TNPSC GROUP 1 MODEL QUESTION 5

82

TNPSC GROUP 1 MODEL QUESTION 5

TNPSC GROUP 1 MODEL QUESTION 5

1. குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA)

இந்தியக் குடியுரிமைச் சட்டம் முதன் முதலில் கடந்த 1955-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறி 12 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்பவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரிவினைக்கும் முந்தைய காலகட்டத்தில், பாகிஸ்தானில் இருந்து குடியேறி 7 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்பவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறத்தல்களை அனுபவித்ததால், அங்கிருந்து இந்தியாவில் குடியேறி வசிக்கும் ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று கடந்த 2019-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது.

மேலும், இந்தியாவில் குடியேறி குறைந்தது 5 ஆண்டுகள் வசித்தாலே, உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம்.

கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்பு வரை இந்தியாவில் குடியேறியவர்கள் இந்தியக் குடியுரிமை பெற தகுதி பெற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியானவர்களுக்கு 6 ஆண்டுகளில் இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா மக்களவையில் கடந்த ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதியும், மாநிலங்களவையில் கடந்த ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதியும் நிறைவேற்றப்பட்டது.

2. தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR)

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2003-ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டபோது, தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (என்பிஆர்) தயாரிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டது.
மேலும், இந்திய குடிமக்களுக்கு கட்டாயம் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும் அந்த சட்டத்திருத்தம் பரிந்துரை செய்தது. அதன் பயனாக, கடந்த 2010-ஆம் ஆண்டில் முதன்முதலில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டது.
அதில், ஓரிடத்தில் தொடர்ந்து 6 மாதங்களாக வசிப்பவரும் அல்லது அடுத்த 6 மாதங்களுக்கு வசிப்பவரும் அந்தப் பகுதியின் குடியிருப்பு வாசியாக கணக்கில் கொள்ளப்பட்டு பதிவேடு தயாரிக்கப்பட்டது.

தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் (என்பிஆர்) ஒருவர் வசிக்கும் கிராமம், மாவட்டம், மாநிலம் போன்ற தகவல்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும்.
ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பில், மக்களின் வசிப்பிடம், அவர்களின் பொருளாதார நிலை, எழுத்தறிவு, வீட்டு வசதி போன்ற தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.
தேசிய குடிமக்கள் பதிவேடு கடந்த 2015-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு, ஆதாருடன் இணைக்கப்பட்டது.
இந்த நிலையில் சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறிவதற்காக 2020-ஆண்டில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை தயாரிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

3. தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC)

இந்திய விடுதலைக்குப் பிறகும் (1948), வங்கதேசப்போரின் போதும் (1971), வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறி அஸ்ஸாமில் லட்சக்கணக்கானோர் வசித்து வந்தனர். வங்கதேசத்திலிருந்தும், பாகிஸ்தானிலிருந்தும் சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்து வாழ்பவர்களை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.
1951-ஆம் ஆண்டும் தயாரிக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்கும் பணி உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2013-ஆம் ஆண்டு தொடங்கியது.
அதன்படி, 1971-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறியவர்களை மட்டும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்ப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த 1971-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் வசித்ததற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்ஆர்சி) இந்தியக் குடிமக்களைப் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும், இந்தியக் குடியுரிமை பெற வேண்டுமெனில், தொடர்புடைய துறை அதிகாரிகளிடம் குடியுரிமைக்கான ஆதாரத்தை அளிக்க வேண்டும்.

TNPSC GROUP 1 MODEL QUESTION 5

TNPSC CURRENT AFFAIRS 01-03-2020

 

DOWNLOAD ONLY FOR MEMBERS . LOGIN TO DOWNLOAD MATERIAL

This content is visible for members only

DOWNLOAD OUR ANDROID APP

We will be happy to hear your thoughts

Leave a reply

Register New Account
Reset Password