TNPSC GROUP I GROUP II GROUP IV MODEL QUESTION

TNPSC GROUP I GROUP II GROUP IV MODEL QUESTION

TNPSC GROUP I GROUP II GROUP IV MODEL QUESTION

TNPSC GROUP I GROUP II GROUP IV MODEL QUESTION

11. ரேச்சல் கார்சன் எழுதிய அமைதி ஊற்று’ என்னும் புத்தகம் இதோடு தொடர்புடையது -(Environmental Pollution)
A) பூச்சிக் கொல்லி மருந்துகளால் ஏற்படும் மாசுபாடு
B) ஒலி மாசுபாட்டிற்கான அளவை குறித்து
C) காற்று மாசுபாட்டிற்கான தீர்வு குறித்து
D) நுண்ணயிரிகளால் பயிர்களில் ஏற்படும் ஊட்டச் சத்து குறைபாடுகள்

12. ஒரு நபரிடம் எதிர்ப்பு சக்தி குறைபாடு அதிகமாக இருப்பதாகக் கண்டறிந்தால், பின்வரும் எதனை கொண்டு தீர்மானிக்க இயலும்? -(Health)
A) பிளாஸ்மாவில் காணப்படும் பைப்ரினோஜன்
B) சிரம் அல்புமின்கள்
C) ஹீமோசைட்டுகள்
D) சீரம் குளோபுலின்கள்

13. கீழ்க்கண்டவற்றில் எது விஜய நகர காலகட்டத்தின் அம்சங்களில் தவறானது? -(Vijya Nagaram)
A) விஜயநகர அரசர்கள் வராகன் என்ற தங்க நாணயத்தை அதிகளவில் வெளியிட்டனர்.
B) விஜயநகர பெண்கள் புதுமையில் அதிக நம்பிக்கை கொண்டிருந்தனர்.
C) கங்காதேவி, ஹன்னமமா, திருமலம்மா சிறந்த பெண்பாற்புலவர்களாக விளங்கினர்.
D) நாயன்காரா முறை கிராம சுயாட்சி முறையின் அடிப்படையைத் தகர்த்தது.

TNPSC GROUP I GROUP II GROUP IV MODEL QUESTION

14. கீழ்க்கண்டவற்றுள் புத்தரைப் பற்றிய தவறான கூற்று எது? -(C.C.S.C.H of India)
A) அவர் கடவுளைப் பற்றி குறிப்பிடவில்லை .
B) அவருடைய போதனைகள் அனைத்தும் கடவுளைப் பற்றிய வருணனைளைக் கொண்டிருந்தன.
C) பிறப்பின் அடிப்படையிலான சமமற்ற முறையை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
D) அவர் கடவுளின் இருப்பை ஏற்றுக் கொள்ளவுமில்லை மறுதலிக்கவுமில்லை.

15. ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட அறிக்கையின் படி 2100-ல் உலகளாவிய வெப்பநிலை எத்தனை டிகிரி செல்சியஸ் அதிகரித்து இருக்கும் -(Climate Change)
A) 6.2
B) 5.2
C) 4.2
D) 3.2

16. ஒரு குறிப்பிட்ட பகுதி, சூழ்நிலை மண்டலத்தில் வாழும் வகைப்பாட்டுத் தொகுதிகளின் (பெரும்பாலும் சிற்றினங்கள்) எண்ணிக்கையை வைத்து அளவிடப்படுவது -(Ecology)
A) ஆல்பா பல்வகைத்தன்மை
B) பீட்டா பல்வகைத்தன்மை
C) காமா பல்வகைத்தன்மை
D) டெல்டா பல்வகைத்தன்மை

17. மத்திய அரசால் உருவாக்கப்பட்டு வரும் பேரழிவுகளைத் தடுக்கும் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான கட்டமைப்பு ~(Disaster Managment)
A) MRTI
B) FDIR
C) DOIT
D) CDRI

18. 1982 ஆம் ஆண்டு புளோரிடாவின் மேற்கு கடலோரப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் செத்து மடியக் காரணமானது -(Environmental Pollution)
A) தொழிற்சாலைகளின் நச்சுக் கழிவினால்
B) நச்சு பாசிப்பொலிவினால்
C) கப்பலில் ஏற்பட்ட எண்ணெய் கசிவினால்
D) இவற்றில் எதுவுமில்லை

