Search
Generic filters
Exact matches only

TNPSC GENERAL TAMIL 54 IMPORTANT NOTES

0 3 years ago

TNPSC GENERAL TAMIL 54 IMPORTANT NOTES

TNPSC GENERAL TAMIL 54 IMPORTANT NOTES

 

 1. கடித இலக்கியத்தின் முன்னோடி, தமிழிசைக்காவியர், குற்றாலமுனிவர் என்றெல்லாம் புகழப்படுபவர் டி.கே.சிதம்பரநாதர்(இரசிகமணி).

 2. தமது வீட்டில் வட்டத்தொட்டி என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தவர் டி.கே.சி.

 3. ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி.

 4. உவம உருபுகள் : போல, புரைய, அன்ன, இன்ன,அற்று, இற்று, மான, கடுப்ப,ஒப்ப, உறழ போன்றவை

 5. உவமை ஒரு தொடராகவும், உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவமஉருபு மறைந்து வந்தால் அது எடுத்துக்காட்டு உவமை அணி.

 6. உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவது இல்பொருள் உவமை அணி

 7. சிற்றில் – சிறுவீடு
  கல் அளை – கற்குகை
  யாண்டு – எங்கே

 8. “ஈன்ற வயிறோ இதுவே
  தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே” – என்றவர்
  காவற்பெண்டு (புறநானூறு)

 9. காவற்பெண்டு சங்ககாலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவர்.

 10. சாலம் – பாசாங்கு
  மூர்ச்சை – மயக்கம்
  சலாம் – வணக்கம்
  பதைத்து – நடுங்கி

 11. செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஒரு குறுநிலப் பகுதியை ஆண்டு வந்தவர் சொரூபசிங், அவரது மகன் தேசிங்குராசன்.

 12. யாராலும் அடக்க முடியாத குதிரை – நீலவேணியை அடக்கியவன் தேசிங்குராசன்

 13. “முத்துராமலிங்கரின் வீரம்மிக்க பேச்சு விடுதலைப்போருக்கு மிகவும் உதவும்” என்று பாராட்டியவர் காமராசர்.

 14. வட இந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டத்தின்படி பேசத்தடை விதிக்கப்பட்ட தலைவர் பாலகங்காதர திலகர் தென்னாட்டில் பேச தடைவிதிக்கப்பட்ட தலைவர் முத்துராமலிங்க தேவர்.

 15. தன் வாழ்நாளில் ஐந்தில் ஒரு பங்கினைச் சிறையில் கழித்த தியாகச் செம்மல் முத்துராமலிங்கர்.

 

TNPSC GENERAL TAMIL 54 IMPORTANT NOTES

 1. முத்துராமலிங்கரின் சிறப்புப் பெயர்கள் தேசியம் காத்த செம்மல், வேதாந்த பாஸ்கர், பிரணவகேசரி, சன்மார்க்க சண்டமாருதம், இந்து புத்தசமய மேமை

 2. தென்னாட்டுச் சிங்கம் – முத்துராமலிங்கர்

 3. அவர் பேசத்தொடங்கியதும் சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது என்று முத்துராமலிங்கரை பாராட்டியவா அண்ணா .

 4. “முத்துராமலிங்கரின் பேச்சு உள்ளத்தில் இருந்து வெளிவருகிறது உதடுகளிலிருந்து அல்ல” என்றவர் இராஜாஜி.

 5. முத்துராமலிங்கர் “நேதாஜி” என்ற வார இதழை நடத்தினார்.

 6. முத்துராமலிங்கர் முதன் முதலில் உரையாற்றிய ஊர் சாயல்குடி . .

 7. சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம்உயிர்பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்” என்றவர் – சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதி – பின்ஹே 188. சொல்லின் செல்வர் எனப் போற்றப்படுபவர் இரா.பி.சேதுப்பிள்ளை .

 8. செய்யுளுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றை உரைநடைக்குள் கொண்டுவந்தவர் இரா.பி.சேது

 9. தமிழின்பம் இந்திய அரசின் சாகித்திய அகாதெமி விருதுபெற்ற முதல் நூல்.

 10. ஆற்றங்கரையினிலே, கடற்கரையினிலே, தமிழ்விருந்து, தமிழகம் – ஊரும் பேரும், மேடைப்பேச்சு உள்ளிட்ட நூல்களை எழுதியவர் இரா.பி.சேது.

 11. எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை வழக்கு.

 12. வழக்கு இருவகை.

