
TNPSC History Study Material 6 Free
மருது சகோதரர்கள்
கட்டபொம்மனின் சகோதரர்களான ஊமைத்துரையும், செவத்தையாவும் பிப்ரவரி 1801 இல் பாளையங்கோட்டைச் சிறையிலிருந்து தப்பி கமுதியில் பதுங்கியிருப்பதை அறிந்த சின்ன மருது அவர்களைத் தமது தலைமையிடமான சிறுவயலுக்கு அழைத்துச் சென்றார். பாஞ்சாலங்குறிச்சி கோட்டை மிக குறைந்த காலத்தில் மீண்டும் கட்டி முடிக்கப்பட்டது.
காலின் மெக்காலே தலைமையிலான பிரிட்டிஷ் படைகள் ஏப்ரலில் மீண்டும் கோட்டையை முற்றுகையிட்டதால் அவர்கள் மருது சகோதரர்களிடம் சிவகங்கையில் அடைக்கலம் கோரினர்.
தப்பியோடியவர்களை (ஊமைத்துரையும், செவத்தையாவும் ) ஒப்படைக்கும்படி மருது சகோதரர்கள் வலியுறுத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் மறுத்து விட்டார்கள். இதையடுத்து கானல் அக்னியூம், கானல் இன்னஸும் சிவகங்கையை நோக்கி படைநடத்திச் சென்றனர்.
திருச்சிராப்பள்ளி பேரரறிக்கை
மருது சகோதரர்கள் ஜூன் 1801 இல் நாட்டின் விடுதலையை முன்னிருத்திய ஒரு பிரகடனத்தை வெளியிட்டனர். இதுவே திருச்சிராப்பள்ளி பேரரறிக்கை என்றழைக்கப்படுகிறது.
சைமன் குழு
1929 – 30 ஆம் ஆண்டில் அரசியல் சாசன சீர்திருத்தங்களின் முதல் தவணையை பிரிட்டிஷார் பரிசீலித்து அறிவிக்க வேண்டியிருக்கிறது. இதன் ஆயத்தத்தில் சட்ட உருவாக்க குழுவான சைமன் குழு நிறுவப்பட்டது.
அதன் தலைவரான சைமனின் பெயரில் இந்தக் குழு அமைந்தது. வெள்ளையர்கள் மட்டுமே இந்தக் குழுவில் உறுப்பினராக இருந்தனர். அது இந்தியர்களுக்கு
அவமானமாகக் கருதப்பட்டது.