TNPSC GENERAL TAMIL MODEL QUESTION 2 DOWNLOAD

TNPSC GENERAL TAMIL MODEL QUESTION 2 DOWNLOAD

TNPSC GENERAL TAMIL MODEL QUESTION 2 DOWNLOAD

 

 1. பொருத்தமான விடையைத் தேர்க
  அ) சிறுபஞ்சமூலம் – 1. காப்பிய இலக்கியம்
  ஆ) குடும்ப விளக்கு – 2. சங்க இலக்கியம்
  இ) சீவகசிந்தாமணி – 3. அற இலக்கியம்
  ஈ) குறுந்தொகை – 4. தற்கால இலக்கியம்
  (i) அ-3, ஆ-4, இ-1, ஈ-2
  (ii) அ-2, ஆ-3, 6-1, ஈ-4 (
  iii) அ-3, ஆ – 1, இ-4, ஈ – 2
  (iv) அ-4, ஆ-1, இ-2, ஈ-3

 2. மாறுபட்டுள்ள குழுவினை கண்டறிக.
  அ) கலைக்கூடம் திரையரங்கம் ஆடுகளம் அருங்காட்சியகம்
  ஆ) கடி உறு கூர் சுழி
  இ) வினவினான் செப்பினான்உரைத்தான்பகன்றான்
  ஈ)இன் கூட கிறு அம்பு

 3. கீழ்க்காண்பவற்றுள் உணர்ச்சி தொடர் எது?
  அ) சிறு பஞ்ச மூலத்தில் உள்ள பாடல்கள் பெரும்பாலும் மகடூஉ முன்னிலையில் அமைந்துள்ளன.
  ஆ) இந்திய நூலகவியலின் தந்தையென அறியப்படுபவர் யார்?
  இ) என்னண்ணே நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை
  ஈ) வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடத்தைப் புத்தகசாலைக்குத் தருக.

 4. சரியான கூற்றினைத் தெரிவு செய்க.
  அ) “ஆ” என்பது எதிர்மறை இடைநிலை
  ஆ) வீட்டிற்கோர் புத்தகசாலை என்பது அண்ணாவின் மேடைப்பேச்சு
  இ) வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம்

 5. ஆ, இ சரி; அ தவறு
 6. அ, இ சரி; ஆ தவறு
 7. மூன்றும் சரி
 8. மூன்றும் தவறு

 9. பூவாது காய்க்கும், மலர்க்கை – அடிக்கோடிட்ட சொற்களுக்குரிய இலக்கணம் யாது?
  அ) பெயரெச்சம், உவமைத்தொகை
  ஆ) எதிர்மறைப் பெயரெச்சம், உருவகம்
  இ) வினையெச்சம், உவமை
  ஈ) எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை

 10. அஃகசாலை என்பது – ——– ———-த்தைக் குறிக்கும்
  அ) அங்காடிகள் அமைந்துள்ள இடம்
  ஆ) யவனர்கள் இருக்கின்ற இடம்
  இ) நாணயங்கள் அச்சடிக்கும் இடம்
  ஈ) அரேபியர்களின் பந்தர் இடம்

 11. கூற்று 1 – காவிரிபூம்பட்டினம் சோழ நாட்டின் துறைமுகமாகும்.
  கூற்று 2 – வண்டியூர் என்னும் ஊர் காஞ்சி மாநகரத்தில் அமைந்துள்ளது
  அ) கூற்று 1, 2 சரி
  ஆ) கூற்று 1, 2 தவறு
  இ) கூற்று 2 சரி, 1 தவறு
  ஈ) கூற்று 1 சரி, 2 தவறு

 12. “யவனப்பிரியா” என்பது எதனைக் குறிக்கும்?
  அ) மிளகு
  ஆ) முத்து
  இ) சங்கு
  ஈ) தந்தம்

