TNPSC General Knowledge 22 Model Question
TNPSC General Knowledge 22 Model Question
பொது அறிவு – பயிற்சி வினாத்தாள்
பால்மானி கருவி எந்த விதியின் அடிப்படையில் இயங்குகிறது?
a) மிதத்தல் விதி
b) நியூட்டன் விதி
c) ஓம்ஸ் விதி
d) அவகாட்ரோ விதி
சர்க்கஸ்காரர் ஒருவர், 250 கி.கி. நிறையுள்ள இரு சக்கர வாகனத்தினை 100 மீ. விட்டமுள்ள வட்டப்பாதையில் 20.மீ./வினாடி வேகத்தில் சுற்றி வருகிறார் எனில், இரு சக்கர வாகனத்தின் மீது செயல்படும் முடுக்கம் யாது?
a) 4 மீ./வினாடி
b) 6 மீ./வினாடி
c) 8 மீ./வினாடி
d) 9 மீ./வினாடி
பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும் :
a) 30.8×1015 மீ
b ) 9.46×1015 மீ
c) 1.496×1015 மீ
d) 3.08×1015 மீ
வைரம் பிரகாசமாக ஜொலிப்பதற்கான காரணம்?
a) ஒளி விலகல்
b) எதிரொளிப்பு
c) முழு அக எதிரொளிப்பு
d) ஒளிச்சிதறல்
கோவிலிலிருந்து சற்று தூரத்திலுள்ள ஒருவர், 3 கிலோ ஹெர்ட்ஸ் அதிர்வெண் மற்றும் 20 செ.மீ. அலைநீளம் கொண்ட பாடலை கேட்கிறார். அப்பாடலின் ஒலி, 5 வினாடி நேரத்தில் அவரை வந்தடைகிறது எனில், அவ்வொலி கடந்துள்ள தூரம் யாது?
a) 5 கி.மீ.
b)2 கி.மீ.
c) 4 கி.மீ.
d) 3 கி.மீ.
5A மின்னோட்டமானது ஒரு மின் சூடேற்றி வழியாக பாயும் போது 6 நிமிடங்களில் உருவாகும் வெப்ப அளவு 54000 J எனில், அதன் மின்தடை யாது?
a) 6Ω
b) 5Ω
c)7Ω
d) 4Ω
TNPSC General Knowledge 22 Model Question
பொருத்துக
a) பொருளின் தலைகீழான, மெய் பிம்பத்தினை உருவாக்குவது – கண் பாவை
b) கண் பாவையினுள் நுழையும் ஒளிக்கதிர்களின் அளவைக் கட்டுப்படுத்துவது – கார்னியா
c) ஒளிக்கதிர்கள், விழித்திரையை அடையும் பாதையாக திகழ்வது – ஐரிஸ்
d) ஒளிக்கதிர்கள் ஒளி விலகலடைந்து லென்ஸின் மீது குவிக்கப்படுவது – விழித்திரை
TNPSC General Knowledge 22 Model Question
சரியான இணை / இணைகளைத் தேர்ந்தெடுக்கவும் :
1) வெப்பக்கதிர் வீச்சு – வெப்பம் அலைகளாக எல்லா திசைகளிலும் பரவும்.
வெற்றிடத்திலும் வெப்பக்கதிர் வீச்சு நடைபெறும்.
2) வெப்பக் கடத்தல் – வெப்பப் பரிமாற்றம் திரவப் பொருள்களுக்கிடையே நிகழும்.
வெற்றிடத்தில் நடைபெறாது.
3) வெப்பச்சலனம் – வெப்பப் பரிமாற்றம் திடப்பொருள்களுக்கிடையே நிகழும்.
வெற்றிடத்திலும் நடைபெறும்.
a) 1 மட்டும்
b) 2, 3 மட்டும்
c) 1, 3 மட்டும்
d) 3 மட்டும்
கீழ்வரும் கூற்றினை சரி செய்க?
