72. B) செலவைக் கவனமாக மேலாண்மை செய்தால் வரவு குறைவானலும் எவ்விதத் துன்பமின்றி வாழ முடியும்.

73. A) பிளத்தலுக்கு முன்
விளக்கம்
பாக்டீரியாவில் DNA இரட்டிப்படைதல் பிளத்தலுக்கு முன் நடைபெறுகிறது. யூகேரியாட்டிக் உயிரினத்தில் இது S நிலையில் நடைபெறுகிறது.

TNPSC MODEL QUESTION FREE DOWNLOAD 06-05-2020

74. A) ரெஸ்டிரிக்ஷன் எண்டோநியூக்ளியேஸ்
விளக்கம்
ரெஸ்டிரிக்ஷன் எண்டோநியூக்ளியஸ் எனும் நொதி DNA மூலக்கூறை சிறு துண்டுகளாக சிதைக்கும் தன்மை உடையது.
இந்த நொதியானது DNA வை ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே துண்டாக்குகிறது.
உதாரணத்திற்கு ஹீமோபிளஸ் எகிப்டியஸ் பாக்டீரியம் Hae III எனும் நொதியை கொண்டுள்ளது. இந்த நொதி DNA வை பின்வரும் கார வரிசையில் துண்டாக்குகிறது.
5′- G G C C – 3′
3′ – C G G G – 5′

75. B) ஒரு இழை உடையது
விளக்கம்
பிளாஸ்மிட் என்பது ஒரு சிறிய வட்ட வடிவமான இரண்டு இழையினைக் கொண்ட மூலக்கூறுகளால் ஆனது.
இது முற்றிலும் செல்லினுடைய குரோமோசோமிலிருந்து வேறுபட்டது.
இது 10 கிலோ கார இணைப்புகளை கொண்ட உருவம் உடையது. பிளாஸ்மிடுகள் புரோகேரியாட் மற்றும் யூகேரியாட்டுகளில் உள்ளது.
இந்த பிளாஸ்மிடை செல்லிருந்து தனியாகப் பிரித்து எடுத்து குளோனிங்கிற்கு பயன்படுத்தலாம்.

TNPSC MODEL QUESTION FREE DOWNLOAD 06-05-2020

76. C) i-(c), ii-(a), ii-(6) 77.

A) அதிக இரத்த சிவப்பு செல்களையும் குறைந்த ஆக்ஸிஜன் இணைவுதிறன் கொண்ட ஹீமோகுளோபின்களைப் பெற்றிருப்பர்

78. D) பங்குனி உத்திரம் இந்திரனுக்கு உகந்த நாள் என்பர்
விளக்கம்
பங்குனி உத்திரம் என்பது, பங்குனி மாதத்தில் முழுநிலவு நாளில் கொண்டாடப்படும் விழாவாகும். இது முருகனின் திருமணநாளாகக் கருதப்படுகிறது.

79. B) கோயம்புத்தூர் பீட பூமி
விளக்கம்
பீடபூமிகள் பாரமஹால் பீட பூமி :
இது மைசூர் பீட பூமியின் ஒரு பகுதியாகும்.

கோயம்புத்தூர் பீட பூமி :
இது நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கிடையே உள்ளது.
சேலம், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் இதில் அடங்கும்.

சிர பீட பூமி :
இப்பீட பூமி நீலகிரி பகுதியில் அமைந்துள்ளது.

மதுரை பீட பூமி :
மதுரை பீட பூமி மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரம் வரை நீண்டுள்ளது.

80. D) சதுர் வடிவிலான நூற்றுக்கணக்கான முத்திரைகள் இங்கு கண்டெடுக்கப்பட்டது.

TNPSC MODEL QUESTION FREE DOWNLOAD 06-05-2020

 

DOWNLOAD OUR ANDROID APP

TNPSC MODEL QUESTION FREE DOWNLOAD 06-05-2020 1

10 IMPORTANT TNPSC MODEL QUESTION 04-05-2020

10 IMPORTANT TNPSC MODEL QUESTION 04-05-2020

Leave a Reply