
TNPSC MODEL QUESTION 02-05-2020
51. ……… துணிக கருமம் துணிந்தபின் TNPSC MODEL QUESTION 02-05-2020
………. என்ப திழுக்கு ‘ -(Thirukkural) எவ்வாறு ஒரு செயலில் ஈடுபட வேண்டும் என திருவள்ளுவர் மேற்கூறிய குறளில் அறிவுறுத்துகிறார்?
A) நிறையப் பொருள் சேர்த்த பிறகு
B) தானம் செய்த பிறகு
C) நன்றாக சிந்தித்து அதற்குப் பிறகு
D) தக்க காலமறிந்து
52. ஆட்டோசோம்களில் முதன்மை பிரிதலடையாமை நிகழாமையால் ஏற்படும் நோய் -(Diseases)
A) டர்னர் சின்ட்ரோம்
B) கதிர் அரிவாள் செல் அனீமியா
C) டவுண்சின்ட்ரோம்
D) கிளின்பெல்டர்ஸ் சின்ட்ரோம்
53. புகழ்பெற்ற கஸ்தூரி மான் அல்லது ஹங்கல் மான்களின் இருப்பிடமாக விளங்கும் தேசியப்பூங்கா எது? -(Location)
A) பந்தவ்கார் தேசியப்பூங்கா
B) கழுகுக்கூடு வனவிலங்குப் புகலிடம்
C) டச்சிகம் தேசியப் பூங்கா
D) தெய்புல் லேம்ஜாவ் தேசிய பூங்கா
54. கூற்று (A) : சில கடல் ஆமைக் (லாகர்ஹெட் கடல் ஆமை) அவை பிறந்த கடற்கரையோரம் பல ஆண்டுகளுக்குப் பிறகும் வந்து முட்டையிடுகின்றன. -(Magnetism)
கூற்று (B) : ஆமைகள் தங்களது பிறந்த கடற்கரையைக் கண்டறிய புவிக்காந்த உருப்பதித்தல் எனும் முறையைக் கையாளுகின்றன. இந்த ஆமைகள் பல்வேறு இடங்களின் காந்தப்புலவலிமையை நினைவில் கொள்ளும் ஆற்றல் உடையவை. இது அவை தாயகத்திற்குத் திரும்புவதற்கு உதவுகிறது.
A) (A) சரி, ஆனால் (R) தவறு
B) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமாகும்
C) (A) தவறு, ஆனால் (R) சரி
D) (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
55. கடைசிப்போரான காக்ரா போரில் பாபர்………… போரிட்டார் -(Mughals)
A) ஆப்கானியர்களுக்கு எதிராகப்
B) ரஜபுத்திரர்களுக்கு எதிராகப்
C) துருக்கியர்களுக்கு எதிராகப்
D) மராட்டியர்களுக்கு எதிராகப்
TNPSC MODEL QUESTION 02-05-2020
56. கருவுற்றலை பராமரிக்க பிளாசன்டாவால் சுரக்கப்படும் ஹார்மோன்கள் யாவை? -(Physiology)
A) hCG, hPL, ஈஸ்டிரஜன், ரிலாக்சின், ஆக்ஸிடோசின்
B) hCG, hPL, புரோஜெஸ்டடோஜன், ஈஸ்டிரஜன்
C) hCG, hPL, புரோஜெஸ்டோஜன், புரோலாக்டின்
D) hCG, புரோஜெஸ்ட்டோஜன், ஈஸ்டிரஜன், குளுக்கோ கார்ட்டிகாய்டுகள்
57. புவி வெப்பமயமாதலின் பார்வையில் ‘குழந்தை யேசு’ என்ற பெயர் இதனுடன் தொடர்புடையது -(physical fetures)
A) எல் நினோ
B) லா நினோ
C) பசுமை இல்ல விளைவு
D) இளஞ் சிவப்பு புரட்சி
58……. …………. நாகாக்க காவாக்கால்
சோகாப்யர் சொல்லிழுக்கப் பட்டு” மேற்கூறிய திருக்குறளில் திருவள்ளுவர் நாவடக்கத்தை பற்றி கூறுகிறார் – இப்பண்பு எவருக்குப் பொருந்தும் -(Thirukkural)
A) பொருள் உடையவருக்கு
B) பொருள் அற்றோருக்கு
C) நல்லோருக்கு
D) அனைவருக்கும்
TNPSC MODEL QUESTION 02-05-2020
59. கீழ்க்கண்டவற்றில் எது கிருஷ்ண தேவராயாரின் தலை சிறந்த சாதனையாக கருதப்படுவது -(Vijayanagaram)
A) சைவ வைணவ கோயில்களுக்கு பெருமளவு கொடையளித்தல்
B) வலுவான ராணுவ தளம் அமைத்த அதன் மீது தன் பேரரசை அமைத்தல்
C) நாயக் அல்லது நாயங்காரா முறையை மறுசீரமைப்பு செய்து சட்ட அங்கீகாரம் கொடுத்தல்
D) அவருடைய அரசவையை அல்லசாணி பெத்தண்ணா போன்ற தலைசிறந்த புலவர்கள் அலங்கரித்தது
60. கீழ்க்கண்டவற்றை காலவரிசைப்படுத்துக -(Vijyanagaram)
A) சங்கம வம்சம், ஆரவீடு வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம்
B) சங்கம வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம், ஆரவீடு அம்சம்
C)சாளுவ வம்சம், சங்கம வம்சம், துளுவ வம்சம், ஆரவீடு அம்சம்
D) சங்கம வம்சம், துளுவ வம்சம், சாளுவ வம்சம், ஆரவீடு வம்சம்
TNPSC MODEL QUESTION 02-05-2020
51. C) நன்றாக சிந்தித்து அதற்குப் பிறகு
விளக்கம் ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக்கொள்வேம் என்பது குற்றம்.