படுகதிரின் அதிர்வெண்ணுக்கு சமமான அதிர்வெண்ணைக் கொண்ட நிறமாலை வரிகள் ‘இராமன் வரிகள்’ எனப்படும்.
a) ராலே வரிகள்
b) ஸ்டோக் வரிகள்
c) ஆண்டி ஸ்டோக் வரிகள்
d) டிண்டால் விளைவு
சூரிய மண்டலத்தில், கோளின் சுழற்சிக்கு எதிர் திசையில் சுற்றும் ஒரே நிலவு?
a) ஸ்புட்னிக்
b) டைட்டன்
c) கானிமீடு
d) டிரைட்டான்
போக்குவரத்து கட்டுப்பாட்டு விளக்குகளில் சிவப்பு விளக்கு, வாகனங்களை நிறுத்துவதற்கு பயன்படுத்தப்படுவதற்கான காரணம்?
a) சிவப்பு விளக்கு குறைந்த அலைநீளம் கொண்டது
b) சிவப்பு விளக்கு அதிக அலைநீளம் கொண்டது.
c) சிவப்பு விளக்கு பிரகாசமாகவும், கவரும் வண்ண மும் உள்ளது.
d) சிவப்பு விளக்கு அதிக அளவு விலகு கோணத்தைக் கொண்டது.
கீழ்க்கண்டவற்றில் ஜூல் வெப்ப விதியோடு தொடர்பு இல்லாதது எது?
a) H=I2Rt
b) H=VIt
c) H=VIRt2
d) H=VQ
1 கிலோவாட் அளவை குதிரை திறனில் மாற்றுக?
a) 1.43 HP
b) 746000 HP
c) 1.34 HP
d) 0.746 HP
பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்?
a) CCl4
b) NaCl
c) CuC12
d) CaCl2
பொருத்துக :
a) டிண்டால் விளைவு – இரத்தத்திலிருந்து இரத்த செல்களை பிரித்தல்
b) பிரௌனியன் இயக்கம் -பல்வேறு சாயங்களைப் பிரித்தல்
c) மைய விலக்கு முறை – கூழ்ம துகள்கள் அங்குமிங்குமாக நகர்தல்
d) தாள் வண்ணப்பிரிகை முறை – உண்மைக் கரைசலில் காணப்படுவதில்லை.
பெருக்கல் விகித விதியை முன்மொழிந்தவர்?
a) ஜான் டால்டன்
b) ஜெரிமியாஸ் ரிட்சர்
c) நீல் போர்
d) ரூதர் ஃபோர்ட்
கூற்று (கூ) : வெண்கலம் ஒரு உலோகக்கலவை
காரணம் (கா) : உலோகக் கலவை என்பது உலோகம் மற்றும் அலோகம் ஆகியவற்றின் பண்புகளை கொண்டதாகும்.
a) கூற்று மற்றும் காரணம் சரி
b) கூற்று மற்றும் காரணம் தவறு
c) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
d) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது.
பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்?
a) நாக முலாம் பூசுதல்
b) பெஸ்ஸிமராக்கல்
c) மின் முலாம் பூசுதல்
d) ஆனோட்டாக்கல்
2PbO+C-2Pb+CO2 இவ்வினை எதற்கு எடுத்ததுக்காட்டாக விளங்குகிறது?
a) ஒடுக்கம்
b) ஆக்ஸிஜனேற்ற ஒடுக்கம்
c) ஆக்ஸிஜனேற்றம்
d) சிதைவுறுதல்
இராஜ திரவத்தில் அடர் ஹைட்ரோ குளோரிக் மற்றும் அடர் நைட்ரிக் அமிலத்தின் விகிதாசாரம்?
a) 4:1
b)1: 4
c) 3:1
d)1 : 3
பொருந்தாத இணையைக் கண்டறிக?
a) அம்மோனியம் ஹைட்ராக்சைடு – துணிகளிலுள்ள எண்ணெய் கரையை நீக்குகிறது
b) கால்சியம் ஹைட்ராக்சைடு – கட்டிடங்களுக்கு சுண்ணாம்பு பூச பயன்படுகிறது
c) சோடியம் ஹைட்ராக்சைடு – சோப்பு தயாரிக்க பயன்படுகிறது
d) மெக்னீசியம் ஹைட்ராக்சைடு – உரம் தயாரிக்கப் பயன்படுகிறது
22. பின்வரும் நெகிழி ரெசின் குறியீடுகளில் எது பாதுகாப்பற்றது?
a) 1, 2, 3
b) 3, 6, 7
c) 3, 4, 5
d) 5, 6, 7
TNPSC General Knowledge 22 Model Question
Indian Constitution 26 Model Question
Indian Constitution Model Question 21-01-2020
TNPSC Indian Constitution Model Question 20-01-2020
Recent Comments