TNPSC GROUP I GROUP II GROUP IV MODEL QUESTION

19. கீழ்க்கண்ட எந்த முகலாயரின் துலுக்மா போர்முறை மராத்தியரின் கொரில்லாப் போர் முறைக்கு அடிப்படையாக அமைந்தது -(Mughals)
A) அக்பர்
B) ஐஹாங்கீர்
C) பாபர்
D) ஹிமாயூன்

20. முதன் முதலில் ஆலய நுழைவு போராட்டத்தை நடத்தி ஆலய போராட்டத்தின் முன்னோடியாக அறியப்படுகிறவர் -(Soc. Pol. Movement in TN)
A) திருநாவுக்கரசர்
B) இராமானுஜர்
C) திருமங்கையாழ்வார்
D) மாணிக்கவாசகர்

TNPSC GROUP I GROUP II GROUP IV MODEL QUESTION

[sociallocker id=5075]

11. A) பூச்சிக் கொல்லி மருந்துகளால் ஏற்படும் மாசுபாடு

12. B) சிரம் அல்புமின்கள்
விளக்கம்: இரத்தத்தில் சீரத்தில் அடங்கியுள்ள குளோபுலர் புரதத் தொகுதியைச் சார்ந்து குளாபுலின்கள் ஆகும். இது புரதம் நொதி துணை மற்றும் இம்யூனோகுளோபுலின்கள் (ஆன்டிபாடி) ஆகியவற்றை கொண்டுள்ளது. எனவே குறைவான ஆன்டிபாடிகள் ஒருவரில் இருப்பதாக சந்தேகப்பட்டால் சீரத்திலுள்ள குளோபிலின்
அளவு ஒரு உறுதிப்படுத்தும் நிருபணம் ஆகும்.

13. B) விஜயநகர பெண்கள் புதுமையில் அதிக நம்பிக்கை கொண்டிருந்தனர்.

விளக்கம்:
விஜயநகர பேரரசின் சிறப்பம்சங்கள்
* விஜயநகர ஆட்சிக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட நாயன்காரா முறை தென்னாட்டில் நிலவிய கிராம சுயாட்சி முறையின் அடிப்படையை தகர்த்து எறிந்தன.
* விஜயநகர அரசின் சின்னம் வராகம் ஆகும். வராகன் என்பது திருமாவின் வராக அவதாரத்தை குறிப்பிடும் வகையில்.
* பெண்கள் பழமையில் அதிக நம்பிக்கை கொண்டிருந்தனர். குமாரகம்பண்ணரின் மனைவி கங்கா தேவி, ஹன்னம்மா மற்றும் திருமலம்மா ஆகியோர் அக்காலத்தில் புகழ் வாய்ந்த பெண் பாற் புலவர்கள் ஆவர்.

14. B) அவருடைய போதனைகள் அனைத்தும் கடவுளைப் பற்றிய வருணனைளைக் கொண்டிருந்தன.
விளக்கம்:
பௌத்தத்தின் சில கோட்பாடுகள்
* பௌத்தம் மனித இனத்தை ஒட்டு மொத்தமாக அறநெறிப்படுத்துவதிலேயே பெரிதும் முனைந்துள்ளது.
* புத்தர், கடவுள், இருப்பதை ஏற்கவும் இல்லை . மறுக்கவும் இல்லை மேலும் கடவுள், உயிர், சடங்கு பற்றி வரையறுத்துக் கூறவில்லை .
தம்மை வழிபடும்படியும் கூறவில்லை . தமது கருத்துக்களை நல்வாழ்க்கைகான பாதையாக மட்டும் வழங்கினார்.

15. D) 3.2
விளக்கம்:
ஐக்கிய நாடுகள் சுற்றுச் சூழல் திட்டம் உமிழ்வு இடைவெளி அறிக்கை 2019 வெளியீட்டு அறிக்கையின் படி 2100-ல் உலகளாவிய வெப்பநிலை 3.2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என கணக்கிடப்படுகிறது.
டிசம்பர் 2 அன்று Cop-25க்கு முன்னர் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கடந்த ஆண்டுகளில் பசுமை இல்ல வாயு உமிழ்வு 1.5 சதவீதம் அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வு எப்போதும் இல்லாத அளவுக்கு 56.3 ஜிகா டன்களை எட்டி உள்ளது.

