TNPSC History Study Material Radical Nationalists
Table of Contents
1890 களின் பிற்பகுதியில் இந்திய தேசிய காங்கிரசுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் வளர்ந்தன.
பியின் சந்திரபால், பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்ற தலைவர்கள் வெறுமனே மனுக்கள் எழுதுவது, மன்றாடிக் கேட்டுக் கொள்வது, விண்ணப்பம் செய்வது போன்ற அணுகுமுறைகளுக்கு மாற்றாகத் தீவிரமான அணுகுமுறைகளுக்கு பரிந்துரைத்தனர்.
இத்தன்யுைடையோர் மிதவாத தேசியவாதிகளுக்கு நேரெதிராக ‘தீவிர தேசியவாதிகள்‘ என்றழைக்கப்பட்டனர்.
1897 இல் திலகர் ‘சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்’ என முழங்கிய போது அவர்களின் நோக்கம் தெளிவாக தெரிந்தது.
தங்களது மனுக்கள், பிரார்த்தனைகள் மூலமாக மிதவாதிகள் தேசியவாதிகள் கேட்டுக் கொண்டிருந்த பொருளாதார அல்லது நிர்வாகச் சீர்திருத்தங்களுக்குப் பதிலாகத் திலகரும் தீவிரப்போக்குடைய அவருடையத் தொண்டர்களும் சுயராஜ்ஜியத்தை கோரினர்.