Search
Generic filters
Exact matches only

TNPSC History Study Material 23-05-2020 Important

1 2 years ago
TNPSC History Study Material 23-05-2020 Important 1

TNPSC History Study Material 23-05-2020

TNPSC History Study Material 23-05-2020

TNPSC History Study Material 23-05-2020 for Group 1, Group 2, Group 4

தீவிர தேசியவாதிகள்

1890 களின் பிற்பகுதியில் இந்திய தேசிய காங்கிரசுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் வளர்ந்தன.

பியின் சந்திரபால், பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்ற தலைவர்கள் வெறுமனே மனுக்கள் எழுதுவது, மன்றாடிக் கேட்டுக் கொள்வது, விண்ணப்பம் செய்வது போன்ற அணுகுமுறைகளுக்கு மாற்றாகத் தீவிரமான அணுகுமுறைகளுக்கு பரிந்துரைத்தனர்.

இத்தன்யுைடையோர் மிதவாத தேசியவாதிகளுக்கு நேரெதிராக தீவிர தேசியவாதிகள்’ என்றழைக்கப்பட்டனர்.

1897 இல் திலகர் ‘சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்’ என முழங்கிய போது அவர்களின் நோக்கம் தெளிவாக தெரிந்தது.
தங்களது மனுக்கள், பிரார்த்தனைகள் மூலமாக மிதவாதிகள் தேசியவாதிகள் கேட்டுக் கொண்டிருந்த பொருளாதார அல்லது நிர்வாகச் சீர்திருத்தங்களுக்குப் பதிலாகத் திலகரும் தீவிரப்போக்குடைய அவருடையத் தொண்டர்களும் சுயராஜ்ஜியத்தை கோரினர்.

 

சோழர்  கால அதிகாரிகள்

சோழர் ஆட்சிக் காலத்தில் மன்னரின் கீழ் செயல்ப்பட்ட அதிகாரிகள் சிறுதனம் மற்றும் பெருந்தனம் என அழைக்கப்பட்டனர்.

 • திருவாய் கேள்வி – அரசனின் ஆணைகளை வெளியிடுபவர்.
 • திருமந்திர ஓலை நாயகம் – அரசின் ஆணைகளை ஓலையில் எழுதுபவர்.
 • கருமவிதிகள் – ஆணைகளை நாட்டின் பல இடங்களுக்குக் கொண்டு செல்பவர்.
 • புரவரி திணைக்களத்தூர் – நிலவரிக் கழகம்
 • வரிபொத்தகக் கணக்கு – தணிக்கை அதிகாரி
 • திருமுகக் கணக்கு – அரண்மனைக் கணக்காளர்
 • நாடுவகை செய்வார் – விளை நிலத்தின் தரத்தைப் பிரிப்பவர்
 • நாடு காவல் அதிகாரி – நாட்டில் அமைதியை நிலைநாட்டுபவர்

போன்றோர் அரசவையில் இடம்பெற்றிருந்தனர்.

 

இந்தியாவின் தேசிய நதி

2008 ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய நதியாகக் கங்கை அறிவிக்கப்பட்டது.

இந்தியாவின் நீளமான நதி, புனிதமான நதி, மிக அதிக எண்ணிக்கையிலான துணை நதிகளைப் பெற்றுள்ள நதி என்று பல சிறப்புகளைக் கங்கை நதி பெற்றுள்ளது.

 

பெரும் குளம்  The Great Bath

பெரும் குளம் என்பது முற்றத்துடன் கூடிய பெரிய குளமாகும் .

அதன் சுவர்கள் ஜிப்சம் செறிந்த சுண்ணச்சாந்தல் பூசப்பட்டு நீர் புகாதபடி இருக்கும்

கழிவுநீர் வடிகால் அமைப்பு காணப்படும்

சில கட்டுமான அமைப்புகள் தானிய கிடங்குகளாக அடைலயம் காணப்படுகிறது

 

சூஃபி

சூஃபி என்ற சொல் சஃபா என்ற சொல்லிலிருந்து வந்தது. இதற்கு தூய என்பது பொருளாகும்.

