TNPSC Indian Constitution Model Question 20-01-2020
TNPSC Indian Constitution Model Question 20-01-2020
இந்திய அரசியலமைப்பு
பின்வரும் எந்த வழிமுறைகளின் மூலம் இந்தியக் குடியுரிமையினை பெறலாம்?
I) பிறப்பின் மூலம் மட்டும்
II) மரபுவழியின் மூலம் மட்டும்
III) பதிவு செய்வதால் மட்டும்
IV) குடிமையளிக்கும் முறை மட்டும்
a) I, II மற்றும் III மட்டும் b) I, I, II மற்றும் IV மட்டும்
c) | மற்றும் III மட்டும் d) III மற்றும் IV மட்டும்
எந்த சரத்தினை பின்பற்றி இந்திய பாராளுமன்றம் குடியுரிமை சட்டத்தை இயற்றியுள்ளது?
a) சரத்து 7
b) சரத்து 8
c) சரத்து 10
d) சரத்து 11
ஒரு மாநிலத்தை உருவாக்கும் பாராளுமன்றத்தின் அதிகாரத்தில் உள்ளடக்கியது?
a) புதிய மாநிலத்தை உருவாக்குவது மட்டும்
b) மத்திய பகுதியை உருவாக்குவது மட்டும்
c) புதிய மாநிலத்தை (அ) மத்திய பகுதியை உருவாக்குவது மட்டும்
d) பழைய மாநிலத்தை உருவாக்குவது மட்டும்
கீழ்க்கண்ட பேராணைகளில் எதில் பொது அதிகாரப்பதவியில் உள்ளவர் அவர் எந்த தகுதியில் அப்பதவி வகிக்கிறார் என்று வினவ முடியும்?
a) செயலுறுத்தும் நீதிப்பேராணை
b) தடையுறுத்தும் நீதிப்பேராணை
c) நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணை
d) தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை
கீழ்க்கண்டவற்றுள் எது தற்பொழுது அடிப்படை உரிமைகளில் கிடையாது?
a) பேச்சு சுதந்திரத்திற்கான உரிமை
b) வாழ்க்கைக்கான உரிமை
c) கல்விக்கான உரிமை
d) சொத்திற்கான உரிமை
கீழ்க்கண்ட வழக்குகளில் எந்த வழக்கில் ஷரத்து 368ல் உள்ள திருத்த அதிகாரம் பற்றி விவாதிக்கப்படவில்லை ?
a) மினர்வா மில்ஸ்
b) எ.கே.ராய்
c) வாமன் ராவ்
d) ஜியான் கார்
கீழ்க்கண்டவற்றுள் எது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கூறாகாது?
a) மத சுதந்திர உரிமை
b) சொத்திற்கான உரிமை
c) அதிகாரங்களை பகிர்ந்தளித்தல்
d) பாராளுமன்ற முறை
பின்வரும் தலைவர்களுள் யார் இந்திய அரசமைப்பு வரைவு குழு உறுப்பினர் அல்ல?
a) புருஷோத்தம் தாஸ் தான்டன்
b) எம்.ஆர். மசானி
c) மகாத்மா காந்தி
d) அப்துல் காபர் கான்
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஷரத்து 19ன் வாயிலாக அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் நெருக்கடி நிலைகளின் சமயம் நிறுத்தி வைக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ள இடம்?
a) ஷரத்து 352
b) ஷரத்து 356
c) ஷரத்து 358
d) ஷரத்து 360
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 360வது ஷரத்து எதைப் பற்றி கூறுகிறது?
a) நாட்டு நெருக்கடி நிலை
b) மாநில நெருக்கடி நிலை
c) நிதி நெருக்கடி நிலை
d) மேற்கூறிய எதுவும் இல்லை
‘ஷரத்து 19ன் கீழ் பேசுவதற்கு உரிமை என்பது பேசாமல் இருப்பதற்குரிய உரிமையையம் உள்ளடக்கியது’ என்பது வலியுறுத்தப்பட்ட வழக்கு?
a) கோவிந்த்த எ.மத்திய பிரதேச மாநிலம்
b) மேனகா காந்தி எ.யூனியன் ஆப் இந்தியா
c) பிஜோ இமானுவேல் எ.கேரளா மாநிலம்
d) கோபாலன் எ. சென்னை மாநிலம்
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்த அட்டவணை எல்லைகளை வரையறுத்தல் பற்றி கூறுகிறது?
