TNPSC General Tamil Study Material 03.05.2018
TNPSC General Tamil Study Material 03.05.2018
தமிழ் பொருள் இலக்கணம் அகப்பொருள், புறப்பொருள்
1 நம் இலக்கியங்களுக்குப் பாடுபொருள்களாக அமைவன அகப்பொருளும், புறப்பொருளும் ஆகும்.
2. ஒத்த அன்புடைய தலைவனும், தலைவியும் தாமே தம்முள் நுகரும் இன்பத்தைப் பற்றியது அகப்பொருள் ஆகும்
3, அறம், பொருள், வீடு ஆகியன பற்றிக்கூறுவது புறப்பொருள் ஆகும்
4. அகப்பொருள் பற்றிய ஒழுக்கமே அகத்திணை ஆகும்
5. திணை என்பது ஒழுக்கம் எனப்படும்
6, அகத்திணைகள் ஏழு வகைப்படும்
7. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பன அன்பின் ஐந்திணை என வழங்கப்படும்.
8, முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பன அகப்பொருள்களாகும்.
9, அகம் என்னும் சொல்லுக்கு உள்ளம் என்பது பொருள்
10. முதற்பொருள் என்பது நிலமும் பொழுதும் என இருவகைப்படும்
11. பொழுது இரண்டு வகைப்படும்
12. பெரும் பொழுது ஆறு வகைப்படும்
13. சிறுபொழுது ஆறு வகைப்படும்
14, ஒவ்வொரு சிறுபொழுதும் நான்கு மணி நேரம் கொண்டது.
15, ஒவ்வொரு சிறுபொழுதும் பத்து நாழிகைகள் கொண்டது.
16, பெரும்பொழுது என்பன ஆண்டை ஆறு கூறுகளாகப் பகுக்கப்பட்டதாகும்.
18. முல்லை நிலத்திற்குரிய பெரும் பொழுது கார்காலம் ஆகும்
17. சிறுபொழுது என்பது நாளை ஆறு கூறுகளாகப் பகுத்ததாகும்
19. முல்லைத் திணையின் சிறுபொழுது மாலை
20. எற்பாடு என்பது எல்+பாடு எனப்பிரியும்
21. கதிரவன் மறையும் நேரத்தைக் குறிக்கும் பொழுது எற்பாடு ஆகும்
22. விளரியாழ் என்பது நெய்தல் திணைக்குரியதாகும்
23. ஆறு பெரும் பொழுதுகளையும் பெறும் திணைகள் மருதம், நெய்தல்
24, பிரிதலும் பிரிதல் நிமித்தமும் உடையது பாலை
25, பஞ்சுரப்பண் பாலைத் திணைக்குரியது
27. புறத்திணைகள் பன்னிரெண்டு வகைப்படும்
26. நிரை கவர்தல் என்பது வெட்சித் திணையாகும்
30, மதில் காக்கப் போர் புரிவது நொச்சித்திணை
28. பகைவர்கள் கவர்ந்து சென்ற பசுக்களை மீட்டல் கரந்தைத் திணையாகும்
29, மண்ணாசையால் பகைவர் நாட்டைக் கைப்பற்ற கருதி போருக்குச் செல்வது வஞ்சித்திணை
32. மாற்று அரசனின் கோட்டையை முற்றுகையிடுதல் உழிஞைத்திணை ஆகும்
31. தம் நாட்டைக் காக்கப் போரிடுதல் காஞ்சித்திணை
33, பகை வேந்தர் இருவரும் அதிரப் பொருவது தும்பைத்திணை
34. போரிடும் வேந்தருள் பெற்றி பெற்றவர் அணியும் பூ வாகைப்பூ
35. வெற்றி பெற்றவர் ஆரவாரம் செய்வது வாகைத்திணை
38, ஒரு மன்னரின் புகழ் முதலியவற்றைப் புகழ்தல் பாடாண் திணையாகும்
37, காலை 10 மணி முதல் 2 மணிவரை உள்ள சிறுபொழுது நண்பகல்
38, கைக்கிளைத் திணை என்பது ஒரு தலைக்காமம்
33, கைக்கிளை இரண்டு வகைப்படும்
40, பெருந்திணையாவது பொருந்தாக்காமம் ஆகும்
[sociallocker id=2244]
DOWNLOAD TAMIL PDF
[/sociallocker]