ஒழுக்கமான தூய நெறிகளுடைய வாழ்க்கையை வலியுறுத்துகிறது.
இஸ்லாமிய சமயத்தில் தாராள ஆன்மீகத்தை மையப்படுத்திய கோட்பாட்டைக் கூறுகிறது.

இதன் மூலம் இந்து முஸ்லீம் ஒற்றுமையைச் சூஃபிக்கள் நிலைநாட்டினர்.

சூஃபியிசத்தில் பக்தியின் அடிப்படையில் ஐந்து பிரிவுகள் உள்ளன.
அவையாவன

 • 1) சிஸ்தி
 • 2) சுகவார்தி
 • 3) குவாதிரி
 • 4) நக்சாபந்தி
 • 5) ஷாதார்

ஆகியவையாகும்.

இப்பிரிவுகள் இந்தியாவில் இந்து மற்றும் இஸ்லாமிய பண்பாட்டு இணைப்பிற்கும் பாலமாக செயல்பட்டன.

குவாஜா மொய்னுதீன் சிஸ்தி, ஷேக் ஃபரீத், ஷேக் நிசாமுதீன் அவுலியா ஆகியோர் புகழ்பெற்ற சூஃபி ஞானிகள் ஆவர்.

 

ஹரப்பா

ஹரப்பா மக்கள் ஆடு மாடு வளர்த்தலை பற்றி அறிந்திருந்தார்கள். வெள்ளாடுளையும் வளர்த்தார்கள். ஆனால் குதிரைகளை பயன்படுத்தவில்லை.
ஹரப்பாவின் மாடுகள் ஜெபு என்றழைக்கப்படும். இது ஒரு பெரிய வகை மாட்டின் இனம்.

சிந்துவெளி முத்திரைகளில் இவ்வகையான பெரிய காளை உருவம் பரவலாகக் காணப்படுகிறது.

ஹரப்பா பண்பாட்டு மக்கள் செர்ட் என்ற சிலிகா கல் வகையில் செய்த பிளேடுகள், கத்திகள், செம்புப் பொருட்கள், எலும்பாலும் தந்தத்தாலும் செய்யப்பட்ட கருவிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார்கள்.

இரும்பின் பயனை அவர்கள் அறியவில்லை.

கூர்மையான கருவிகள், உளிகள், ஊசிகள், மீன் தூண்டில் முட்கள், கத்திகள், நிறுவைத் தட்டுகள், முகம் பார்க்கும் கண்ணாடி, அஞ்சனம் தீட்டும் குச்சி ஆகியவை செம்பால் செய்யப்பட்டன.

செம்பில் செய்த அம்புகள், ஈட்டிகள், உளி, கோடாரி ஆகிய கருவிகளைப் பயன்படுத்தினார்கள்.

மொஹஞ்சதாரோவில் கிடைத்துள்ள நடனமாடும் பெண்ணின் சிலை, அவர்களுக்கு மெழுகு அச்சில் உலோகத்தை உருக்கி ஊற்றி சிலை வார்க்கும் லாஸ்ட் வேக்ஸ் தொழில்நுட்பம் தெரிந்திருக்கிறது என்பதை காட்டுகிறது.

1916ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின் முக்கியத்துவம்

மாகாணசபைத் தேர்தல்களில் முஸ்லிம்களுக்கு தனித்தொகுதிகள் வழங்க காங்கிரஸ் ஒப்புக் கொண்டது.

இந்து மற்றும் சீக்கிய சிறுபான்மையினருக்கு சில இடங்கள் வழங்கப்பட்ட பஞ்சாப் மற்றும் வங்காளம் தவிர அனைத்து மாகாணங்களிலும் அவர்களுக்கு சாதகமாக முன்னுரிமைகளை வழங்கவும் காங்கிரஸ் ஒப்புக் கொண்டது.

