
TN Police Exam Tamil Model Question
Table of Contents
காவலர் தேர்வு – தமிழ்
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் – துரை.மாணிக்கம்
‘தென்னன்’ என்னும் சொல் – பாண்டிய மன்னர்களைக் குறிக்கிறது
“நாடும் மொழியும் நமது இரு கண்கள்’ என்று பாடியவர் – மகாகவி பாரதியார்
‘மொழிஞாயிறு’ என்று அழைக்கப்படுபவர் – தேவநேயப்பாவாணர்
உலகத் தமிழ்க்கழகத்தை நிறுவியவர் – தேவநேயப்பாவாணர்
திருவள்ளுவர் தவச்சாலையை அமைத்தவர் – தமிழ்த்திரு. இரா. இளங்குமரனார்
கூலம் என்பதன் பொருள் – தானியம்
உலகத்திலேயே மொழிக்காக நடத்தப்பட்ட மாநாடு – மலேசியாவில் நடத்தப்பட்டது
முதலில் உருவாக்கப்பட்ட தமிழ்க் கணினி – திருவள்ளுவர்
முதலில் தமிழ்க் கணினி உருவாக்கப்பட்ட ஆண்டு – 1983
குறிஞ்சி மலர் என்னும் நூலின் ஆசிரியர் – நா.பார்த்தசாரதி
சார்பெழுத்துக்கள் – 10 வகைப்படும்
அளபெடை – 2 வகைப்படும்
உயிரளபெடை – 3 வகைப்படும்
செய்யுளிசை அளபெடையை இசைநிறை அளபெடை என்றும் கூறுவர்
பால் – 5 வகைப்படும்
‘மொழி’ – 3 வகைப்படும்
திருமூலர் எழுதிய நூல் – திருமந்திரம்
உலகக் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா – ஐந்தாம் இடம் பெற்றுள்ளது
காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் – முதலிடம் பெற்றுள்ளது
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா எனப் போற்றபடுபவர் – மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
‘சிந்துக்குத் தந்தை’ எனப் பாராட்டப் பெற்றவர் – பாரதியார்
‘முல்லைப்பாட்டின் ஆசிரியர்’ – நப்பூதனார்
‘தொங்கான்’ என்பதன் பொருள் – கப்பல்
TN Police Exam Tamil Model Question
புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை – 2000 ஆம் ஆண்டில் இருந்து தொடங்கியது
‘தொகை நிலைத் தொடர்’ – ஆறு வகைப்படும்
பாரதஸ்டேட் வங்கியில் பயன்படுத்தப்படும் வாடிக்கையாளர் சேவை மென்பொருளின் பெயர் – இலா (Ela – Electronic Live Assistant)
‘வழு’ – ஏழு வகைப்படும்
‘வினா’ – ஆறு வகைப்படும்
‘விடை’ – எட்டு வகைப்படும்
சமூகப் பண்பாட்டுத் தளத்தின் கருத்துக் கருவூலமாக விளங்குவது – நிகழ்கலை
சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாத கூறுகளாகத் திகழ்பவை – நிகழ்கலைகள்
பன்னெடுங்காலமாக மக்களால் விரும்பப்படும் மரபார்ந்த கலைகளில் ஒன்று – கரகாட்டம்
‘பொருள்கோள்’ – எட்டு வகைப்படும்
TNPSC Model Question 12th Political Science 4
Install App