
TNPSC History Study Material 5 Free
TNPSC History Study Material 5 Free
குரு அர்ஜீன் சிங்
10வது குருவான குருகோவிந்த்சிங், சீக்கியர்களின் சின்னங்களாக கீழ்காண்பவற்றை அறிவித்தார்
பஞ்ச காக்கர் என்னும் ஐந்து அடையாளங்கள் (5K)
- 1. கேஷ் – வெட்டப்படாத முடி
- 2. கங்க – மரத்தாலான சீப்பு
- 3.கச்சாஹெரா – அரைகால் சட்டை
- 4. கரா- இரும்புக் கைவளையல்
- 5. கிர்பான் – குறுவாள்
சீக்கியர்களின் வழிபாட்டுத் தலங்கள் குருத்துவாராக்கள் என அழைக்கப்படுகின்றன. அங்கு அதிகிரந்தம் வைக்கப்பட்டிருக்கும். அதில் லாங்கர் என்னும் சமபந்தி உணவு கூடங்களும் அமைந்திருக்கும்.
சீக்கிய சமயத்தில் இரு பிரிவுகள் காணப்படுகிறது.
அவை 1.நாம்தாரி 2. நிரங்காரி ஆகும்.
நாம்தாரி : (குருவிடமிருந்து வார்த்தைகளைப் பெற்றவர்கள்) நிறுவியவர் பாபா ராம்சிங்.)
நிரங்காரி : (உருவமற்ற இறைக்கொள்கை) – நிறுவியவர் பாபா தயாள்தாஸ்.
கால்சா அமைப்பு கால்சா என்றால் தூய்மை எனப் பொருள். இதில் சேருபவர்கள் அகாலி (இறவாதவன்) என அழைக்கப்பட்டனர். பத்தாவது குரு கோவிந்தசிங் இவ்வமைப்பை தோற்றுவித்தவர். ஒன்பதாவது குரு தேஜ்பகதூரை முகலாய பேரரசர் ஒளரங்கசீப் கொன்றதால், கோபமடைந்த கோவிந்தசிங் சீக்கிய சமயத்தினரை இராணுவ அமைப்பாக மாற்றினார். இதுவே கால்சா எனப்படுகிறது.
மதன் மோகன் மாளவியா
அன்னிபெசன்ட் அம்மையார் இந்தியாவுக்கு 1893 இல் வந்தார். பனாரஸில் (வாரணாசியில்) மத்திய இந்துக் கல்லூரியை அவர் நிறுவினார்.
(பின்னர் இந்தக் கல்லூரி 1916 ஆம் ஆண்டு பண்டித மதன் மோகன் மாளவியா மூலமாக பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகமாக மேம்படுத்தப்பட்டது)
மகாவம்சம்
இலங்கையின் புத்த சமய வரலாற்றைக் கூறும் மகாவம்சம் என்ற நூல் பாலி மொழியில் எழுதப்பட்டது. தென்னிந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இருந்த வணிகர்கள் குறித்தும் குதிரை வணிகர்கள் குறித்தும் இந்நூல் குறிப்பிடப்படுகிறது.
தயானந்த சரஸ்வதி
பஞ்சாபில், ஆரிய சமாஜம் சீர்திருத்த இயக்கங்களுக்குத் தலைமையேற்றது.
இவ்வமைப்பு மேலைகங்கை சமவெளியில் அலைந்திரிந்து கொண்டிருந்த சுவாமி தயானந்த சரஸ்வதி (1824 – 83) என்பவரால் நிறுவப்பட்டது.
சுவாமி தயானந்த சரஸ்வதி (1824 – 83) என்பவரால் நிறுவப்பட்டது.
சுவாமி தயானந்தர் பின்னர் தனது கருத்துக்களைப் போதிப்பதற்காகப் பஞ்சாபில் தங்கினார்.
