TNPSC Biology Model Question 16-04-2020 Download

Last updated on April 29th, 2020 at 12:40 am

TNPSC Biology Model Question 16-04-2020

This TNPSC Biology Model Question 16-04-2020 covers Group I syllabus , Group II syllabus, Group IV syllabus

1. டர்னர் சிண்ட்ரோம் உடைய ஒரு பெண்
A) 45 குரோமோசோம்கள் மற்றும் XO – அமைப்பு உடையன
B) அதிகபட்ச X – குரோமோசோம் கொண்டிருக்கலாம்
C) ஆண் பண்புகளை கொண்டிருப்பதால்
D) சாதாரண ஆணை மணந்து குழந்தைகளை பெறுவாள்

A)45 குரோமோசோம்கள் மற்றும் XO – அமைப்பு உடையன
விளக்கம் :
டர்னர் சிண்ட்ரோம் உடைய ஒரு பெண்ணிற்கு ஒரு X குரோமோசோம் இருக்காது. (44+ XO) டர்னர் சிண்ட்ரோமின் குணாதிசியங்கள்
1. குட்டையான உயரம் (5 ஆம் வயதில்வெளிப்படும்)
2. கருப்பையின் வளர்ச்சி முதலில் நன்றாக இருக்கும் ஆனால் முட்டை வளர்ச்சிக்கு முன்பே இறந்து விடும். கருப்பையினுடைய திசுக்கள் பிறப்பதற்கு முன்பே சிதைந்து விடும்.

 

2.மெண்டல் பட்டாணி தாவரத்தை அவர் ஆய்விற்கு தேர்வு செய்தார். ஏனெனில் அதில் இவைகள் உள்ளன?
A) தன் மற்றும் குறுக்கு மகரந்த சேர்க்கை நடைபெறும்
B) நீண்ட வாழ்க்கை வட்டம்
C) குறைந்த பினோடைப்பில் வேறுபாடு
D) 1 மற்றும் 3 இரண்டும்.

A) தன் மற்றும் குறுக்கு மகரந்த சேர்க்கை நடைபெறும்

விளக்கம் :
மெண்டலின் அறிவியல் ஆராய்ச்சியில் தன் மகரந்தசேர்க்கை மற்றும் குறுக்கு மகரந்த சேர்க்கையை தோட்டத்து பட்டாணியில் செய்து, சந்ததிகளின் விவரங்களை சேகரித்து, கணிதம் மற்றும் சட்டமுறையில் ஆராய்ந்து வெற்றி கண்டு ‘மரபியலின் தந்தை ‘ ஆனார்.
தோட்டத்துப்பட்டாணியில் முரண்பாடான குணங்களை மெண்டல் கண்டறிந்தார். அவர் ஒரு ஜோடி வெவ்வேறு இயல்பு கொண்ட தாவரத்தை ஒரே நேரத்தில் தேர்வு செய்து அவற்றை மகரந்த சேர்க்கையின் மூலம் கலப்பினம் செய்தார்.
F1 தலைமுறையின் விவரங்களை சேகரித்து அவற்றை மீண்டும் சுய மகரந்த கலப்பினம் மூலமாக F2 தலைமுறையை உருவாக்கி பல விவரங்களை கண்டறிந்தார்.

 

3.யூ-டிராப்பிகேஷன் (குளம் அழுகுதல்) என்னும் நிகழ்வினால் மீன்கள் கொல்லப்படுவது எதன் குறைபாட்டால்?
A) உணவு
B) ஒளி
C) இன்றியமையாத தாதுக்கள்
D) ஆக்ஸிஜன்

C) இன்றியமையாத தாதுக்கள்
விளக்கம் :
நீர் அமைப்புகளில் அதிக அளவு ஊட்டச்சத்துகள் சேர்வதனால் அதிக அளவு தாவரங்களின் வளர்ச்சி ஏற்படுகிறது. இது யூடிரோபிகேசன் எனப்படும்.
இது அதிக அளவு தாவர கூட்டத்தினில் சூரிய ஒளி, வாழும் இடம் மற்றும் ஆக்சிஜனுக்காக போட்டி ஏற்படும்.
இது மீன்களுக்கு தேவையான அவசியமான நுண் தனிமங்கள் கிடைக்காததால் அவைகள் இறந்து விடுகின்றன.

