Search
Generic filters
Exact matches only

TNPSC History Study Material 9 Online Free

0 3 years ago
TNPSC History Study Material 9

TNPSC History Study Material 9

TNPSC History Study Material 9 Online

 தாதாபாய் நௌரோஜி

TNPSC History Study Material 9 Online Free 1
TNPSC History Study Material 9

இந்திய தேசியத்தின் முதுபெரும் தலைவர் என அறியப்படும் தாதாபாய் நௌரோஜி தொடக்க கால தேசிய இயக்கத்தின் முக்கியத் தலைவர்களுள் ஒருவராவர்.

TNPSC History Study Material 9

 

டி.பி.மெக்காலே

TNPSC History Study Material 9
Image Courtesy Wikipedia

1835 இல் இந்தியக் கவுன்சில் ஆங்கிலக் கல்வி சட்டத்தை இயற்றியது. இந்தியாவில் அறிமுகமான ஆங்கிலக் கல்விமுறையை வடிவமைத்தவர் டி.பி.மெக்காலே ஆவார். இதன் விளைவாக காலனிய நிர்வாகம், ஆங்கில

நவீனக் கல்வியை வழங்கும் பள்ளிகளையும், கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் இந்தியாவில் தொடங்கிற்று. 1857 இல் பம்பாய், சென்னை, கல்கத்தா ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்கள்

நிறுவப்பட்டன. இந்தியர்களில் படித்த வகுப்பினர் ஆங்கிலேயர்க்கு விசுவாசமாக இருப்பதோ ஆங்கில அரசின் தூண்களாகவும் திகழ்வர் என காலனியரசு எதிர்பார்த்தது.

 

ஒத்துழையாமை இயக்கம்

கால வரிசைப்படி
1. 1919 இல் மார்ச் மாதம் ரௌலட் சட்டத்தை அரசு நிறைவேற்றியது. எந்தவித நீதிமன்ற விசாரணையின்றி எவரையும் சிறையில் அடைக்க அரசுக்கு இந்தச் சட்டம் அதிகாரமளித்தது.

2.1919 ஏப்ரல் 13இல், அமிர்தரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் பகுதியில் நிராயுதபாணிகளான மக்கள் திரள் மீது கொடுமையான அரசியல் குற்றங்கள் இழைக்கப்பட்டன. அரசு தகவலின் படி 379 என்ற போதிலும் உண்மையில் 1000 த்திற்கு மேற்பட்டோர் இறந்திருக்கக் கூடும்.

3. 1920 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் சிறப்பு அமர்வில் காலணி ஆதிக்க அரசுடன் ஒத்துழையாமையைக் கடைப்பிடிப்பது என்ற காந்தியடிகளின் யோசனைகளை ஏற்றுக்கொள்ளும்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4. 1922 பிபரவரி 2 இல் 300 நபர்களுடன் நடந்த ஒரு காங்கிரஸ் கட்சிப் பேரணி மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக் குழுவினர் காவல் நிலையத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதோடு அதை எரித்ததில் 22 போலீசார் உயிரிழந்தனர். இந்த நிகழ்வை அடுத்து காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை
திரும்பபெறுவதாக அறிவித்தார்.

 

 

பிர்சா முண்டா

TNPSC History Study Material 9 Online Free 2
TNPSC History Study Material 9

ராஞ்சியில் நடைபெற்ற பெரிய கலகம் இந்தியாவில் நடைபெற்ற பழங்குடியினக் கிளர்ச்சிகளில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 1890-களில் பழங்குடியின மக்களை அவர்கள் வாழும் பகுதியிலிருந்து இடம்பெயரச் செய்வது மற்றும் அவர்களைக் கட்டாயத் தொழிலாளிகளாக உருவாக்குவது ஆகியவற்றை பழங்குடியினத் தலைவர்கள் எதிர்த்தனர்.

 

இவர்களுக்கு பிர்சா முண்டா என்பவர் தலைமை தாங்கினார். கலவரத்தில் காவல் நிலையங்களும் அரசு அதிகாரிகளும் தாக்கப்பட்டனர். இறுதியாக ஆங்கிலேய அரசு கிளர்ச்சியை ஒடுக்கியது.

