
TNPSC History Study Material 18-05-2020
இன்று மாலை இதிலிருந்து கேள்விகள் கேட்கப்படும் கவனமாக படிக்கவும்
TNPSC History Study Material 18-05-2020 Covers GROUP 1, GROUP 2, GROUP 4
சிந்து நாகரிகம்
- இந்தியாவின் வடமேற்குப்பகுதியிலும் பாகிஸ்தானிலும் பொ.ஆமு 3000 கால அளவில் தோன்றிய நாகரிகங்களும் பண்பாடுகளும் மொத்தமாகச் சிந்து நாகரிகம் எனப்படும்.
- இந்நாகரிகம் அடையாளம் காணப்பட்ட முதல் இடம் ஹரப்பா என்பதால், இது ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது.
- ஹரப்பா தீடீரென்று ஒரே நாளில் தோன்றிவிடவில்லை. இப்பகுதியில் புதிய கற்காலக் கிராமங்களின் தொடக்கம் நடைபெற்றது.
- ஏறத்தாழ பொ.ஆ.மு 7000 (புதிய கற்காலப் பகுதியான மெஹர்காரின் காலத்தைப் போல) எனக் கணிக்கப்படுகிறது.
- ஹரப்பா நாகரீகம் பல்வேறு கட்டங்களாகப் (படிநிலைகள்) பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.
தொடக்க கால ஹரப்பா பொ.ஆ.மு 3000 – 2600
முதிர்ச்சி அடைந்த ஹரப்பா பொ.ஆ.மு 2600 – 1900
பிறகால ஹரப்பா யொ.ஆ.மு 1900 – 1700
ஹரப்பா நாகரீக பகுதியில் கைவினை பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட இடங்கள்
சங்கு – நாகேஷ்வர், பாலகோட்
வைடூரியம் – ஷார்டுகை
கார்னிலியன் (மணி) – லோத்தல்
செம்பு – ராஜஸ்தான், ஓமன்
TNPSC History Study Material 18-05-2020
குப்த பேரரசு சுருக்கமான குறிப்புகள்
- குப்த பேரரசு சுருக்கமான குறிப்புகள் மௌரிய பேரரசிற்குப் பின்னர், குப்தப் பேரரசு பெரும் ஆற்றல் மிக்கதாக உருவானது.
- ஸ்ரீகுப்தர், குப்தப் பேரரசைத் தோற்றுவித்தார் சமுத்திர குப்தர் (335 – 375) பல பகுதிகளை கைப்பற்றி, பேரரசை ஒருங்கிணைத்தார்.
- இரண்டாம் சந்திரகுப்தர் தனது படையெடுப்புகளின் மூலமும் திருமண உறவுகள் மூலமும் பேரரசை மேலும் விரிவாக்கினார்.
- குமாரகுப்தர் நாளந்தா பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தார்.
- ஸ்கந்த குப்தர் ஹூனர்களை விரட்டியடித்தார். ஆனால் இப்போரின் காரணத்தால் அவரது அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது.
- குப்த அரசர்கள் தாம் தெய்வாம்சம் படைத்தவர்கள் என்று கூறிக் கொண்டனர்.
- அவர்களுக்கு அமைச்சர்கள் குழுவும், அதிகாரிகள் குழுவும் உதவி செய்தன.
- குப்த அரசர்கள் கலை, இலக்கியம், அறிவியல், ஆகியவற்றை ஆதரித்தனர்.
- அவர்களது அவையை காளிதாசர், அரிசேனர், அமரசிம்மர், தன்வந்திரி, வராகிமிரர் போன்றோர் அலங்கரித்தனர்.
- ஹூணர்களின் படையெடுப்பால் கருவூலம் காலியானது.
- பிற்பால குப்த அரசர்கள் வலிமை குன்றியது ஆகியன குப்த பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணங்களாயின.