 

4.ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பதிலாக, குறைந்த அளவு புரதங்களும் கலோரிகளும் கிடைப்பதால் ஏற்படும் பாதிப்பு?
A) ரிக்கெட்ஸ்
B) குவாஷியார்கர்
C) பெல்லாக்ரா
D) மராஸ்மஸ்

D) மராஸ்மஸ் நோய்
விளக்கம் :

புரதச்சத்து குறைபாட்டால் குழந்தைகளில் இரண்டு வகையான நோய்கள் ஏற்படும்
1. குவாஷியார்கர் 2, மராஸ்மஸ்

குவாஷியார்கர்
1-5 வயது வரை உள்ள குழந்தைகளிடம் இவை பொதுவாக காணப்படும். குவாஷியார்கரில் தசைகள் மெலிந்து முகம், கால்களில் வீக்கம் ஏற்படும். வயிறு உப்பியிருக்கும்.

மராஸ்மஸ்
இந்நோய் பொதுவாக 1 வயதுக்கும் குறைவான குழந்தைகளிடம் காணப்படுகிறது. மராஸ்மஸில் குழந்தையின் உடல் எடை குறையும். கடுமையான வயிற்றுப் போக்கு ஏற்படும். உடல் தசைகள் மெலியும் எலும்பின் மீது தோல் மூடியுள்ளது போன்ற நிலை தோன்றும். பாதிப்படைந்த குழந்தைகளுக்கு போதிய அளவு புரதச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்கள் நிறைந்த உணவு கொடுக்கப்பட வேண்டும்.

 

5.ஒரே வகுப்பைச் சேர்ந்த ஆனால் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த இரு உயிரிகளை கீழ்க்கண்ட எந்த பிரிவின் கீழ் ஒன்றாக வைக்கமுடியும்?
A) வரிசை
B) சிற்றினம்
C) சிற்றினம்
D) குடும்பம்

A) வரிசை (Order)
விளக்கம் :
சிறு பொதுவான பண்புகளைக் கொண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பல குடும்பங்களின் தொகுப்பு வரிசை எனப்படும்.
ஒரே மாதிரியான ஒன்று அல்லது பல குடும்பங்கள் இணைந்து வரிசையை உண்டாக்குகிறது.
எடுத்துக்காட்டாகக் கேனிடே குடும்பமும் ஃபெலிடே குடும்பமும், கார்னிவோரா என்ற வரிசையில் வைக்கப்பட்டுள்ளன
.

TNPSC Biology Model Question 16-04-2020

6.HIV தொற்று ஏற்பட்ட ஒரு நபர் எந்த நிலையில் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்
A) நோயுற்ற ஒரு நபருடன் பாலுறவு கொண்ட 15 நாட்களுக்குள்
B) நோய் தொற்றான, ரெட்ரோ வைரஸ் ஒம்புயிர் செல்களில் பிரவேசிக்கும் போது
C) அதிக எண்ணிக்கையிலுள்ள உதவி செய்யும் T – வெள்ளையணுக்கள் சேதமடையும் போது
D) எதிர்மறை – தலைகீழ் மாற்றம் முறையில் வைரஸின் DNA உருவாக்கப்படும் போது.

C) அதிக எண்ணிக்கையிலுள்ள உதவி செய்யும் T- வெள்ளையணுக்கள் சேதமடையும் போது

விளக்கம் :

HIV பாதிப்பு பெறப்பட்ட நோய்த்தடுப்பு குறைபாட்டு அறிகுறிகளை உருவாக்குகிறது. (AIDS) பாலியல் தொடர்பு ஏற்பட்ட 15 நாட்களுக்குள் அந்த மனிதர் நோய் தொற்று கொண்டிருந்தால் அறிகுறிகள் முதலில் தோன்றுவதில்லை. இது இன்குபேசன் காலம் ஆகும்.
நோய் தடைக்காப்பினை அளிக்கின்ற T – செல்கள் அதிக அளவு அழிவுற்ற பிறகு அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.
*HIV ஒரு உருளை வடிவ வைரஸ். (ரிட்ரோ வைரஸ்.
* அதன் குறுக்கு விட்டம் 90 – 120 m .
*அதனுடைய மரபுப் பொருள் ஒற்றை சங்கிலியால் ஆன RNA.
*RNA துண்டு இரண்டாக ஒத்த அமைப்புகளையும் நொதி ரிவர்ஸ் டிரான்ஸ் கிரிப்டோஸையிம் கொண்டுள்ளன.

