TNPSC GROUP IV GENERAL TAMIL REVISION TEST PART 1 DOWNLOAD

Last updated on April 29th, 2020 at 12:40 am

TNPSC GROUP IV GENERAL TAMIL REVISION TEST PART 1

TNPSC GROUP IV GENERAL TAMIL REVISION TEST PART 1

 

 1. பொருளுக்கு ஏற்ற பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுத்து எழுதுக “காத்திருந்து ஏமாந்து போவது”
  (A) மழைமுகம் காணாப் பயிர் போல )
  (B) இலவு காத்த கிளி போல
  (C) அனலிடைப்பட்ட புழு போல
  (D) கிணற்றுத் தவளை போல

 2. “தீண்டிற்கு” என்ற வினைமுற்றுச் சொல்லின் வேர்ச்சொல்லைத் தேர்க
  (A) தீண்
  (B) தீண்டி
  (C) தீ
  (D) தீண்டு

 3. இரண்டு அடி முதல் பன்னிரண்டு அடி வரை வரும் பா
  (A) வெண்பா
  (B) ஆசிரியப்பா
  (C) வஞ்சிப்பா
  (D) கலிப்பா

 4. “Whats App” என்ற சொல், பார்க்கவும் கேட்கவும் படிக்கவுமான மின்னஞ்சல் குறுஞ்செய்தி வசதியை முனைவர்.ம.இராசேந்திரன் ………………………….. என மொழி பெயர்த்துள்ளார்.
  (A) தூதுலாவி
  (B) கட்செவி அஞ்சல்
  (C) எண்ண நகலி
  (D) தூது செயலி

 5. ஒற்றளபெடையில் அளபெடுக்கும் மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை
  (A) 8
  (B) 10
  (C) 11
  (D) 12

 6. சரியான விடையைத் தேர்வு செய்க
  (A) இயல், இசை, நாடகம் முதலான முத்தமிழை வளர்த்தல் வேண்டும்
  (B) இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழை வளர்த்தல் வேண்டும்
  (C) இயல், இசை, நாடகம் முதலிய முத்தமிழை வளர்த்தல் வேண்டும்
  (D) இயல், இசை, நாடகம் போன்ற முத்தமிழை வளர்த்தல் வேண்டும்

 7. கோடிட்ட இடத்தில் உரிய விடையைத் தேர்ந்து எழுதுக.
  “கூம்பு ” என்ப து ………………………. பெயர் ஆகும்.
  (A) அளவுப்பண்பு
  (B) சுவைப்பண்பு
  (C) வடிவப்பண்பு
  (D) நிறப்பண்பு

 8. ஆற்றுவார் – அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு
  (A) ஆற் + று + வார்
  (B) ஆற் + றுவார்
  (C) ஆற்று + வார்
  (D) ஆ + ற்று + வார்

 9. கீழ்க்காணும் சொற்களுள் குற்றியலுகரம் அல்லாத சொல்லைத் தேர்ந்தெடு
  (A) சுக்கு
  (B) சார்பு
  (C) உண்ணு
  (D) அரசு

 10. பொருள்கோள் வகைகளின் எண்ணிக்கை
  (A) 4
  (B) 6
  (C) 8
  (D) 10

 11. “அன்னபூரணி” எனும் புதின ஆசிரியர்
  (A) ஜெயகாந்தன்
  (B) அகிலன்
  (C) வைரமுத்து
  (D) க.சச்சிதானந்தன்

 12. பொருத்துக
  (a) தமிழியக்கம் 1. பாரதியார்
  (b) சீட்டுக்கவி 2. தோலா மொழித்தேவர்
  (c) சேக்கிழார் பிள்ளைத்தமிழ் 3. பாரதிதாசன்
  (d) சூளாமணி 4. மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

 13. பொருத்துக
  நூல் புலவர்
  (a) பெரியபுராணம் 1. திருத்தக்கத்தேவர்
  (b) இராமாயணம் 2. உமறுப்புலவர்
  (C) சீறாப்புராணம் 3. சேக்கிழார்
  (d) சீவகசிந்தாமணி 4. கம்ப ர்

 14. பொருத்துக
  (a) வீரகாவியம் 1. நா. காமராசன்
  (b) இயேசு காவியம் 2. சிற்பி.பாலசுப்ரமணியம்
  (c) ஒளிப்பறவை 3. கண்ணதாசன்
  (d) சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள் 4. முடியரசன்