16. A) ஆல்பா பல்வகைத்தன்மை
விளக்கம்:
சூழ்நிலை மண்டல பல்வகைத் தன்மை மூன்று சுட்டெண்களாவன (indices) ஆல்பா பல்வகைத் தன்மை ஒரு குறிப்பிட்ட பகுதி, சமுதாயம் அல்லது சூழ்நிலை மண்டலத்தில் வாழும் வகைபாட்டுத் தொகுதிகளின் (பெரும்பாலும் சிற்றினங்கள்) எண்ணிக்கையை வைத்து அளவிடப்படுகிறது.
பீட்டா பலவகைத் தன்மை இது அருகருகே உள்ள இரண்டு சூழ்நிலை மண்டலங்களுக்கிடையேயான சிற்றின பல்வகைத்தன்மையாகும்.
இது அச்சூழ்நிலை மண்டலங்களிலுள்ள தனித்தன்மை வாய்ந்த சிற்றினங்களின் எண்ணிக்கையை ஒப்பீடு செய்வதன் மூலம் பெறப்படுகிறது.
காமா பல்வகைத்தன்மை இது மொத்த நிலப்பரப்பு அல்லது புவியில் உள்ள அனைத்து வாழிடங்களுக்கிடையேயான வேறுபாடுகளை குறிக்கிறது.

17. D) CDRI
விளக்கம்:
செப், 27, 2019 அன்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபையில் பிரதமரின் வழங்கிய உரையிலிருந்து முக்கியப் பத்திகள்
* 2022 ஆம் ஆண்டில், இந்தியா தனது 75-வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் வேளையில், ஏழைகளுக்காக இரண்டு கோடி வீடுகளைக் கட்டித் தருவதற்கு திட்டமிட்டுள்ளது.
2030க்குள் காசநோயை ஒழிப்பது என்ற இலக்கினை உலகம் கொண்ருக்கும் வேளையில் 2025 க்குள் இந்தியாவிலிருந்து காசநோயை ஒழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
* பேரழிவுகளைத் தடுக்கும் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான கூட்ட மைப்பு (Coalition for Disaster Resilient Infrastructure – CDRI) ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை இந்தியா மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

18. B) நச்சு பாசிப்பொலிவினால்
விளக்கம்:
சிவப்பு அலை என்பது டைனோபிளாஜெல் லேட்டுகளான ஜிம்னோடினியம் பிரேவி, கோனியலாக்ஸ் டாமரின்ஸிஸ் போன்ற நச்சு பாசிப்பொலிவினால் (Alga bloom) ஏற்படும் விளைவாகும்.
இவ்விளைவு 1982 ஆம் ஆண்டு புளோரிடாவின் மேற்கு கடலோரப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் செத்து மடியக் காரணமானது.

19. C) பாபர்
விளக்கம்:
முகலாய மன்னரான பாபரால் இந்தியாவில் முதன் முதலில் பீரங்கிப்படை அறிமுகப்படுத்தப்பட்டது.
இது இந்தியாவில் படையமைப்பில் புதிய மாற்றத்தை உருவாக்கியது.
இவரது துலுக்மா என்ற போர் முறை மராத்தியரின் கொரில்லாப் போர் முறைக்கு அடிப்படையாக

20. B) இராமானுஜர்
விளக்கம்:
ஆலயவழிபாட்டில் அனைத்து மக்களையும் பங்கேற்கச் செய்ய, இராமானுஜர் முதன் முதலில் ஆலய போராட்டத்தை நடத்தினார்.
இவர் தென்னிந்திய சமூக மற்றும் சமயசீர்த்திருத்தத்தின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுகிறார்.

DONLOAD PDF HERE

 

[/sociallocker]

DOWNLOAD OUR ANDROID APP

TNPSC GROUP I GROUP II GROUP IV MODEL QUESTION 1

TNPSC GROUP I MODEL QUESTION 24-04-2020

Leave a Reply