 

7.இப்போதுள்ள DNA கைரேகை தொழில்நுட்பத்தில் பின்வருவனவற்றுள் எது தேவைப்படாது?
A) ரெஸ்டிரிஷன் நொதிகள்
B) DNA – DNA கலப்பினமாதல்
C) பாலிமரேஸ் – தொடர் வினை
D) துத்தநாக விரல் ஆய்வு

D) துத்தநாக விரல் ஆய்தறிதல்
விளக்கம் : DNA விரல் ஆய்தறிதல் முறைக்கு

TNPSC Biology Model Question 16-04-2020

 

8.பன்றி காய்ச்சலை உருவாக்கும் வைரஸ்
A) ருபல்லா வைரஸ்
B) ரைனோ வைரஸ்
C) H1N1 வைரஸ்
D) ஆல்ஃபா வைரஸ்

C) HIN1 வைரஸ் வயிற்றுப் போக்கு ஏற்படும். உடல் தசைகள்

விளக்கம் :
பன்றிக்காய்ச்சல் முதன் முதலில் 1919 மெலியும் எலும்பின் மீது தோல் மூடியுள்ளது போன்ற நிலை தோன்றும்.
ஆம் ஆண்டு தொற்று நோயாக அங்கீகரிக்கப்பட்டு,
இன்றளவும் பருவக்காலங்களில் ஏற்படம் பாதிப்படைந்த குழந்தைகளுக்கு போதிய அளவு காய்ச்சலாக அறியப்படுகிறது.
HIN1 வைரஸ் புரதச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்கள் மூலம் பன்றிக்காய்ச்சல் ஏற்படுகிறது.
காய்ச்சல்,இருமல், தொண்டை , வலி, குளிர் வலுவிழத்தல் மற்றும் உடல்வலி போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.
குழந்தைகள் கருவுற்ற பெண்கள் மற்றும் வயதானவர்களில் ஏற்படும் கடுமையான தொற்று அபாய நிலையை ஏற்படுத்தும்.

 

9.கீழ்நிலை உயிரிகளில் சில சமயங்களில் முதிர்ந்த இனச்செல்களை உருவாக்காமல் அவ்வுயிரிகளே இனச் செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கும் செயல் ?
A) வேறுபட்ட செல் சேர்க்கை
B) மாறுபட்ட செல் சேர்க்கை
C) இளம் செல் சேர்க்கை
D) முழு சேர்க்கை

D) முழு சேர்க்கை

 

10.C4 தாவரங்கள் தக அமைக்கப்பட்டுள்ள காலநிலை?
A) வெப்பமான உலர்ந்த காலநிலை
B) மிதவெப்பக்காலநிலை
C) குளிர்ந்த உலர்ந்த காலநிலை
D) வெப்பமான ஈரப்பதமான காலநிலை

A) வெப்பமான உலர்ந்த காலநிலை
விளக்கம் :

H.P. கோர்ஷக் மற்றும் C.E ஹர்ட் (1965) ஆகியோர் காற்று மண்டலத்திலிருந்து CO2 -வை கரும்பு தாவரத்தின் இலைகள் சிறப்பாக நீக்குவதை கண்டறிந்தனர்.
இந்நிலை பல வெப்பமண்டல ஒரு வித்திலை (சோளம், மக்காச்சோளம், கேப்பை) இரு வித்திலை (அமராந்தஸ், யூபோர்பியா சிற்றினங்கள்). இந்தத் தாவரங்கள்C4 தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன.
ஒளிச்சேர்க்கையின் முதல் பொருளாக சேர்மங்களை (PGA) உருவாக்கும் தாவரங்கள் (கோதுமை, நெல்) C3 தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன.
* C4 தாவரங்கள் பெரும்பாலும் வெப்பமண்டல அல்லது சூடான காலநிலையில் வளரும் தாவரங்கள் ஆகும்.
* C3 தாவரங்களும் இந்த உலகில் அதிகமாக காணப்படக்கூடியது. ஆனால் ஒளிச்சேர்க்கையின் திறன் குறைவாக இருக்கும்.

TNPSC Biology Model Question 16-04-2020

 

11.பின்வரும் ஒருவித்திலைத் தாவரங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
A) விதை ஒரு வித்திலையை கொண்டது
B) இலைகளில் இணைப்போக்கு நரம்பமைவு காணப்படுகிறது
C) சல்லிவேர்த் தொகுப்பு காணப்படுகிறது
D) ஐந்தங்க மலர் காணப்படுகிறது.

