TNPSC GENERAL TAMIL GRAMMAR MODEL QUESTION
ஆயக்குடி இலவச பயிற்சி மையம்
பொதுத்தமிழ் –இலக்கணம்
கீழ்க்கண்ட கூற்றுக்களில் தவறான கூற்றினை கண்டறிக
a) பன்னிரண்டு உயிர்எழுத்துக்களும் , இடையின எழுத்துக்கள் ஆறும் கழுத்திலிருந்து பிறக்கின்றன
b) மெல்லின எழுத்துக்கள் ஆறும் மூக்கிலிருந்து பிறக்கின்றன
c) வல்லின எழுத்துக்கள் ஆறும் மார்பிலிருந்து பிறக்கின்றன
d) ஆய்தமாகிய சார்பெழுத்து தலையை இடமாகக்கொண்டு பிறக்கிறது
e) வாயைத் திறந்து ஒலித்தலால் பிறப்பவை – உ ., ஊ , ஒ ஓ , ஒள
பொருத்துக
a) மேல்உதடும் கீழ்உதடும் பொருந்த தோன்றுபவை
b) மேல்வாயை நாக்கின் நுனி தடவுவதால் தோன்றுபவை
c) மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறப்பவை
d) நாவினது நுனி , அன்னத்தினது நுனியை தொடுவதால் தோன்றுபவை
மொழிக்கு இறுதியாக வரும் சரியான மெய்எழுத்து தொடரைக் குறிப்பிடுக
a) ட் , ற் , ஞ் , ண் ,ந் ,ம் , ய் , ர் , ல் , வ் . ழ்
b) ஞ் , ண் ,ந் , ம் , ன் , ய் ர் ,ல் ,வ் , ழ் ,ள்
c) க் ச் ஞ் , ண் , ந் , ம் ய் ர் ல் வ் ,ழ்
d) ஞ் , ண் , ந் ம் , ன் , ய் , ர் ல் , ற் , ழ் , ள்
சரியான தொடரைக் கண்டறிக
a)மூவசைச்சீர்களில் மட்டும் வருவது – செய்யுளிசை அளபெடை
b) ஈரசைச்சீர்களில் மட்டும் வருவது – இன்னிசை அளபெடை
c) இ என்னும் எழுத்தில் முடிவுபெறுவது – உயிரளபெடை
d) செய்யுளிசை , அளபெடைக்கு இசைநிறை அளபெடை என்ற வேருபெயரும் உண்டு
கீழ்காணும் உயிரளபெடைகளுள் பொருந்தா உயிரளபெடைத் தொடரைச் சுட்டுக
a) கெடாஅவழிவந்த
b) விடா அர் விழையும்
c) உழா அர் உழவர்
குற்றியலுகரத்திற்கான மாத்திரை அளவு பின்வருவனுற்றுள் எது ?
a) அரை
b) ஒன்றரை
c) இரண்டரை
இரண்டு எழுத்துக்களை மட்டுமே பெற்றுவரும் குற்றியலுகர வகை எது ?
a) ஆய்தத்தொடர் குற்றியலுகரம்
b) உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
c) நெடில் தொடர்க் குற்றியலுகரம்
d) வன்தொடர்க் குற்றியலுகரம்
______________ எழுத்துக்கள் மேல்வைப்பல்லினது அடியை நாக்கின் நுனி பொருந்துதலால் தோன்றுகின்றன
a) ப் , ம்
b) த் ந்
c) ய் ர்
d) க் ங்
உறா அர்க் குறுநோய் உரைப்பாய் – இத்தொடரில் ____________ அளபெடை வந்துள்ளது
a) செய்யுளிசை
b) இன்னிசை
c) சொல்லிசை
d)ஒற்றளபெடை
பொருத்துக
a)மெய்யெழுத்து – அரைமாத்திரை
b) உயிரெழுத்து குறில் – ஒரு மாத்திரை
c) உயிர்மெய் குறில் – ஒரு மாத்திரை
d) உயிர்மெய் நெடில் – இரு மாத்திரை
தரும்வள்ளல் – கோடிட்ட இச்சொல்லில் அமைந்துள்ள எழுத்துக்களின் மாத்திரை _________________
a) 5 1/2
b)2 1/2
c)2 1/4
d) 4
குற்றியலுகர சொல்லை கண்டறிக
a)பாக்கு
b) பாங்கு
c) பஞ்சு
d) வண்டு
e)அம்பு
f)கன்று
கீழ்க்கண்ட கூற்றுக்களில் தவறானவை எவை ?
a) பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நிற்கும் உறுப்பு – இடைநிலை
b) இறந்தகால இடைநிலைகள் – த் ,ட் , ற் இன்
c)நிகழ்கால இடைநிலைகள் – கிறு , கின்று , ஆநின்று
d) எதிர்கால இடைநிலைகள் – ய் , ர்
e)எதிர்மறைப் பொருள் உணர்த்தும் இடைநிலைகள் – ஆ அல் இல்
கேட்டார் – என்ற சொல் பகுபத உருப்பிலக்கனப்படி குறியாக உள்ளது
a) கேள் +ட் +ஆர்
b) கேள் + ஆர்
c) கேள் (ட்) +ட் +ட் + ஆர்
d) கேள் (ட்)+ட் + ஆர்
Recent Comments