52. C) டவுண் சின்ட்ரோம்
விளக்கம்
டவுண் சின்டரோம் என்பது ஒரு ஆட்டோஸோமல் அனுப்ளாய்டி.
இது கூடுதலான ஒரு 21 வது குரோமோசோமால் ஏற்படுகிறது.
(ட்ரைசோமி – 21) இந்த இரண்டு குரோமோசோம்களும் இணையும் பொழுது இது உண்டாகிறது.
முட்டையாக்கத்தின் போது 21 வது குரோமோசோம் பிரியாததால் இது ஏற்படுகிறது.
53. C) டச்சிகம் தேசியப் பூங்கா
விளக்கம்
பூங்காவின் இருப்பிடங்கள்
1. பந்தவ்கார் தேசியப்பூங்கா, மத்தியப் பிரதேசம்
2. கழுகுக்கூடு வனவிலங்குப் புகலிடம், அருணாச்சல பிரதேசம்
3. டச்சிகம் தேசியப் பூங்கா, ஜம்மு & காஷ்மீர்
4. தெய்புல் லேம்ஜாவ் தேசிய பூங்கா, மணிப்பூர்
54. B) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமாகும்
55. A) ஆப்கானியர்களுக்கு எதிராகப்
விளக்கம்
ஆப்கானியர்களுக்கு எதிராக பாபர் மேற்கொண்ட இறுதிப்போர் இதுவாகும்.
சுல்தான் இப்ராகிம் லோடியின் சகோதரனான முகம்மது லோடியும் அவரது மருமகனான சுல்தான் நஸ்ரத்ஷாவும் பாபருக்கு எதிராக சதி செய்தனர்.
ஆபத்தை உணர்ந்த பாபர் அவர்களுக்கு எதிராகப் படையெடுத்தார்.
கங்கை நதியின் துணை நதியான காக்ரா ஆற்றின் கரையில் இறுதியாக நடைபெற்ற போரில் பாபர் ஆப்கானியரைத் தோற்கடித்தார்.
ஆனால் ஆக்ராவிலிருந்து திரும்பி லாகூர் செல்லும் வழியில் பாபர் 1530 இல் காலமானார்.
TNPSC MODEL QUESTION 02-05-2020
56. B) hCG, hPL, புரோஜெஸ்டடோஜன் (சினை இயக்குநீர்), ஈஸ்டிரஜன் (பெண்மையை இயக்குநீர்)
விளக்கம்
கருவுற்றுதலை நிலைநிறுத்துவதற்கு பனிக்குடத்தில் இருந்து இயக்குநீர் (ஹார்மோன்) உற்பத்தி செய்யப்படுகிறது.
அவை hCG, hPL, புரோஜெஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஆகும்.
பனிக்குடம் என்பது கருப்பையினால், கருப்பநிலையில் உருவாக்கப்பட்ட ஓர் உறுப்பாகும்.
கருநிலையில் முதன் முதலில் சுரக்கப்படும் இயக்குநீர் hCG (மனித குரோனிக் கொனடோ ட்ரோப்பிக் இயக்குநீர்) ஆகும்.
இவை மாதவிடாய் நிகழ்வை கருப்பநிலையில் தடை செய்கிறது.
அவ்வாறு நிகழவில்லை என்றால் அவை கருச்சிதைவிற்கு காரணமாகிறது.
புரோஜெஸ்டிரோன் கரு உட்பதித்தல் நிகழ்விற்கு உதவி புரிகிறது.
ஈஸ்ட்ரோஜன் கரு பெருக்கத்திற்கு உதவி புரிகிறது. மேலும் ஈஸ்ட்ரோஜன் மார்பு பகுதி வளர்ச்சிக்கும், கருப்பை வளர்ச்சிக்கும் துணை நிற்கிறது.
கருவளர்சிதை மாற்றத்திற்கு hPL (மனித பனிக்குட லேக்டோஜன்) உதவுகிறது.
அவை கருவளர்ச்சிக்கும் கருமேம்பாட்டிற்கும் உதவி புரிகின்றது.
57. A) எல் நினோ
விளக்கம்
எல் நினோ என்பது கடல் வளிமண்டல சுழற்சியில் ஏற்படும் வெப்பம், காற்றின் மாறுதல்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளால் உலக நாடுகளில் உள்ள சில பகுதிகளில் பருவநிலைகளில் பாதிப்புக்களை உண்டாக்கும் ஒரு நிகழ்வு ஆகும்.
58. D) அனைவருக்கும்
59. C) நாயக் அல்லது நாயங்காரா முறையை மறுசீரமைப்பு செய்து சட்ட அங்கீகாரம் கொடுத்தல்
60. B) சங்கம வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம், ஆரவீடு அம்சம்
விளக்கம்
விஜயநகர அரசு நான்கு அரச வம்சத்து அரசர்களால் முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆளப்பட்டது.
சங்கம வம்சம் (1336 – 1485),
சாளுவ வம்சம் (1485 – 1505),
துளுவ வம்சம் (1505 – 1570),
ஆரவீடு வம்சம் (1570 – 1650)
என இவ்வரசின் வரலாற்றை நான்கு கட்டங்களாக விவரிக்கலாம்.
TNPSC MODEL QUESTION 02-05-2020
[sociallocker id=5075]
DOWNLOAD PDF HERE
[/sociallocker]
TNPSC_MODEL_QUESTION_02-05-2020_UserUpload.Net.pdf – 2.5 MB
7 Important TNPSC Biology Questions