 13. இயல்பு வழக்கு 2. தகுதி வழக்கு

 14. இயல்பு வழக்கு
  இலக்கணமுடையது இலக்கணபோலி மரூஉ

தகுதி வழக்கு
இடக்கரடக்கல் மங்கலம் குழூஉக்குறி

 1. இலக்கணமுடையது – நிலம், மரம், வான், எழுது
  இலக்கணபோலி – புறநகர், கால்வாய், தசை, கடைக்கண்

மரூஉ – கோவை, குடந்தை, எந்தை, போது, சோணாடு

இடக்கரடக்கல்- கால் கழுவி வந்தான்
குழந்தை வெளியே போய்விட்டது
ஒன்றுக்குப் போய் வந்தேன்
மங்கலம் ஓலை – திருமுகம்
கறுப்பு ஆடு – வெள்ளாடு
விளக்கை அணை – விளக்கை குளிரவை
சுடுகாடு – நன்காடு

குழூஉக்குறி – பொன்னைப்பறி எனல்
ஆடையைக் காரை எனல்

 1. சொல்லின் முதலிலோ, இடையிலோ, இறுதியிலோ இயல்பாக இருக்க வேண்டிய ஓர் எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து இடம்பெற்று அதே பொருள் தருவது போலி.

 2. போலி மூன்று வகைப்படும்

 3. முதற்போலி 2. இடைப்போலி 3. கடைப்போலி

 4. முதற்போலி பசல் – பைசல் மஞ்சு – மைஞ்சு, மயல் – மையல்
  இடைப்போலி அமச்சு – அமைச்சு இலஞ்சி – இலைஞ்சி அரயர் – அரையர்

கடைப்போலி அகம்-அகன் நிலம் – நிலன் முகம் – முகன் பந்தல் – பந்தர்

 1. முற்றுப்போலி – ஐந்து – அஞ்சு

 2. தகளி – அகல்விளக்கு
  நாரணன் – திருமால்
  இடர் ஆழி – துன்பக்கடல் 2
  சுடர் ஆழியான் – ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்

 3. பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தவர்.

 4. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி பாடியவர் பொய்கையாழ்வார்.

 5. பூதத்தாழ்வார் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிறந்தவர்.

 6. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதி பாடியவர் பூதத்தாழ்வார்

 7. திருமாலைப் போற்றிப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்விய பிரபந்தம். இதனைத் தொகுத்தவர் நாதமுனி.

 8. ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவதை அந்தாதி என்பர்.

 9. முனைப்பாடியார் திருமுனைப்பாடி என்னும் ஊரைச் சேர்ந்த சமணப்புலவர். இவரது காலம் 13ஆம் நூற்றாண்டு.

 10. முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம் 225 பாடல்களைக் கொண்டது.

 11. “செல்வத்துப் பயனே ஈதல்”
  “துய்ப்போம் எனினே தப்புந பலவே” – என்கிறது புறநானூறு

 12. உலகம் உண்ண உண், உடுத்த உடுப்பாய் என்றவர் – பாரதிதாசன்

 13. ஜென் என்னும் ஜப்பானிய மொழிச்சொல்லுக்கு தியானம் செய் என்பது பொருள்.

 14. கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. இவர் கவியரசு என அழைக்கப்படுகிறார். தமிழக அரசவைக் கவிஞராகவும் இருந்துள்ளார்.

 15. இயேசு காவியம் – படைத்தவர் கண்ணதாசன்.

 16. கூடுகட்டத் தெரியாத பறவை – குயில்

 17. சே.பிருந்தா புகழ்பெற்ற பெண்கவிஞர்களுள் ஒருவர். மழைபற்றிய பகிர்தல்கள், வீடு முழக்க வானம், மகளுக்குச் சொன்ன கதை ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார்.

 18. காயிதே மில்லத் – அவரது இயற்பெயர் முகம்மது இஸ்மாயில்

 19. காயிதே மில்லத் எனும் அரபுச் சொல்லுக்கு சமுதாய வழிகாட்டி என்று பொருள்

 20. தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் திகழ்கிறார் என்றவர் – அறிஞர் அண்ணா .

 21. இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது, அவர் நல்ல உத்தமமான மனிதர் – என்றவர் தந்தை பெரியார்.

 22. வேர்கள், தொலைவில் இருக்கின்றன, நேற்று வாழ்ந்தவர்கள் கடலோர வீடு, பாய்மரக் கப்பல், மீசைக்காரப்பூனை, பிரயாணம் ஆகிய நூல்களை எழுதியவர் – பாவண்ணன்

 

TNPSC GENERAL TAMIL 54 IMPORTANT NOTES

 

[sociallocker id=2244]

DOWNLOAD PDF HERE

[/sociallocker]
TNPSC GENERAL TAMIL 50 IMPORTANT NOTES 02-07-2019

Leave a Reply