How To Crack TNPSC Group 2 Exam

How to crack TNPSC Group 2 Exam

How To Crack TNPSC Group 2 Exam

தொகுதி-2 தேர்வுக்கு எவ்வாறு தயார் ஆகலாம் ?

 

பொது அறிவுப்பகுதிக்கு 6 முதல் 10 வரை சமச்சீர் புத்தகங்கள் மற்றும் சில மேல்நிலை பாடப்புத்தகங்களிலுள்ள தேர்வு திட்டத்தோடு தொடர்புடைய சில பாடங்கள் மற்றும் இதோடு அரிஹந்த் ஜெனரல் நாலெட்ஜ் -2018 (eng ).தமிழக அரசு புதிதாக வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்ட நூல்களில் அதிக கவனம் செலுத்துங்கள்.

✅ பொது அறிவு பகுதிக்கு எப்படி படிக்க வேண்டும் எனில் 6,7,8,9,10,11,12 ம் வகுப்பு வரிசையாக பாடங்களை படியுங்கள் .எடுத்த உடன் 10 ம் வகுப்புக்கோ 12 ம் வகுப்புக்கோ போகாதீர்கள் .ஒரு பாடத்தின் அடிப்படை விஷயத்தை புரிந்து கொண்டு கூடுதல் தகவல்கள் தெரிந்து கொள்ளுங்கள் உதாரணமாக 7 ம் வகுப்பு ஒலியியல் பாடத்தை படித்து முடித்த கையோடு 9 ம் வகுப்பு ஒலியியல் மற்றும் 12 ம் வகுப்பு ஒலியியல் என ஒரே மூச்சில் முடித்து விடுங்கள் .கையோடு குறிப்பு எடுத்து கொள்ளுங்கள் .இந்த முறை வரலாறு போன்ற பிற பாடங்களுக்கும் பொருந்தும் .7ம் வகுப்பு முகலாய பேரரசு பின் 9 மற்றும் 11 முகலாய பேரரசு வையும் முடித்து விடுங்கள் .அப்போது தான் பாடத்தில் ஒரு தெளிவான தொடர்ச்சி கிடைக்கும் .
தமிழ் இலக்கணத்தை(6-7-8-9-10-11-12 ஆம் வகுப்பு வாரியாக) இந்த முறையில் படித்தால் மட்டுமே புரியும் என்பது திண்ணம்.

 

✅ பாடப் புத்தகங்களை நன்கு ஆழமாக ,நன்கு புரிந்து கொண்டு கோடிட்டு படித்திட வேண்டும்.நுனிப்புல் மேய்ச்சல் கூடாது.மனனமும் கூடாது.

 

✅மேற்சொன்ன குறிப்புகளை வைத்து படித்தவற்றை மீண்டும் நினைவில் கொண்டு வந்து பழகி கொள்ளுங்கள். அது ஞாபக மறதியை அகற்றும்.

 

✅ எளிதாக படித்து அதிக மதிப்பெண் பெற்றுத்தரும் மொழிப்பகுதி ( GT/GE),இந்திய தேசிய இயக்கம்,அரசியலமைப்பு, நடப்பு நிகழ்வுகள் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.இப்பகுதிகளில் தவறுகள் நிகழவே கூடாத அளவுக்கு தயாராகுங்கள்.

 

✅ தேர்விற்கு தயார் செய்யும் உங்கள் நண்பரோடு இணைந்து நீங்கள் படித்த பாட பகுதியிலிருந்து கேள்வி கேட்டு பதில் அளிக்க வேண்டும்.குழுக்கலந்தாய்வு முறை உங்கள் நினைவுத்திறனை அதிகரிக்கச் செய்வதோடு,பாடங்களை விரைந்து முடிக்க பயன்படும்.

 

✅ நண்பர்களாக தேர்வு எழுதி பார்த்து, விவாதிப்பது இன்னும் கூடுதல் பலன் கொடுக்கும்.

 

✅ பிறகு பயிற்சி மையத்தில் மாதிரித்தேர்வுகள் எழுத வேண்டும்.அப்போது நீங்கள் பயிற்சியில் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்று தெரியவரும்.சக போட்டியாளர்களுடன் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை ஒப்பிட இயலும்.

 

✅ மாதிரித்தேர்வை உண்மையான TNPSC தேர்வை அணுகுவது போன்றே அணுக வேண்டும்.அஜாக்ரதை கூடாது.மாதிரித் தேர்வுகளில் 75% வினாக்களுக்கு சரியான பதில் அளிக்கிறீர்கள் எனில் நீங்கள் வெற்றியாளர் ஆவது உறுதி.

 

✅ கேட்கப்படும் மொத்த வினாக்களுக்கும் முழுவதற்கும் சரியான விடை அளித்திட பயிற்சி எடுக்க வேண்டும்.

 

✅ நேர மேலாண்மையை கடைபிடித்திட வேண்டும்.அதுதான் மிக முக்கியம்.தேர்வில் தமிழ்/ ஆங்கில மொழிப்பகுதியை ஒரு மணி நேரத்தில் முடித்துவிட பழக வேண்டும்.

 

How to crack TNPSC Group 2 Exam

 

✅ மாதிரித்தேர்வில் சரியாக விடையளிக்காத ஒவ்வொரு வினாவிற்கும் தீவிர கவனம் செலுத்தி உடன் சரி செய்திட வேண்டும்.

 

✅ Tnpsc யின் கடந்த 5 வருட வினாத்தாள்களை சேகரித்து கேட்கப்பட்ட கேள்விகளின் தரத்திற்கு ஏற்றவாறு தாயார்படுத்திக் கொள்ளவேண்டும்.

 

✅ எளிமையாக கேள்விகளில் அவசரப்பட்டு தவறாக விடையளித்து விடக்கூடாது.அதற்கு ஆழ்ந்த கற்றல் அவசியம்.

 

✅ பாடங்களை நன்கு வாசித்து புரிந்து கொள்ள வேண்டும் தொடர்புபடுத்தி படிப்பது நீண்ட காலம் நினைவில் இருக்கும்.
எதிர்மறை கருத்துகளுக்கு இடம் கொடுக்ககூடாது.
சமூகவலைதளங்களை அடிக்கடி உபயோகிப்பது சோர்வை உண்டுபண்ணும். கவனச்சிதறல் ஏற்படும்
உங்கள் மீது நீங்களே நம்பிக்கை வையுங்கள்.
சிந்தியுங்கள் மிக விரைவாக செயல்படுங்கள் காலம் மிகக்குறைவே.

 

✅ BE மற்றும் ஏனைய புரொபஷனல் படித்த மாணவர்களோடு போட்டித்திறனை சமாளிக்க அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.குறிப்பாக கணிதத்தில் திட்டமிடல் மிக அவசியம்.எளியான கணிதப்பகுதியில் தவறு நிகழவேக்கூடாது.உம்- தனிவட்டி& கூட்டுவட்டி,மீ.பெ.வ& மீ.சி.ம ,சதவீதம்.இத்தகைய எளிமையான பகுதிகளில் தவறு என்பது நிகழவே கூடாது.கணிதத்தை தினமும் போட்டு பார்க்க வேண்டும்.

How to crack TNPSC Group 2 Exam

TNPSC History Important Online Test 3

Free Online Test - TNPSC History 1

TNPSC NOTIFICATIONS

 

 

We will be happy to hear your thoughts

   Leave a Reply

   Register New Account
   Reset Password
   Shopping cart