பிர்சா முண்டா கைது செய்யப்பட்டு பின் சிறையில் உயிர் நீத்தார். இதன் பின்பு 1908 இல் சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு பழங்குடியினர் நிலத்தில் பழங்குடியினரல்லாதோர் நுழைவது தடுக்கப்பட்டது.

 

மகாஜனபதங்கள்

TNPSC History Study Material 9 Online Free 3
Magajanapadas

வட இந்தியா, வடக்கே காபூல் பள்ளத்தாக்கிலிருந்து தெற்கே கோதாவரி வரை பரவியிருந்தது. இங்கு காசி, கோசலம், அங்கம், மகதம், வஜ்ஜி, மல்லா , சேதி, வட்சா , குரு, பாஞ்சாலம், மத்சயம், சூரசேனம், ஆசாகம், அவந்தி, காந்தாரம், காம்போஜம் என்று 16 மகாஜனபதங்கள் தோன்றின.

 

 

பாரசீகம்

பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பாக முகலாயர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் நாட்டின் பெரும் பகுதிகளை ஆட்சி செய்தனர். ஆளும் வாக்கங்களான இறையாண்மையுள்ள அரசுகள், நிலப்பிரபுக்கள், படைத்தளபதிகள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் முஸ்லீம்களாக இருந்ததால் முஸ்லிம்களில் பெரும்பாலானோர் சில சலுகைகளை ஆளும் வர்க்கத்தினடமிருந்து பெற்றனர். அலுவலக மொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் பாரசீக மொழி இருந்தது.

 

கான்பூர் சதி வழக்கு

 

கான்பூர் சதி வழக்கு விசாரணையும் சிறைத் தண்டனையும் இந்தியாவில் கம்யூனிஸ்ட்களின் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஒரளவுக்கு ஊட்டியது.

 

மக்கள் தொகை கணக்கெடுப்பு

ribbon

நாட்டை மேலும் சிறப்பாக நிருவகிக்கும் பொருட்டு ரிப்பன் பிரபு மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையை 1881 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தினார்.

 

நீதிக் கட்சியின் துணைத் தலைவர்

TNPSC History Study Material 9 Online Free 4
TNPSC History Study Material 9

மயிலை சின்னதம்பி ராஜா (1883 – 1943) மக்களால் எம்.சி.ராஜா என அழைக்கப்பட்ட அவர் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலைவர்களில் முக்கியமானவர். ஒரு ஆசிரியராகத் தனது பணியை தொடங்கிய அவர் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றுக்கான பல்வேறு பாடப்புத்தகங்களை எழுதினார்.

தென்னந்திய நல உரிமைச் சங்கத்தை (நீதிக் கட்சி) உருவாக்கியவர்களில் ஒருவராவார்.

சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் உறுப்பினராவார் (1920 – 1926) சென்னை சட்டசபையில் நீதிக் கட்சியின் துணைத் தலைவராக செயல்பட்டார்.

 

வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும்

 

TNPSC History Study Material 9 Online Free 5
Image Courtesy Amazon

தாதாபாய் நௌரோஜி-யின் வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும்’ எனும் புத்தகமே இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அவர் செய்த முக்கிய பங்களிப்பாகும்.

இந்நூலில் அவர் செல்வச் சுரண்டல் எனும் கோட்பாட்டை முன் வைத்தார்.

எந்த நாடாக இருந்தாலும் வசூலிக்கப்பட்ட வரியை அந்நாட்டு மக்களின் நல்வாழ்விற்காகவே செலவழிக்க வேண்டும்.

ஆனால் பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலேயர் வசூலிக்கும் வரி இங்கிலாந்தின் நலனுக்காக செலவு செய்யப்படுகிறது எனக் கூறினார்.

TNPSC History Study Material

DOWNLOAD OUR ANDROID APP

TNPSC History Study Material 9 Online Free 6

Leave a Reply