D) ஐந்தங்க மலர் காணப்படுகிறது.
விளக்கம் : ஒரு விதையிலைத் தாவரங்கள் (Monocotyledonae): விதைகள் ஒரு விதையிலையையும், சல்லிவேர்த் தொகுப்பையும் இலைகள் இணை நரம்பமைவையும், மூவங்க மலர்களையும் கொண்ட தாவரங்கள். ஒரு விதையிலைத் தாவரம் 7 வரிசைகளையும் 34 குடும்பங்களையும் கொண்டது.

TNPSC Biology Model Question 16-04-2020

12.ஆன்டரோஜன் இணைவு புரதத்தை உற்பத்தி செய்பவை
A) ஹைபோதலாமஸ்
B) லீடிக் செல்கள்
C) டெஸ்டோஸ்டீரோன்
D) செர்டோலி செல்கள்

D) செர்டோலி செல்கள்
விளக்கம் : பூப்பெய்தும் வயதில் ஹைபோதலாமஸ் சுரக்கும் கொனடோடிரோபின் வெளிவிடு ஹார்மோனின்(GnRH) அளவு அதிகரிக்கும் போது விந்து செல்லாக்க நிகழ்ச்சி தொடங்குகிறது.
முன் பிட்யூட்டரி மீது GnRH செயல்பட்டு அதனை ‘நுண்பைசெல் தூண்டும் ஹார்மோன்'(FSH) மற்றம் லூட்டினைசிங் ஹார்மோன் (LH) ஆகிய இரண்டு கொனாடோட்ரோபின்கைளை வெளியிடத் தூண்டுகிறது.
FSH விந்தக வளர்ச்சியை தூண்டுவதுடன் செர்டோலி செல்களிலிருந்து ஆன்ட்ரோஜன் இணைவுப்புரத (Androgen binding protien) உற்பத்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.
குறிப்பு : விந்தாக்க நுண்குழல்களுக்கு வெளியே இடையீட்டு செல்கள் அல்லது லீடிக் செல்கள் உள்ளன. இவை டெஸ்டிகுலார் (அ) டெஸ்டோஸ்டீரான் எனும் ஆண் இமை ஹார்மோனை (Androgens) சுரக்கின்றன. இந்த ஹார்மோன் இரண்டாம் நிலை பாலுறுப்பு வளர்ச்சிக்கு உதவுகின்றன

 

13.கார்போஃஹைடிரேட்களிலிருந்து ஆற்றலை குடும்பங்களைச் சேர்ந்த இரு உயிரிகளை எடுத்து ATP உற்பத்தி செய்யும் நுண்ணுறுப்பு கீழ்க்கண்ட எந்த பிரிவின் கீழ் ஒன்றாக
A) பசுங்கணிகம் உட்சவ்வு
B) மைட்டோகாண்டிரியா உட்சவ்வு
C) பசுங்கணிகம் வெளிச்சவ்வு
D) மைட்டோகாண்டிரியா வெளிச்சவ்வு

B) மைட்டோகாண்டிரியா உட்சவ்வு
விளக்கம் :
சிறு குறிப்புகள் (Short Points) :
* ஆக்ஸிஜனேற்ற பாஸ்பேட் சேர்ப்பு மூலம் ATP மூலக்கூறுகளை மைட்டோகாண்டிரியா உருவாக்குவதால் ‘செல்லின் ஆற்றல் நிலையம்’ எனவும் இவை அழைக்கப்படுகிறது.
* DNA மற்றும் RNA உடன் நெருங்கிய தொடர்புடையது ATP ஆகும்.
*அடினைன், ரைபோஸ் சர்க்கரை மற்றும் மூன்று பாஸ்பேட்டுகள் சேர்ந்த நியூக்ளியோடைடு ATP ஆகும்.
*செல்களின் வேதி வினைகளுக்கான ஆற்றல் ATP – யில் இருந்து பெறப்படுகிறது. ATP ஒர் உயர் ஆற்றல் கொண்ட கூட்டுப் பொருள் ஆகும்.
* செல்களில் ஆற்றல் பரிமாற்றம் ATP வழியாக நடைபெறுகிறது.

 

DOWNLOAD PDF HERE

TNPSC Biology Model Question 16-04-2020

TNPSC Biology Model Question 11-04-2020

DOWNLOAD OUR ANDROID APP

TNPSC Biology Model Question 16-04-2020 Download 1

1 thought on “TNPSC Biology Model Question 16-04-2020 Download”

Leave a Reply