TNPSC GROUP I MODEL QUESTION 24-04-2020
TNPSC GROUP I MODEL QUESTION 24-04-2020
1. வைகுண்ட சுவாமிகள் எதிர்ப்பின் அடையாளமாக -(Soc. Pol. Movement in TN)
i. அந்தக் காலத்தில் உயர் ஜாதியினருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த உரிமையான தலைப்பாகை அணிவதை தன்னைப் பின்பற்றுவர்களையும் அணிய வலியுறுத்தினார்.
ii. தனித்தனியாக உணவருந்தும் பழக்கத்தை வலியுறுத்தினார்.
iii. ‘நிழல் தாங்கல்’ என்று அழைக்கப்பட்ட உணவுக்கூடங்களில் சாதியக் கட்டுப்பாடுகள் உடைத்தெறியப்பட்டன
iv. சமதாய ரீதியாக தனிமைப்படுத்துதலை ஆதரித்தார்
A) (i) மட்டும்
B) (ii) மட்டும்
C) (i) மற்றும் (iii) மட்டும்
D) (iv) மட்டும்
2. கீழ்க்கண்ட எந்த டெல்லி சுல்தான் காலத்தில் ஆதரவற்ற கைம்பெண்களுக்கு (Destitute Widow) நலவாழ்வுத் துறை (திவானி கெய்ரத்) உருவாக்கப்பட்டது -(Delhi Sultan)
A) முகமது பின் துக்ளக்
B) பிரோஸ் துக்ளக்
C) அலாவூதின் கில்ஜி
D) குத்புதீன் ஐபக்
TNPSC GROUP I MODEL QUESTION 24-04-2020
3. உள்ளிடைச் சேர்மங்கள் பற்றிய பின்வரும் கருத்துகளில் எது சரியானது அல்ல -(Compouds)
A) சுத்தமான உலோகத்தை விட அதிகக் கடினமானது.
B) சுத்தமான உலோகத்தை விட அவை உயர் உருகுநிலை உடையன. அவற்றின் உலோகக் கடத்துதிறனில் மாறுதல் இல்லை .
D) அவை அதிக வேதிவினைபடும் தன்மையுடையன.
4.விரிநிலை பரிணாமத்திற்கு கொடுக்கப்பட்ட எடுத்துக்காட்டுகளில் தவறானது எது?-(Evolution)
A) வௌவால், மனிதன் மற்றும் சீத்தாவின் இதயம்
B) வௌவால், மனிதன் மற்றும் சீத்தாவின் மூளை
C) மனிதன், வௌவால் மற்றும் சீத்தாவின் முன்னங்கால்
D) ஆக்டோபஸ் மற்றும் மனிதனின் கண்
5.கண்டுபிடிப்பாளரும், சமூகத் தொழில் முனைவோருமான அருணாச்சலம் முரகானந்தம் என்பவர் பின்வரும் எவற்றுடன் தொடர்படையவர் -(Latest Inventions)
A) குறைந்த விலை மின்சார வாகனம்
B) இடைவிடாமல் நீர் இறைக்கும் இயந்திரம்
C) குறைந்த விலை விடாய்கால அணையாடை
D) உயர்திறன் சூரிய மின்லங்கள்
TNPSC GROUP I MODEL QUESTION 24-04-2020
6. சமீபத்தில் வெளியான புத்தகங்களை அதன் ஆசிரியர்களோடு பொருத்துக -(Books & Authors)
புத்தகங்கள் | ஆசிரியர்கள் |
---|---|
i. To Sleep in a Sea of stars | 1. பாலாகிருஷ்ணன் |
ii. The Vault of Vishnu | 2. விஸ்வ நாதன் |
iii. Mind Master | 3.அஸ்வின் சங்கி |
iv.Journey of a Civilization - Indus to Vaigai | 4.கிறிஸ்டோபர் பெவிலியன் |
A) i-(2), ii-(3), iii-(1), iv-(4)
B) i-(4), ii-(2), iii-(3), iv-(1)
C) i-(1), ii-(3), iii-(2), iv-(4)
D) i-(4), ii-(3), iii-(2), iv-(1)
TNPSC GROUP II MODEL QUESTION 24-04-2020