 13. ஏற்றுமதி, இறக்குமதி குறித்துக் கூறும் சங்க நூல்கள்
  அ) பட்டினப்பாலை, குறிஞ்சிப்பாட்டு
  ஆ) குறிஞ்சிப்பாட்டு, பதிற்றுப்பட்டு
  இ) மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு
  ஈ) மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை

 14. விடைக்கேற்ற வினாவைத் தெரிவு செய்க

  காவிரியாற்றின் முகத்துவாரம் ஆழமாகவும், அகலமாகவும் இருந்தது
  பகலில் இயங்கும் கடைகள் நாளங்காடிகள்
  அ) காவிரியாற்றின் முகத்துவாரம் எதற்காக அமைந்திருந்தது? – பகலில் இயங்கும் கடைகள் எவ்விதம் அழைக்கப்பட்டன?
  ஆ) காவிரியாற்றின் முகத்துவாரம் எவ்வாறு அமைந்திருந்தது? – பகலில் இயங்கும் கடைகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
  இ)காவிரியாற்றின் முகத்துவாரம் எங்கு அமைந்திருந்தது?-பகலில் கடைகள் எவ்வாறு இயங்கின?
  ஈ) காவிரியாற்றின் முகத்துவாரம் எதனால் அமைந்திருந்தது?-பகலில் இயங்கும் கடைகள் எப்படி அழைக்கப்பட்டன?

 15. பல்லவர் காலச் சிற்பங்களுக்குச் சிறந்த சான்று ———–
  அ) மாமல்லபுரம்
  ஆ) பிள்ளையார்பட்டி
  இ) திரிபுவனவீரேசுவரம்
  ஈ) தாடிக்கொம்பு

 16. “பொதுவர்கள் பொலிஉறப் போர் அடித்திடும்” நிலப்பகுதி —
  அ) குறிஞ்சி
  ஆ) நெய்தல்
  இ) முல்லை
  ஈ) பாலை

 17. மரவேர் என்பது ———————- புணர்ச்சி
  அ) இயல்பு
  ஆ) திரிதல்
  இ) தோன்றல்
  ஈ) கெடுதல்

 18. “அதிரப் புகுதக் கனாக் கண்டேன்” – யார் கனவில் யார் அதிரப் புகுந்தார்?
  அ) கண்ணனின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்
  ஆ) தோழியின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்
  இ) ஆண்டாளின் கனவில் தோழி புகுந்தாள்
  ஈ) ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

 19. திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை ———-
  அ) விலங்கு உருவங்கள் –
  ஆ) தீர்த்தங்கரர் உருவங்கள்
  இ) தெய்வ உருவங்கள்
  ஈ) நாட்டியம் ஆடும் பாவை உருவங்கள்

TNPSC GENERAL TAMIL MODEL QUESTION 2 DOWNLOAD

 1. வேறுபட்ட குழுவினைக் கண்டறிக
  அ) சிலம்பு, மேகலை, குழை, கடகம்
  ஆ) நோன்பு, நீராடல், திருநாள், விழா
  இ) ஊசல், கழங்காடல், ஒரையாடல், அம்மானைப் பந்தாடல்
  ஈ) கூத்து, பாடினி, இசை, சிற்பம்

 2. சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?
  அ) வருக்கை – இருக்கை
  ஆ) புள்-தாவரம்
  இ) அள்ளல்-சேறு
  ஈ) மடிவு – தொடக்கம்

 3. பாதிரி ஒத்த பூ, செய்கோலம் – இலக்கணக்குறிப்புத் தருக
  அ) உருவகத்தொடர், வினைத்தொகை
  ஆ) உவமைத்தொடர், வினைத்தொகை
  இ) வினைத்தொகை, பண்புத்தொகை
  ஈ) வினைத்தொகை, உருவகத்தொடர்

