Important Co Operative Laws Hints 15-09-2019
Important Co Operative Laws Hints 15-09-2019
கூட்டுறவுச் சட்டங்கள்
- இந்தியாவில் கூட்டுறவு இயக்கம் அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- முதல் கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 1904-ம் ஆண்டு இயற்றப்பட்டது.
- இச்சட்டம் இங்கிலாந்து நாட்டின் “பிரண்ட்ஸ் சொசைட்டீஸ் ஆக்ட்டையும்” இண்டஸ்டிரியல் அன்டு புராவிடண்ட் சொசைட்டீஸ் ஆக்ட்டையும் மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளின் சட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும்.
சட்டத்தின் முக்கிய அம்சங்கள்
- 18 வயதிற்கு மேற்பட்ட ஒரு கிராமத்தைச் சார்ந்த 10 நபர்களுக்கு ஒரு சங்கத்தை ஆரம்பிக்கலாம்
- உறுப்பினர்களிடமிருந்தும், உறுப்பினர் அல்லாதாரிடமிருந்தும் வைப்புகள் மற்றும் கடன்கள் பெற்று உறுப்பினர்களுக்கு கடன் வழங்கலாம்.
- கூட்டுறவு சங்கங்களை பதிவு செய்யவும், அவற்றை பராமரிக்கவும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு பதிவாளரை நியமிக்க வேண்டும்.
- கூட்டுறவு சங்க கணக்குகள் கட்டணம் ஏதும் இல்லாமல் தணிக்கை செய்யப்பட வேண்டும்.
- கூட்டுறவு சங்கங்களுக்கு முத்திரைச் சட்டம் மற்றும் பதிவுச் சட்டம் ஆகியவற்றின்படி செலுத்த வேண்டிய கட்டணங்களிலிருந்து விலக்க அளிக்கப்படுகிறது.
கூட்டுறவுச் சங்களின் சட்டம்
- 1912 – 1909-ஆம் ஆண்டு கூடிய பதிவாளர்கள் மாநாடு, 1904-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில்
உள்ள குறைகளை பரிசீலனை செய்தது. - கூட்டுறவுச் சங்கங்களின் வரையறுக்கப்பட்ட பொறுப்பு மற்றும் வரையறுக்கப்படாத பொறுப்பை பொதுமக்களால் புரிந்து கொள்ள இயலவில்லை.
- கூட்டுறவுச் சங்கங்களின் பல்வேறு குறைகள் சுட்டிக் காட்டப்பட்டன.
- அதனால் 1912-ஆம் ஆண்டு 2-வது கூட்டுறவுச் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி கடன் தவிர
வேறு நோக்கங்களுக்கும் கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்யலாம். - சங்கங்களுக்கு வழிகாட்டவும், நிதி உதவி செய்யவும், பெரிய சங்கங்களை பதிவு செய்யலாம். – கூட்டுறவு சங்கங்கள் மட்டுமே கூட்டுறவு என்ற சொல்லைப் பயன்படுத்த முடியும்.
சர் எட்வர் மெக்லேகன் குழு அறிக்கை – 1915
- கூட்டுறவின் வளர்ச்சியையும், குறைகளையும் ஆய்வு செய்து, அறிக்கை கொடுப்பதற்கு சர் எட்வர் மெக்லேகன் தலைமையில் 1914-ஆம் ஆண்டு அரசால் ஒரு குழு அமைக்கப்பட்டது.
- இக்குழு தனது அறிக்கையை 1915-ஆம் ஆண்டு சமர்ப்பித்தது.
- இந்த அறிக்கையை சட்டத்திருத்தம் உட்பட பல்வேறு பரிந்துரைகள் அரசால் அமல்படுத்தப்பட்டன.
மாண்டேகு செம்ஸ்போர்டு அரசியல் சீர்திருத்தங்கள் – 1919
- 1919-ஆம் ஆண்டு இச்சட்டம் உருவாக்கப்பட்டது.
- இச்சட்டத்தின்படி கூட்டுறவு இயக்கம் மாநில அரசுகளின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது.
- ஒவ்வொரு மாநிலத்திலும் தனியாக கூட்டுறவுத்துறை ஏற்படுத்தப்பட்டு ஒரு அமைச்சரும் பொறுப்பாக்கப்பட்டார்.
- 1925-ஆம் ஆண்டு முதலாவது மாநில கூட்டுறவுச் சட்டம் இயற்றப்பட்டது மகாராஷ்டிரா மாநிலத்தில் தான்.
இந்திய கூட்டுறவுச் சட்டக்குழு – 1957
<
ul>
இக்குழு தனது அறிக்கையை, 1954-ஆம் ஆண்டு சமர்பித்தது.
DOWNLOAD PDF HERE
[/sociallocker]
Sir ,
This is my email address , kindly send co operative notes PDF in Tamil and also English
Thanks for your comment . Please Check Your Mail for PDF
Sir ,
This is my email address , kindly send co operative notes PDF in Tamil