அவருடைய நூலான ‘சத்யார்த்த பிரகாஷ்’ பெரும்பாலோரால் படிக்கப்பட்டது
TNPSC History Study Material 5 Free
பொருளாதார பெரு மந்தம்
1929 – 1930 களில் தோன்றிய பொருளாதார பெரு மந்தம் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
கிரேட் பிரிட்டனின் காலணியாக இருந்த இந்தியா மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது.
கஜினி மாமுது
32 ஆண்டுகள் ஆட்சி புரிந்த கஜினி மாமுது, பதினேழு முறை இந்தியா மீது தாக்குதல்களை நடத்தினார்.
செல்வக் களஞ்சியமாக இருந்த இந்துக் கோயில்களில் கொள்ளை அடிப்பதே முதன்மை நோக்கம்.
இருப்பினும் கோயில்களை இடிப்பது, சிலைகளை தகர்ப்பது ஆகிய நடவடிக்கைளும் நடந்தன.
இதை கஜினி மாமுதுவின் படை வீரர்கள், தங்களது கடவுளின் வெல்லப்பட முடியாத ஆற்றலின் விளைவாக கண்டனர்.
இயக்கம்
நாமதத்ரா இயக்கம் – கிழக்கிந்தியா
அதி தர்ம இயக்கம் – வடமேற்கு இந்தியா
சத்ய சோதக் இயக்கம் – மேற்கு இந்தியா
திராவிட இயக்கம் -தென்னிந்தியா
சர் ஜான் கிரடாக்
1805 இல் பஞ்சம் ஏற்பட்டதாலும் பல சிப்பாய்களின் குடும்பங்கள் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தன.
திப்புவின் மகன்களும் அவர் தம் குடும்பத்தினரும் வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்ட வேளையில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் அந்த வாய்ப்பு கூடி வந்தது.
புரட்சி ஏற்படுவதற்கான இயக்க சக்தியாக தலைமைத் தளபதி (Commander – in – Cheif) சர் ஜான் கிரடாக் வெளியிட்ட புதிய இராணுவ விதிமுறை அமைந்தது.
புதிய விதிமுறைகளின் படி, இந்திய வீரர்கள் சீருடையிலிருக்கும் போது, சாதி அடையாளங்களையோ, காதணிகளையோ அணியக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
அவர்கள் தாடையை முழுமையாகச் சவரம் செய்யவும் மீசையை ஒரே பாணியில் வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டார்கள்.
புதிய வகைதலைப்பாகை எரிகிற தீயில் எண்ணெய் சேர்ப்பது போலானது. மிகவும் ஆட்சேபனைக்குரிய செயலாகக் கருதப்பட்டது.
தலைப்பாகையில் வைக்கப்படும் விலங்கு தோலினால் ஆன இலட்சினையாகும்.
புதிய தலைப்பாகையை அணிவதில் தங்களுக்கு உடன்பாடில்லை என்று இந்திய சிப்பாய்கள் போதுமான முன்னெச்சரிக்கை விடுத்தனர். ஆனால் கம்பெனி நிர்வாகம் அதனை கவனத்தில் கொள்ளவில்லை.
தமிழ் – பிராமி
கி.மு (பொ.ஆ.மு) மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழ்ப்பண்பாடு தோன்றி விட்டது.
தமிழ்நாட்டில் முதல் நகரமயமாதல் உருவானது. தலைநகரங்களும் துறைமுகப்பட்டினங்களும் தோன்றின.
நாணயங்களும் பணமும் புழக்கத்திற்கு வந்தன. தமிழ் பிராமி என்ற வரி வடிவத்தில் தமிழ் மொழி முதன் முதலில் எழுதப்பட்டது.
ஆவணங்கள் உருவாக்கப்பட்டன. செம்மொழித் தமிழ்ச் செய்யுள்கள் இயற்றப்பட்டன.
TNPSC History Study Material 5 Free
DOWNLOAD OUR ANDROID APP
TNPSC History Study Material 5 Free