 15. எச்.ஏ.கிருட்டிணனாருக்கு இலக்கணம் கற்பித்த ஆசிரியரின் பெயர்
  (A) மாணிக்கவாசகத் தேவர்
  (B) சங்கர நாராயணர்
  (C) பிலவ சோதிடர்
  (D) தெய்வநாயகி

 16. சூடாமணி நிகண்டு – ஆசிரியர்
  (A) திவாகரமுனிவர்
  (B) பிங்கலம்
  (C) வீரமண்டல புருடர்
  (D) காங்கேயர்

 17. “மொழிகளின் காட்சிச் சாலை இந்தியா”

– இக்கூற்று யாருடையது?
(A) பேராசிரியர் ச.அகத்தியலிங்கம்
(B) பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை
(C) பேராசிரியர் சாலை இளந்திரையன்
(D) பேராசிரியர் சாலமன் பாப்பையா

 1. பொருத்துக
  (a) மூதுரை 1. சிவப்பிரகாசர்
  (b) வெற்றிவேற்கை 2. முனைப்பாடியார்
  (C) நன்னெறி 3. அதிவீரராம பாண்டியர்
  (d) அறநெறிச்சாரம் 4. ஒளவையார்

 2. “மத்தவிலாசம்” – என்னும் நாடக நூலை எழுதியவர்
  (A) இராஜராஜ சோழன்
  (B) இராஜேந்திர சோழன்
  (C) நந்திவர்மன்
  (D) மகேந்திரவர்மன்

 3. பாரதிதாசன் நூல்களில் பொருந்தாத நூல்
  (A) குடும்ப விளக்கு
  (B) பாண்டியன் பரிசு
  (C) இருண்ட வீடு
  (D) கள்ளோ காவியமோ

 4. “ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே – சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே” எனும் பாடலடிகள் இடம் பெற்ற நூல்
  (A) குறுந்தொகை
  (B) புறநானூறு
  (C) பதிற்றுப்பத்து
  (D) பத்துப்பாட்டு

 5. “மேற்கணக்கு நூல்கள்” என்று அழைக்கப்படுபவை
  (A) எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்
  (B) நீதி இலக்கியம்
  (C) பக்தி இலக்கியம்
  (D) இக்கால இலக்கியம்

 6. ஐராதீசுவரர் கோயிலைக் கட்டிய அரசன்
  (A) இரண்டாம் இராசராசன்
  (B) இராசேந்திரன்
  (C) குலோத்துங்கன்
  (D) கிள்ளிவளவன்

 7. சரியான விடையைத் தேர்ந்தெடு
  பறவைகள் இடம்விட்டு இடம் பெயர்வதை ……………… என்பர்.
  (A) இடம் பெயர்தல்
  (B) புலம் பெயர்தல்
  (C) வலசை போதல்
  (D) ஊர் விட்டு ஊர் செல்லல்

 8. சிறுபஞ்ச மூலத்தில் கடவுள் வாழ்த்துடன் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?
  (A) தொண்ணூறு
  (B) தொண்ணூற்றேழு
  (C) நூறு
  (D) ஐம்பது

 9. “நவ்வி” எனும் சொல்லின் பொருள்
  (A) மான்
  (B) நாய்
  (C) நரி
  (D) செந்நாய்

 10. தமிழில் காணும் முதல் சித்தர்
  (A) திருமூலர்
  (B) அருணகிரிநாதர்
  (C) தாயுமானவர் –
  (D) வள்ளலார்

 11. பொருத்துக
  (a) வண்டு 1. குனுகும்
  (b) புறா 2. அலப்பும்
  (c) பூனை 3. முரலும்
  (d) குரங்கு 4. சீறும்

 12. தென்னாப்பிரிக்க நாட்டில் இந்தியரின் நலனுக்காகப் போராடிய வீரத்தமிழ் மங்கை
  (A) ஈ.வெ.ரா.மணியம்மை
  (B) கஸ்தூரிபாய்
  (C) வேலுநாச்சியார்
  (D) தில்லையாடி வள்ளியம்மை

 13. மணிமேகலையில் உள்ள காதைகளின் எண்ணிக்கை
  (A) 10
  (B) 20
  (C) 30
  (D) 40

TNPSC GROUP IV GENERAL TAMIL REVISION TEST PART 1

Important Science Model Questions – 10th Standard New Syllabus

Group IV 20 Important History Model Question

Group IV – 30 Important History Model Q&A

 

[Locker] The locker [id=2244] doesn't exist or the default lockers were deleted.

Leave a Comment