7. கடந்த ஆண்டில் கீழ்க்கண்ட எந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது -(Current Socio)
A) கால்நடை வளர்ப்பு கடன் அட்டை திட்டம்
B) போஷன் அபியான் திட்டம்
C) அரசு சேவைகளில் ப்ளாக் செயின் செயலிகள்
D) பத்திரங்களுக்கான இடிஎப் திட்டம்
8.கீழ்க்கண்டவற்றுள் தொடக்க நிலையிலேயே டெங்குவினைக் கண்டறிய உதவும் எதிர்ப்பொருள் மற்றும் டெங்குவினை உண்டாக்கும் வைரஸ் எது? -(Diseases)
A) Ig M மற்றும் பிளாவி வைரஸ்
B) IgG மற்றும் பிளாவி வைரஸ்
C) IgM மற்றும் டோகா வைரஸ்
D) Ig M மற்றும் ஆல்பா வைரஸ்
TNPSC GROUP I MODEL QUESTION 24-04-2020
9. பட்டியல் -ல் உள்ள செயற்கைகோளை பட்டியல் II-இல் உள்ள அதன் பயன்பாடுகளோடு பொருத்தி சரியான இணை வரிசைகளை தேர்ந்தெடுக்க ~(Science & Tech.)
செயற்கைகோள் | பயன்பாடு |
---|---|
i. INSAT - 3DR | இயற்கைச் சீற்ற மேலாண்மை |
ii. CARTOSAT - 2 | 2. காலநிலை கணிப்ப |
iii. GSAT - 6A | 3. எல்லைப் பாதுகாப்பு |
iv. CARTOSAT - 2 | 4.புவி உற்றுநோக்கல் |
5. தகவல் தொடர்பு |
A) i-(4), ii-(1), iii-(2), iv-(3)
B) i-(4), ii-(1), iii-(5), iv-(3)
C) i-(1), ii-(4), iii-(2), iv-(3)
D) i-(1), ii-(4), iii-(5), iv-(3)
TNPSC GROUP IV MODEL QUESTION 24-04-2020
10. தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் எங்கு இராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது -(Geo. Landmarks)
A) குலையன்கரிசல்
B) குலசேகரப்பட்டினம்
C) நாலாட்டின்புதூர்
D) புன்னைக்காயல்
TNPSC GROUP I MODEL QUESTION 24-04-2020
SHARE TO VIEW ANSWERS AND EXPLANATION
[sociallocker id=5075]
1. C) (i) மற்றும் (iii) மட்டும்
விளக்கம்:
வைகுண்ட சாமிகள் (1809 – 1851) கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமிதோப்பு என்ற ஊரில் பிறந்தவர்.
முடிசூடும் பெருமாள் என்றும் முத்துக்குட்டி என்றும் அழைக்கப்பட்டார்.
தமிழ்நாட்டில், சமயக் குறைபாடுகளைப் போக்கவும், சமுதாய தீமைகளை அகற்றவும் சமய சமூக சீர்திருத்த இயக்கத்தை தொடங்கிவைத்தார்.
அகிலத் திரட்டு அம்மானை என்ற நூல் வைகுண்ட சாமியின் வாழ்க்கை வரலாற்று பற்றிய நூல் ஆகும்.
இந்நூல் இவரது சீடர் இராமகோபல் என்பவரால் எழுதப்பட்டது.
வைகுண்ட சாமிகள் அடிப்படை கோட்பாடுகள்
* உருவ வழிபாடு கூடாது. உயிர் பழி கூடாது.
* நிழல்தாங்கல்கள் மூலம் மனித நேயத்தை வளர்க்கும் இடங்களாகவும் தருமசாலையாகவும் அமைத்தல்.
பக்தர்கள் தலைப்பாகை அணிந்து செய்யும் தியான வழிபாட்டு நெறிமுறை (இது வைதீக முறையில் மாறுபட்ட முறை)
* மக்கள் அனைவரையும் – ஒன்றுப்படுத்த துவையல் பந்தி.
