• Padma posted an update in the group Group logo of Current AffairsCurrent Affairs 11 months, 4 weeks ago

    08.05.2020-இன்று செய்தித்தாள்களில் இடம் பெற்று முக்கிய குறிப்புகள்:-

    1. ஆந்திராவில் உள்ள எந்த நிறுவனத்திலிருந்து விஷவாயு வெளியேறியது?
    விடை: எல்ஜி பாலிமர்ஸ் லிமிடெட்
    ✍ 1997 ஜூலையில் தென்கொரிய நிறுவனமான எல்ஜி குரூப்ஸ் வாங்கி, எல்ஜி பாலிமர்ஷ் லிமிடெட் என்று பெயர் சூட்டியது
    ✍ இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறிய விஷவாயு பெயர் – ஸ்டைரின்

    2. தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம் எங்கு அமைந்துள்ளது?
    விடை: புனே
    ✍NEERI-National Environmental Engineering Research Institute at nagpur
    ✍Neeri தலைவர் – பிரதமர்
    ✍ பொது இயக்குனர் – Shekhar C. Mande

    3. விசாகப்பட்டினத்தில் காற்றில் கலந்துள்ள விஷ வாயு பாதிப்பை குறைக்க, எந்த ரசாயனத்தை பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது?
    விடை: பாரா ரேர்டியரி பியூட்டைல் கேட்டசோல்
    ✍ பாரா ரேர்டியரி பியூட்டைல் கேட்டசோல் – இந்த ரசாயனம் இந்தியாவில் எங்கு மட்டும் தயாரிக்கப்படுகிறது – குஜராத் மாநிலத்தில் மட்டும்

    4. தமிழகத்தில் எந்த ஆண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஓய்வுபெறும் வயது 55 லிருந்து 58 ஆக உயர்த்தப்பட்டது?
    விடை: 1979, April 25.
    ✍ அப்போதைய தலைமைச் செயலாளர் – C.V.R. பணிக்கர்

    5. ஆரோக்கிய செய்து செயலியின் தரவுகளைத் திரட்ட முடியும் என்று கூறிய பிரான்ஸ் நாட்டு ஹேக்கர் யார்?
    விடை: எலியட் ஆல்டர் சன்

    6. இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் முதன் முதலாக எந்த பகுதிக்கும் சேர்த்து வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டது?
    விடை: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கும் சேர்த்து
    ✍ இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் – M.மொஹபத்ரா

    7. INS ஜலஷ்வா மற்றும் INS மாகர் போர்க்கப்பல்கள் எந்த நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர சென்றுள்ளது?
    விடை: மாலத்தீவு
    ✍ இதேபோன்று INS ஷர்துல் என்ற போர்க்கப்பல் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது
    ✍ கப்பல்கள் மூலம் இந்தியர்களை கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு சூட்டியுள்ள பெயர் – சமுத்திர சேது (கடற்பாலம்)

    8. அடுத்த ஒன்பது மாதங்களில் உலகம் முழுவதும் 11.6 கோடி குழந்தைகள் பிறக்கும் என்ற அறிவிப்பை அறிவித்த அமைப்பு எது?
    விடை: ஐநாவின் யூனிசெப்
    ✍இதில் இந்தியாவில் மட்டும் 2.01 கோடி குழந்தை பிறக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
    ✍ யுனிசெப் செயல் இயக்குனர் – ஹென் ரிட்டா ஸ்போர்

    9. தொல்காப்பியர் இயங்கு பிறந்ததாக தமிழ் அறிஞர்களால் வரையறுக்கப்பட்டுள்ளது? விடை; கன்னியாகுமரி, காப்பிகாடு

    10. மூங்கில் திரை நாடு என்று அழைக்கப்படும் நாடு எது? விடை: சீனா
    ✍ இரும்புத்திரை நாடு என்று அழைக்கப்படும் நாடு – ரஷ்யா

    11. மேக்மேஹன் எல்லைக்கோடு எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?
    விடை: 1914

    12. இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையான 15வது உச்சி மாநாடு 2020 மார்ச்சில் எங்கு நடைபெற இருந்தது?
    விடை: பிரஸல்ஸ்

    13. 17 வது மக்களவை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இரண்டாவது முறையாக எந்த நாளில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டது?
    விடை: மே 30, 2019.

Register New Account
Reset Password