கிதாப – உல் – ஹிந்த
அல்-பெருனி கஜினி மாமுதுவுடன் இந்தியா வந்தார். கிதாப – உல் – ஹிந்த என்ற தனது நூலை இயற்றுவதற்கு முன்பு அவர் சமஸ்கிருதம் கற்றுக்கொண்டார். இந்து மத நூல்களையும் தத்துவ நூல்களையும் கற்றார். ஆர்யபட்டரின் முக்கிய நூலான ஆர்யபட்டியத்தை மேலை நாடுகளுக்கு
அறிமுகப்படுத்தினார்.
சிந்து நதி
- கிரேக்கர்கள் முதன் முதலில் அறிந்த பகுதி சிந்து நதி பாயும் பகுதி என்பதால் இத்துணைக் கண்டத்தை ‘சிந்து’ என்ற அழைத்தனர்.
- தொடக்க காலத்தில் பாரசீக கிரேக்கப் படையெடுப்புகளின் விளைவால் இந்தியா, இந்துஸ்தானம் என்ற பெயர்கள் உருவாயின.
- சிந்து என்பதை அவர்கள் ஹிந்து என்று உச்சரித்தார்கள். இதனைத் தொடர்ந்து இடைக்காலத்தில் வந்த அரேபியர்களும் நமது நாட்டை ‘ஹிந்துஸ்தான்’ என்று அழைத்தனர்.
TNPSC History Study Material 18-05-2020
அமைதியில் வாழ்ந்த சுல்தான்
தில்லி சுல்தானிய ஆட்சியின் ஒட்டு மொத்த வரலாற்றில் ஆட்சி உரிமையைத் தாமாகவே துறந்து, தில்லிக்கு வெளியே ஒரு சிறிய நகருக்குச் சென்று, முழுமையாக முப்பது ஆண்டுகள் மனநிறைவோடும் அமைதியாகவும் வாழ்ந்த ஒரே சுல்தான் சய்யித் வம்சத்தில் வந்த ஆலம்ஷா .
திராவிட மொழிக் குடும்பம்
தென் திராவிட மொழிகள் | நடுத்திராவிட மொழிகள் | வட திராவிட மொழிகள் |
---|---|---|
தமிழ், மலையாளம், கன்ன டம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, இருளா | தெலுங்கு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலாமி,பர்ஜி, கதபா, நாயக்கி, பெங்கோ, முண்டா, கோண்டா, | குரூக், மால்தோ , பிராகுய் |
குத்துக்கல்
கருப்பு, சிவப்பு,. வண்ண மட்கலன்கள், மனித எலும்புச் சான்றுள் மற்றும் இரும்புப் பொருட்களுடன் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி அருகில் உள்ள வடாலைக்குண்டா எனும் இடத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இங்கு சில கற்பலகைளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகள் பழமையான குத்துக்கல் திருப்பூர் மாவட்டம் சிங்காரி பாளையம் குந்தலம் அருகே நடந்த அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
இது உப்பாறு நதிக்கரையில் பண்டைய கால மனிதாக்ளின் வாழிடங்கள் இருந்ததைச் சுட்டிக்
காட்டுகிறது.
ஈராக்கின் அரபு ஆளுநர் ஹஜஜ்பின்-யூசுஃப்
ஈராக்கின் அரபு ஆளுநர் ஹஜஜ்பின்-யூசுஃப், கடற்கொள்ளையருக்கு எதிரான நடவடிக்கை என்ற காரணம் காட்டி, சிந்து அரசர் தாகிரை எதிர்த்து, தரை வழி, கடல் வழி என இரு தனித்தனி படைப் பிரிவுகளை அனுப்பினார்.
ஆனால் இரண்டு படைப்பிரிவுகளும் தோற்றன. அவற்றின் தளபதிகளும் கொல்லப்பட்டனர். பின்பு ஒரு முழுமையான இராணுவத்தை உருவாக்கி 17 வயது நிரம்பிய தனது மருமகன் முகமது-பின்-காசிம் தலைமையில் அனுப்பி தாகீரை தோற்கடித்தார்.
பூசாரி பிராமணர்களுக்கு முக்கியத்துவம்
பூசாரி பிரமாணர்களின் ஏகபோகம் என்பதை இல்லாமல் ஆக்கியது பரமசிவனை வழிபடும் லிங்காயத் பிரிவு.
TNPSC History Study Material 18-05-2020