TNPSC History Study Material 20-05-2020

TNPSC History Study Material 20-05-2020 Important

TNPSC History Study Material 20-05-2020

TNPSC History Study Material 20-05-2020

Folklore

நாட்டுப்புறவியலைக் குறிக்கும் என்ற Folklore சொல்லை , 1846 இல் வில்லியம் ஜான் தாமசு என்பவர் உருவாக்கினார். ‘பழங்கால பண்பாட்டின் எச்சம் நாட்டுப்புறவியல் என்பது அவரது கருத்தாகும்.

மீராபாய்

இரஜபுத்திர அரச குடும்பத்தை சார்ந்தவர்.

தமது கருத்துக்களை வட்டார மொழியான ப்ரிஜ் மொழியில் பரப்பினார். ( திருத்தம் )

பக்தி நெறியை சுவையான பாடல்கள் மூலமாகப் பரப்பினார்.
கிருஷ்ணரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

 

சிந்து சமவெளி நாகரீகம்

ஏறத்தாழ பொ.ஆ.மு 1900 இல் சிந்து சமவெளி நாகரீகம் வீழ்ச்சி அடைந்தது.
காலநிலை மாற்றம், மெசபடோமியாவுடனான வணிகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி, தொடர்வறட்சியின் காரணமாக ஆறுகள் மற்றும் நீர் நிலைகளில் மறைவு ஆகியவை வீழ்ச்சிக்கான காரணங்களாக வரலாற்றாசிரியர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
சிந்து நாகரீகத்தின் அழிவுக்குப் படையெடுப்பு, வெள்ளம், ஆறு  தன் போக்கை மாற்றிக் கொண்ட நிகழ்வு ஆகிய காரணங்களும் முன்வைக்கப்படுகின்றன.

 

தர்மச்சக்கரபரிவர்த்தனா

புத்தர்  வாரணாசிக்கு அருகே உள்ள சாரநாத்தில் மான்கள் நிறைந்த ஒரு காட்டில் அவர் தனது முதல் உபதேசத்தை அளித்தார்.
அது தர்மச்சக்கரபரிவர்த்தனா எனப்படுகிறது. அவர் நான்கு சிறந்த உண்மைகள் பற்றியும், மத்திமப் பாதை பற்றியும் பேசினார்.
அவர் சத்சங்கத்தை அமைத்து, தன் கருத்துக்களை வெகு தொலைவில் உள்ள இடங்களுக்கும் பரப்பினார்.

 

ஹரப்பா

காலிபங்கனில் வேள்வி பீடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஹரப்பா மக்கள் இறந்தோரைப் புதைத்தனர்.
புதைப்பதற்கான நடைமுறைகள் விரிவாக இருந்தன. இறந்த உடல்களை எரித்தற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.
ஹரப்பா புதைகுழிகளில் மட்பாண்டங்கள், அணிகலன்கள், தாமிரக்கண்ணாடி, மணிகள் ஆகியவை கிடைத்துள்ளன.
இறப்பிற்கு பின்னரான வாழ்க்கை பற்றிய அவர்களின் நம்பிக்கையை இவை குறிக்கலாம்.

‘மேன்மையான சிந்தனைகள் எல்லாப் பகுதிகளிலிருந்தம் நம்மிடம் வரட்டும்’ என்று ரிக் வேதம் கூறுகிறது.

 

 புத்த பீடகம்

விநய பீடகம், பௌத்த துறவிகளுக்கான சட்டதிட்டங்கள், ஞான ஒழுக்க முறைகள் ஆகியவற்றை பற்றிக் கூறுகிறது. சுத்த பீடகம், புத்தரின் அறிவுரைகளை கூறுகிறது.

 

 

ஹரப்பா மக்களின் கலைத்திறன்

ஹரப்பா நாகரிகப் பகுதிகளிலிருந்து கிடைக்கும் சுடுமண் உருவங்கள், மட்பாண்டங்களில் காணப்படும் ஓவியங்கள், வெண்கல உருவங்கள் ஆகியவை ஹரப்பா மக்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன.
ஸ்டீட்டைட் கல்லில் அமைந்த மத குரு, செம்பாலான நடனமாடும் பெண் (மொகஞ்சதாரோவிலும் இது போன்ற சிலை கிடைத்துள்ளது), ஹரப்பா, மொஹஞ்சதாரோ, டோலாவிரா ஆகிய இடங்களில் கிடைத்த கல் சிற்பங்கள் ஆகியவை ஹரப்பாவின் கலைப்படைப்புகளாகும்.
பொம்மை வண்டிகள், கிலுகிலுப்பைகள், சக்கரங்கள், பம்பரங்கள், சதுரங்கவிளையாட்டில் பயன்படுத்தப்படுவதைப் போன்ற காய்கள், கட்டங்கள் வரையப்பட்ட பலகைகள் ஆகியவை ஹரப்பா மக்களின் பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்குச் சான்றாகும்.

 

 

ஆதிச்ச நல்லூர்

 • ஆதிச்ச நல்லூர் திருநெல்வேலியிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
 • 1876 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த இயற்கைவியலாளரும், இன வரைவியலாளருமான ஆண்டிரு ஜாகர் ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வை மேற்கொண்டார்.
 • அங்கிருந்து சுடப்பட்ட மட்பாண்டங்கள் பல அளவுளிலும் வடிவங்களிலுமான பாத்திரங்கள் ஆகியவற்றின் மாதிரிகளையும் கணிசமான எண்ணிக்கையில் இரும்புக் கருவிகள், ஆயுதங்கள், பெருமளவிலான எலும்புகள், மண்டையோடுகள் ஆகியவற்றையும் தன்னோடு எடுத்துச் சென்றார்.
 • தற்போது அவையனைத்தும் பெர்லின் அருங்காட்சியகத்தில் உள்ளன.

 

அஷ்டதிக்கஜங்கள்

கிருஷ்ணதேவராயர் அவையில் அஷ்டதிக்கஜங்கள் எனப்பட்ட எட்டுப் புலவர்கள் இருந்தனர்.

 • அல்லசாணி பெத்தண்ணா – மனுசரிதம்
 • நந்தி திம்மண்ணா –  பாரி ஜாதப கரணமு
 • துர்ஜாதி – காளத்தி  மகாத்மியம்
 • பிங்காலி சூரன்னா- பிரபாவதிபிரத்யும்
 • தெனாலி ராம கிருஷ்ணர்  – விகடகவி
 • மதகிரி மல்லார்ணா  — இராஜகேசர சரித்திரமு
 • ஹயலாராஜீபத்ரடூ   – ராமபுத்யாமு
 • இராமராஜ பூஷணர்  — வசுசரித்திரம்

 

TNPSC Group 1 History

TNPSC Group 2 History

TNPSC Group 4 History

 

TNPSC History Study Material 18-05-2020

DOWNLOAD OUR ANDROID APP

TNPSC History Study Material 20-05-2020 Important 1

 

Leave a Reply