a) முதல் அட்டவணை
b) இரண்டாவது அட்டவணை
c) மூன்றாவது அட்டவணை
d) நான்காவது அட்டவணை
TNPSC Indian Constitution Model Question 20-01-2020
பொருத்துக :
a) பந்துவா முக்தி மொர்ச்சா – 1. Art.20
b) ஜியான் கார் எ.ஸ்டேட் ஆப் பஞ்சாப் – 2. Art. 19 (1) (a)
c) பிஜோ இமானுவேல் எ. ஸ்டேட் ஆப் கேரளா – 3. Art. 21
d) கேதர்நாத் எ. ஸ்டேட் ஆப் வெஸ்ட் பெங்கால் – 4. Art. 23
Ans : 4 3 2 1
இந்தியாவில் உள்ள அரசியலமைப்பு திருத்த முறையானது எதனுடைய மாற்றியமைக்கப்பட்ட முறையாகும்?
a) அமெரிக்கன் முறை
b) ஆஸ்திரேலியன் முறை
c) கனடியன் முறை
d) ரஷ்யன் முறை
இன் ரீ பெருபரி வழக்கு கீழ்க்கண்டவற்றுள் எதைப் பற்றி கூறுகிறது?
a) ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றியமைத்தல்
b) ஒரு மாநிலத்தின் பரப்பளவை கூட்டுதல்
c) இந்திய எல்லையை வெளிநாட்டிற்கு மாற்றிக் கொடுத்தல்
d) ஒரு மாநிலத்தின் பரப்பளவை குறைத்தல்
‘மெட்ராஸ் மாநிலம்’ என்ற பெயரை தமிழ்நாடு மாநிலம்’ என்று பாராளுமன்றம் மாற்றி அமைத்து வருவது எதன் கீழ்?
a) ஷரத்து 2
b) ஷரத்து 3
c) ஷரத்து 4
d) ஷரத்து 5
‘ஒளிமறைப்புக் கோட்பாடு’ எங்கு உள்ளது?
a) ஷரத்து 12
b) ஷரத்து 11
c) ஷரத்து 13
d) ஷரத்து 14
இரட்டை இடருக்கு எதிராக வழங்கப்படும் பாதுகாப்பு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எதில் உள்ளது?
a) ஷரத்து 19(1)
b) ஷரத்து 19(2) பார்
c) ஷரத்து 20(1)
d) ஷரத்து 20 (2)
‘அனைத்து மனித உரிமைகளும் அனைவருக்குமே’ என்ற முழக்கம் மனித உரிமைகள் பிரகடனத்தின் எத்தனையாவது ………… ஆண்டு நிறைவு நாள் விழாவில் எடுக்கப்பட்டது?
a) 10
b) 25
c) 50
d) 60
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்து 3 வின் படி பாராளுமன்றத்திற்கு சட்டத்தினால் கீழ்க்கண்டவற்றுள் எவற்றை செய்ய அதிகாரம் கிடையாது?
a) புதிய மாநிலத்தை உருவாக்குதல்
b) இந்திய எல்லையை வெளிநாட்டிற்கு மாற்றிக் கொடுத்தல்
c) எந்த மாநிலத்தினுடைய பரப்பையும் குறைக்கச் செய்தல்
d) எந்த மாநிலத்தினுடைய பெயரையும் மாற்றுதல் –
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையில் உள்ள வார்த்தைகளான “இறைமை வாய்ந்த, சமநிலைமை நெறி சார்ந்த சமயச் சார்பற்ற மக்களாட்சிக் குடியரசாக” என்பன மாற்றாக கொண்டுவரப்பட்டது?
a) 41வது சீர்திருத்தத்தின் மூலம்
b) 42வது சீர்திருத்தத்தின் மூலம்
c) 43வது சீர்திருத்தத்தின் மூலம்
d) 44வது சீர்திருத்தத்தின் மூலம்
‘முகப்புரை’ என்பது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை அமைப்பு என்று விளம்பப்பட்ட வழக்கானது?
a) கேரளா எஜூகேசன் பில் வழக்கு
b) கேஸவனந்தா பாரதி எ. கேரள மாநிலம்
c) சஞ்சீவி எ. சென்னை மாநிலம்
d) எஸ்.பி.குப்தா எ. இந்திய குடியரசுத் தலைவர்
பின்வரும் அரசமைப்பு சட்ட ஷரத்துக்களில் எது அரசுப்பணி குறித்தவற்றில் சம வாய்ப்பு பற்றி கூறுகிறது?
a) ஷரத்து 14
b) ஷரத்து 15
c) ஷரத்து 16
d) ஷரத்து 21
தனி நபர் சுதந்திரம் என்பது?
a) உரிமையியல் உரிமை
b) அரசியல் உரிமை
c) பொருளாதார உரிமை
d) அடிப்படை சுதந்திரம்
TNPSC Indian Constitution Model Question 20-01-2020
TNPSC CURRENT AFFAIRS AYAKUDI 05-01-2020
DOWNLOAD OUR ANDROID APP
Recent Comments