Search
Generic filters
Exact matches only

TNPSC GENERAL TAMIL 65 IMPORTANT NOTES 30-06-2019

0 3 years ago

TNPSC GENERAL TAMIL 65 IMPORTANT NOTES 30-06-2019

TNPSC GENERAL TAMIL 65 IMPORTANT NOTES 30-06-2019

 1. கூற்று : இயற்கை விஞ்ஞானிகள் புலியையே காட்டுக்கு அரசன் என்கிறார்கள்.
  காரணம் : நீளம், உயரம், பருமன், எடை, பலம், வேட்டைத்திறன் ஆகிய அனைத்திலும் சிங்கத்தை விட புலியே உயர்ந்தது.

 2. இந்தியாவில் சருகுமான், மிளாமான், வெளிமான் எனப் பல வகையான மான்கள் உள்ளன. புள்ளிமான்கள் அழகில் சிறந்தவை.

 3. தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் மேட்டுப்பாளையம்

 4. வனவியல் – பட்டபடிப்புகள் உள்ள பல்கலைக்கழகம் கோவை – தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

 5. “இந்தியாவின் வனமகன்” என்று அழைக்கப்படுபவர் அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்விராட் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாதவ் பயேங்

 6. “காட்டின் வளம்” என்று குறிக்கப்படுவது புலிகள்

 7. 2012 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவுக்கு இந்திய வனமகன்” (Forest Man of India) என்னும் பட்டத்தை வழங்கியுள்ளது.

 8. ஜாதவுக்கு 2015ம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியுள்ளது.

 9. கௌகாத்தி பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர்” பட்டம் ஜாதவுக்கு வழங்கியுள்ளது.

 10. சொற்களில் முதல், இடை, இறுதி ஆகிய இடங்களில் வரும்போது ஐகார எழுத்து தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும்.
  முதலில் வரும்போது 1% மாத்திரை அளவிலும்
  இடை, இறுதியில் வரும்போது 1 மாத்திரை அளவிலும் ஒலிக்கும்.

 11. ஒளகாரம் சொல்லின் முதலில் மட்டும் வரும். இடையிலும், இறுதியிலும் வராது.

61.”அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்” – என்று பெருமையை போற்றியவர் ஒளவையார்.

 1. கடற்பயணம் சென்று கரை திரும்பத் தமிழர் கண்ட தொழில் நுட்பமே கலங்கரை விளக்கம்

 2. மதலை – தூண் நெகிழி – தீச்சுடர்
  அழுவம் – கடல் சென்னி – உச்சி
  உரவுநீர் – பெருநீர்ப்பரப்பு கரையும் – அழைக்கும்

 3. வேயாமாடம் – வைக்கோள் போன்றவற்றால் வேயப்படாது, திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்

 4. உள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசுபெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும்.

 5. பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையன்

 6. பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

 7. உரு – அழகு வங்கம் – கப்பல் எல் – பகல்
  வங்கூழ் – காற்று போழ – பிளக்க கோடுஉயர் – கரை உயர்ந்த

 8. நீ கான் – நாவாய் ஓட்டுபவன்
  மாடஒள்ளெரி – கலங்கரை விளக்கம்

 9. புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது கடல்

 10. மருதத்திணை பாடுவதில் வல்லவர் மருதன் இளநாகனார்

 11. நெடுந்தொகை என அழைக்கப்படுவது அகநானூறு.

 12. “முந்நீர் வழக்கம்” எனக் கடற்பயணத்தை குறிப்பிடும் நூல் தொல்காப்பியம்

 13. திருவள்ளுவர் காலத்திலேயே பெரிய கப்பல்கள் இருந்தன என்பதற்கு சான்றாக விளங்கும் குறள்
  “கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
  நாவாயும் ஓடா நிலத்து”

 14. பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டன என்பதை விளக்கும் நூல் பட்டினப்பாலை

 15. பலவகையான கப்பல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிகண்டு நூல் சேந்தன் திவாகரம்

 16. “உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்” என்று பெரிய கப்பலை அகநானூறு குறிப்பிடுகிறது.

 17. “அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங் கலி வங்கம்” – என்கிறது பதிற்றுப்பத்து

 18. சிறிய நீர்நிலைகளைக் கடக்க பயன்படுத்தப்பட்டவை தோணி, படகு, ஓடம், புனை, மிதவை, தெப்பம்

 19. பெரிய நீர்நிலைகளைக் கடக்க கலம், வங்கம், நாவாய் முதலியவை பயன்படுத்தப்பட்டன.

 20. நியூசிலாந்து நாட்டு வெலிங்டன் அருங்காட்சியகத்தில் பழங்காலத் தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட மணி ஒன்று இடம்பெற்றுள்ளது.

 21. கப்பல் கட்டும் கலைஞர்கள் கம்மியர் என்று அழைக்கப்பட்டனர்.

83.”கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஇய்” என்கிறது மணிமேகலை.

 1. “கண்ண்டை ” என்பது இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் ஆகும்.

 2. “தச்சுமுழம்” என்பது நீட்டலளவை.

 3. மரத்தினாலான ஆணிகளைத் தொகுதி” என்பர்

 4. காற்றின் உதவியால் செலுத்தப்படும் கப்பல்கள் பாய்மரக் கப்பல்கள் எனப்பட்டன.