* சிறு தெய்வ வழிபாட்டு முறை தவிர்த்தல்.
2. B) பிரோஷ் துக்ளக்
விளக்கம்:
பிரோஷ் துக்ளக் காலத்தில் அதரவற்ற கைம்பெண்களுக்கு நலவாழ்வுத்துறை உருவாக்கப்பட்டது (திவானி கெய்ரத்)
* டெல்லி சுல்தானியர் ஆட்சியில் பெண் அரசாள்வது (ரஷியா சுல்தானா) இந்து, இஸ்லாமிய ஆட்சி மரபில் மாற்றத்தை உருவாக்கின.
டெல்லி சுல்தானியர்கள் வெளியிட்ட நாணயங்கள் பிற்காலத்தில் வெளியிட்ட நாணயங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த ன.
வேளாண்மை முறையை மேம்படுத்த, முகமது பின் துக்ளக் ஏற்படுத்திய துறை திவான் இ கோஹி ஆகும்.
* பிரோஷ் துக்ளக் ஆட்சிக் காலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் உருவாக்கப்பட்டது.
* ஆலாவுதீன் கில்ஜியின் காலத்தில் சக்ரா என்ற பட்டியல் முறையும், தாக் என்ற குதிரைகளுக்குச் சூடு போடும் முறையை (அரச விலங்குகள் என்பதற்கு அடையாளமாக) அங்காடி சீர்திருத்தமும், தற்கால உணவுத் துறை அதிகாரி பணியிடங்களுக்கு மிகச் சிறந்த கொடையாகும்.
3. D) அவை அதிக வேதிவினைபடும் தன்மையுடையன. தீர்வு : வேதிவினையைப் பொருத்தவரை உள்ளிடைச் சேர்மங்கள் (interstial compounds) மந்தத்தன்மை உடையவை.
TNPSC GROUP I MODEL QUESTION 24-04-2020
4. D) ஆக்டோபஸ், வௌவால் மற்றும் மனிதனின் கண்
விளக்கம்:
வெவ்வேறு புவியிலுக்குரிய பகுதிகளில் ஒரே வகையான தாவரங்கள் விலங்குகள் தோற்றத்தில் ஒன்றுபட்டு காணப்படுகின்றன.
இதனை குவிபரிணாமம் என்று கூறுவர் அல்லது இணைப் பரிணாமம் என்று கூறுவர்.
ஆக்டோபஸ் கண், வௌவால் மற்றும் மனிதன் குவிபரிணாமம் கொண்ட விலங்குகளுக்கு எடுத்துக்காட்டாக கருதப்படுகிறது. இவைகளுள் ஒப்புமை உறுப்புகள் பல காணப்படுகின்றன.
5. C) குறைந்த விலை விடாய்கால அணையாடை
6. D) i-(4), ii-(3), iii-(2), iv-(1)
7. B) போஷன் அபியான் திட்டம்
8. A) I M மற்றும் பிளாவி வைரஸ்
விளக்கம்:
இம்யூனோ குளாபுலின்கள்
* IgA பல சரப்புகளில் உள்ளது.
* IgE ஒவ்வாமையில் ஈடுபடுகிறது.
* IgM தீடீரென்று ஏற்படும் நோய் தொற்றில் பங்கு கொள்கிறது.
* IgG நாட்பட்ட நோய் தொற்றில் பங்கு கொள்கிறது
9. D) i-(1), ii-(4), iii-(5), iv-(3)
10. B) குலசேகரப்பட்டினம்
விளக்கம்:
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேரகப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்படுகிறது.
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் ஒரு ராக்கெட் ஏவுதளம் ஒன்று ஏற்கனவே செயல்பட்டு வருகிறது
TNPSC GROUP I MODEL QUESTION 24-04-2020
DOWNLOAD PDF HERE
[/sociallocker]
TNPSC BIOLOGY MODEL QUESTION 17-04-2020 DOWNLOAD
DOWNLOAD OUR ANDROID APP
Recent Comments