 4. நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு – இத்தொடர்களில் குறிப்பிடுகின்ற நாடுகள் முறையே
  அ) பாண்டிய, சேர நாடு
  ஆ) சோழ, சேர நாடு
  இ) சேர, சோழ நாடு
  ஈ) சோழ, பாண்டிய நாடு

 5. வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே – இவ்வடி உணர்த்தும் பொருள் யாது?
  அ) மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்
  ஆ) வறண்ட வயலில் உழவர் வெள்ளமாய் அமர்ந்திருந்தனர்
  இ) செறிவான வயலில் உழவர் வெள்ளமாய்க் கூடியிருந்தனர்
  ஈ) பசுமையான வயலில் உழவர் வெள்ளமாய் நிறைந்திருந்தனர்

 6. சரியான விடையத் தேர்ந்தெடுக்க
  கூற்று – பெரியார் உயிர் எழுத்துக்களில் “ஐ” என்பதனை “அய்” எனவும், “ஔ” என்பதனை “அவ்” எனவும் சீரமைத்தார். காரணம் – சில எழுத்துக்களைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று எண்ணினார்.
  அ) கூற்று சரி, காரணம் தவறு .
  ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி
  இ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
  ஈ) கூற்று தவறு, காரணம் சரி

 7. காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
  ஞாலத்தின் மாணப் பெரிது – இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்பாடு யாது?
  அ) நாள்
  ஆ) மலர்
  இ) காசு
  ஈ) பிறப்பு

 8. முண்டி மோதும் துணிவே இன்பம் – இவ்வடியில் இன்பமாக உருவகிக்கப்படுவது
  அ) மகிழ்ச்சி
  ஆ) வியப்பு
  இ) துணிவு
  ஈ) மருட்சி

 9. விடைக்கேற்ற வினாவைத் தேர்க. விடை – பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது
  அ) பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?
  ஆ) பானை எப்படி நமக்குப் பயன்படுத்தப்படுகிறது?
  இ) பானை எதனால் நமக்குப் பயன்படுத்தப்படுகிறது?
  ஈ) பானை எங்கு நமக்குப் பயன்படுத்தப்படுகிறது?

 10. “ஞானம்” என்பதன் பொருள் யாது?
  அ) தானம்
  ஆ) தெளிவு
  இ) சினம்
  ஈ) அறிவு

 11. இமயத்துக் கோடு உயர்ந்தன்ன – இவ்வடியில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் யாது?
  அ) கொம்பு
  ஆ) மலையுச்சி
  இ) சங்கு
  ஈ) மேடு

 12. தமிழ்ப் புலவரைப் போலவே உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை
  அ) நிலையற்ற வாழ்க்கை
  ஆ) பிறருக்காக வாழ்தல்
  இ) இம்மை மறுமை
  ஈ) ஒன்றே உலகம்

 13. வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நூல்
  அ) ஒரு சிறு இசை
  ஆ) முன்பின்
  இ) அந்நியமற்ற நதி
  ஈ) உயரப் பறத்தல்

 14. யாமரம் என்பது எந்த நிலத்தில் வளரும்?
  அ) குறிஞ்சி
  ஆ) மருதம்
  இ) பாலை
  ஈ) நெய்தல்

 15. கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்று மாடல்ல மற்றை யவை – இக்குறளில் பயின்று வந்துள்ள அணி?
  அ) சொல் பின்வருநிலையணி
  ஆ) பொருள் பின்வருநிலையணி
  இ) சொற்பொருள் பின்வரு நிலையணி
  ஈ) வஞ்சப் புகழ்ச்சியணி

 16. பண்டைக் காலத்தில் ———– ————- முதல் ——— வரையிலான பகுதி தமிழர் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.

 

[sociallocker id=2244]

DOWNLOAD PDF HERE

[/sociallocker]

TNPSC GENERAL TAMIL MODEL QUESTION 2 DOWNLOAD

TNPSC GENERAL TAMIL MODEL QUESTION 23 DOWNLOAD

Leave a Reply