 

தீவிர தேசியவாதிகள் மாநாடு

1906க்கு பின் காங்கிரஸின் அடுத்த மாநாடு தீவிர தேசியவாதிகளின் கோட்டை எனக் கருதப்பட்ட பூனாவில் நடைபெறத் திட்டமிடப்பட்டது.

கல்கத்தா மாநாட்டு முடிவுகளால் அச்சம் கொண்டிருந்த மிதவாத தேசியவாதிகள் மாநாடு நடைபெறுமிடத்தைச் சூரத் நகருக்கு மாற்றினார்.

காங்கிரஸின் அடுத்த தலைவர் பொறுப்புக்கு மிதவாத தேசியவாதிகளின் வேட்பாளாரான ராஷ்பிகாரி கோஷ் என்பாருக்கு எதிராகத் ‘தீவிர தேசியவாதிகள் லாலா லஜபதி ராயின் பெயரை முன்மொழிந்தனர்.

 

இயக்கத்தில் பிளவு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக லாலா லஜபதி ராய் போட்டியிட மறுத்தார்.

1906 இல் கல்கத்தா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்களைப் பின்பற்றுவதா? இல்லையா என்ற கேள்வியை ஒட்டி நிலைமை கொதி நிலையை எட்டியது.

பெரரோஸ்ஷா மேத்தாவின் குழு இந்த தீர்மானங்களை நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கப்பட வேண்டுமெனக் கோரியது.

பெரோஸ்ஷாவின் இத்தகைய திட்டத்தை எதிர்கொள்ளத் தீவிர தேசியவாதிகள் ராஷ் பீகாரி கோஷ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதை எதிர்க்க முடிவு செய்தனர். மாநாடு குழப்பத்தில் முடிந்தது.

 

இரண்டாவது லாகூர் சதி வழக்கு

ராஜ குரு, சுகதேவ், ஐதீந்திரநாத் தாஸ் ஆகியோருடன் பகத்சிங்கும் மேலும் 21 பேரும் கைது செய்யப்பட்டனர்.

சாண்டர்ஸ் கொலை தொடர்பான விசாரணைக்கு அவர்கள் ஆளாக்கப்பட்டனர். (இந்த வழக்கு இரண்டாவது லாகூர் சதி வழக்கு என்று அறியப்படுகிறது) சிறையின் மோசமான நிலைமைகள், பாரபட்சமான நடவடிக்கைகள் ஆகியவற்றை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்ட ஐதீந்திரநாத் தாஸ் 54 நாட்களுக்குப் பின்னர் சிறையிலேயே மரணம் அடைந்தார்.

லாகூர் சதி வழக்கின் விசாரணைகள் முடியும் வரை குண்டு வீச்சு வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தான் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு 1930 அக்டோபர் 7 அன்று மரண தண்டணை விதிக்கப்பட்டது.

 

சுல்தான் – அமைச்சர்கள்

சுல்தான் தன் கடமைகளை நிறைவேற்றுவதற்காகவும், அவருக்குத் தக்க ஆலோசனைகள் வழங்கவும் அமைச்சர்கள் துணை புரிந்தனர்.

 • 1. வாசீர் – நிதி அமைச்சர்
 • 2. திவான் இன்ஷா – செய்தி மற்றும் ஆவணக் காப்பகம்
 • 3.திவானி ரிசாலத் = சமயத்துறை
 • 4. பாரித் – ஐ – முமலிக் உள வுத்துறை
 • 5.தலைமை காஸி- நீதித்துறைத் தலைவர்
 • 6. அரிஸ் இ மாமலிக் – தலைமைத் தளபதி
 • 7. நயிப் – சுல்தான் சுல்தானுக்கு அடுத்தவர். ஆனால் எல்லா உரிமைகளையும் பெற்றவர்.

 

TNPSC History Important Online Test 3

DOWNLOAD OUR ANDROID APP

TNPSC History Study Material 23-05-2020 Important 2

pdf  தேவைப்பட்டால் கமெண்ட் செய்யவும்

1 comments

Leave a Reply