 5. பாய்மரக் கப்பலின் பாய், கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்படும்பொழுது அவற்றை மரப்பிசின் கொண்டு இணைத்தனர் என கூறுகிறது பரிபாடல்.

 6. கப்பலின் உறுப்புக்கள்
  எரா, பருமல், வங்கு, கூம்பு, பாய்மரம், சுக்கான், நங்கூரம்

 7. கப்பலின் முதன்மை உறுப்பாகிய அடிமரம் “ளரா” எனப்படும்.

 8. குறுக்கு மரம் பருமல்

 9. கப்பலைச் செலுத்துவதற்கும் உரிய திசையில் திருப்புவதற்கும் பயன்படும் முதன்மையான கருவி சுக்கான்.

 10. கப்பலை நிலையாக ஓரிடத்தில் நிறுத்தி வைக்க உதவும் உறுப்பு நங்கூரம்.

 11. கப்பல் செலுத்துபவரை மாலுமி, மீகாமன், நீகான், கப்பலோட்டி முதலிய பெயர்களால் அழைப்பர்.

 12. சமுக்கு என்னும் ஒரு கருவியையும் கப்பலில் பயன்படுத்தினர் என்று கப்பல் சாத்திரம் என்னும் நூல் குறிப்பிடுகிறது.

 13. “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
  வளி தொழில் ஆண்ட உரவோன் மருக” என தமிழர்கள் கப்பல் செலுத்தும் முறையை புறப்பாடல் வழி குறிப்பிட்டுள்ளவர் வெண்ணிக்குயத்தியார்.

 14. கலம் என்றால் கப்பல், கரைதல் என்றால் அழைத்தல். கப்பலை அழைக்கும் விளக்கு கலங்கரை விளக்கம் எனப்பட்டது.

TNPSC GENERAL TAMIL 65 IMPORTANT NOTES 30-06-2019

 1. “கலம் தந்த பொற்பரிசம் /
  கழித்தோணியால் கரை சேர்க்குந்து” என்கிறது புறநானூறு.

 2. “ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களைப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுதுபார்க்க வேண்டும். ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களை ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் பழுதுபார்க்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறிய ஆங்கிலேயர் வாக்கர்.

 3. அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் ஜூல்ஸ் வெர்ன்

 4. எண்பது நாளில் உலகத்தைச் சுற்றி, பூமியின் மையத்தை நோக்கிய ஒரு பயணம் உள்ளிட்ட பல புதினங்களைப் படைத்துள்ளவர் ஜூல்ஸ்வெர்ன்

 5. “ஆழ்கடலின் அடியில்” என்ற புதினத்தின் ஆசிரியர் “ஜூல்ஸ் வெர்ன்”

 6. இலக்கண வகைச்சொற்கள் : பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல், இலக்கிய வகை சொற்கள்

இலக்கிய வகைச் சொற்கள்
இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்

 1. வட சொற்களைத் தற்சமம், தற்பவம் என இருவகையாகப் பிரிப்பர்.

 2. பாரதிதாசன்
  1) கவிஞர், இதழாளர், தமிழாசிரியர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர்
  ii) இவர் கவிதை, கதை, கட்டுரை, நாடகம் ஆகியவற்றைப் படைப்பதில் வல்லவர்.
  iii) பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, இசையமுது, குடும்ப விளக்கு, கண்ணகி
  புரட்சிகாப்பியம் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
  iv) இவர் எழுதிய பிசிராந்தையார் என்னும் நாடக நூலுக்கு சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது.

 3. கழனி – வயல் நிகர் – 0 சமம்

பரிதி – கதிரவன் முகில் -மேகம்
வெற்பு – மலை எத்தணிக்கும் – முயலும்

 1. கற்றவர்க்கு அழகு கல்வியே
  “கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால் மற்றோர் அணிகலம் வேண்டாவாம்” – என்றவர் – குமரகுருபரர்

 2. நீதிநெறி விளக்கம் – ஆசிரியர் – குமரகுருபரர். இந்நூலில் 102 பாடல்கள் உள்ளன.

 3. குமரகுருபரர் 17ம் நூற்றாண்டைச் சார்ந்தவர். இவர் தமிழுக்கு பெருமை சேர்க்கும் பல சிற்றிலக்கியங்களை படைத்துள்ளார்.

 4. கந்தர் கலிவெண்பா, கயிலைக்கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகியன படைத்தவர் குமரகுருபரர்.

 5. பள்ளித்தல மனைத்தும் கோயில் செய்குவோம்;
  எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்” என்றவர் – பாரதியார்.

 6. திருக்குறள் வகுப்புகள் நடத்தியும், தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளைப் பரப்பும் பணி செய்தவர் திருக்குறளார் வீ.முனிசாமி

 7. நகைச்சுவை ததும்பும் பேச்சால் மக்களைக் கவர்ந்தவர். வள்ளுவர் காட்டிய விதி, திருக்குறளில் நகைச்சுவை ஆகிய நூல்கள் எழுதியவர் வீ.முனிசாமி.

 8. உலகப் பொதுமறை திருக்குறள் உரைவிளக்கம், சிந்தனைக் களஞ்சியம் – எழுதியவர் வீ. முனிசாமி.

 

TNPSC GENERAL TAMIL 65 IMPORTANT NOTES 30-06-2019

 

[sociallocker id=2244]

DOWNLOAD PDF HERE

[/sociallocker]

 

TNPSC GENERAL TAMIL 45 IMPORTANT NOTES 30-06-2019

Leave a Reply