குரூப் 1 தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள்
How to Crack TNPSC Group 1 Exam
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் பணிகளான
- உதவி கலெக்டர் (18),
- மாவட்ட துணை கண்காணிப்பாளர் (19),
- உதவி ஆணையா வணிக வரி (10),
- கூட்டுறவுத் துறையில் உதவிப் பதிவாளர் (14),
- ஊரக வளர்ச்சி துறையில் உதவி இயக்குநர் (7),
- மாவட்ட தீயணைப்பு அதிகாரி (1)
உள்ளிட்ட 69 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 19-02-2020 மற்றும் முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள் 05-04-2020. ( மாற்று தேதி அறிவிக்கப்படும் )
தகுதி /Eligibility :
இத்தேர்விற்கு 21 வயது பூர்த்தியடைந்த இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்களும், இளங்கலையில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கத் தகுதி உள்ளவர்கள்.
வயது வரம்பில் 01.07.1983-க்கு பின்ன SC/ST பிரிவினர் 37 வயது வரை விண்ண ப்பிக்கலாம். OC பிரிவினர் 32 வயது வரை ரும், 01.07.1999-க்கு முன்ன ரும் பிறந்த BC/BCM/MBC/ விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்வு குறித்த மற்ற விபரங்கள் அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குரூப் 1 தேர்வு மூன்று நிலைகளைக் கொண்டது.
- 1. முதல்நிலைத்தேர்வு
- 2. முதன்மைத்தேர்வு (Main),
- 3. நேர்முகத் தேர்வு (Interview). – (Preliminary).
1. முதல்நிலைத் தேர்வு / Preliminary Examination:
முதல்நிலைத்தேர்வு 1 – பொது அறிவுத்தாளை மட்டுமே கொண்டது.
175 பொது அறிவு வினாக்களும், 25 திறனறிவு வினாக்களும் கொள்குறி வகை (Objective Type) வினாக்களாக அமையும். மொத்தம் 200 வினாக்கள்.
ஒரு வினாவிற்கு 1.5 மதிப்பெண்கள். மொத்த மதிப்பெண்கள் 300.
- முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெற தமிழக வரலாறு பண்பாடு மற்றும்
- தமிழக நிர்வாகம் (75),
- திறனறிவு (25),
- நடப்பு நிகழ்வுகள் (15),
- அரசியலமைப்பு (15),
- வரலாறு (20),
- பொருளாதாரம் (15),
- புவியியல் (15)
பாடங்களில் மட்டும் 180 வினாக்கள் கேட்கப்படும்.
இப்பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் முதல்நிலைத்தேர்வில் வெற்றி உறுதி. காலி இடங்களுக்கு ஏற்ப 1:50 என்ற விகிதத்தில் மெயின்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
குறைந்தது 3,450 பேர் மெயின்தேர்வுக்கு அழைக்க வாய்ப்புண்டு: 130 வினாக்களுக்கு சரியாக விடை அளிப்பவர்களுக்கு மெயின் தேர்வுக்கான வாய்ப்பு கிட்டும்.
2. முதன்மைத் தேர்வு/ Mains:
முதன்மைத்தேர்வு 750 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இத்தேர்வு பட்டப்படிப்பு தரத்திலும், விரிவாக (Descriptive) எழுதும் படியும் அமையும்.
இதற்கான பாடத்திட்டம் TNPSC இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.
மெயின் தேர்வு 3 தாள்களைக் கொண்டது.
பொது அறிவு (1), (2), (3),
பொது அறிவு (1) – தாளில் நவீன வரலாறு – 100 மதிப்பெண்களுக்கும், சமூக பிரச்சனை – 100 மதிப்பெண்களுக்கும், திறனறிவு – 50 மதிப்பெண்களுக்கும் கேட்கப்படும்.
பொது அறிவு (2) – தாளில் அரசியலமைப்பு – 100 மதிப்பெண்களுக்கும், அறிவியல் மற்றும் டெக்னாலஜி – 75 மதிப்பெண்களுக்கும், தமிழ் கலாச்சாரம் – 75 மதிப்பெண்களுக்கும் கேட்கப்படும். –
பொது அறிவு (3) – தாளில் புவியியல் – 75 மதிப்பெண்களுக்கும், பொருளாதாரம் – 100 மதிப்பெண்களுக்கும், பேரிடர் மேலாண்மை – 75 மதிப்பெண்களுக்கும் கேட்கப்படும்.
மெயின் தேர்வுக்கான விடைத்தாள் தொகுப்பு 64 பக்கங்களைக் கொண்டதாக இருக்கும்.
10 மதிப்பெண்கள் மற்றும் 15 மதிப்பெண்களை கொண்டதாக வினாக்கள் அமையும்.
மெயின்தேர்வில் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் நேர்முகத் தேர்விற்கு வாய்ப்பு கிட்டும்.
3. நேர்முகத்தேர்வு / Personal Interview:
நேர்முகத்தேர்வுக்கு 100 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. ஆனால் தேர்வாணையம் அதிக பட்சமாக 75 மதிப்பெண்கள் வழங்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளது.
இந்த 75 மதிப்பெண்கள் 45, 52.5, 60. 67.5, 75 என ஐந்து நிலைகளில் வழங்கப்படுகிறது.
நேர்முகத் தேர்விற்கு ஒருவர் சென்றுவிட்டாலே 45 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
மற்ற நிலை மதிப்பெண்கள் மாணவர்களின் நேர்முகத்தேர்வு செயல்பாடுகளைப் பொறுத்து அமையும்.
மெயின்தேர்வு மதிப்பெண் மற்றும் நேர்முகத்தேர்வு மதிப்பெண் இரண்டையும் சேர்த்து 850-க்கு மெரிட் லிஸ்ட் தயாரிக்கப்படும்.
இவற்றில் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு விரும்பிய பதவிகள் வழங்கப்படும்.
சமீபத்தில் TNPSC அறிவித்தபடி தேர்வுக்கான தேதி எப்பொழுது அறிவிக்கப்பட்டாலும் , அதைப் பற்றி சிந்திக்காமல் இந்த நாட்களை தமிழர் வரலாறு, பண்பாடு, நிர்வாகம், திறனறிவு, நடப்பு நிகழ்வுகள், அரசியலமைப்பு, வரலாறு இப்பகுதிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து தயார் செய்தால் முதல்நிலைத் தேர்வில் வெற்றி உறுதி.
மெயின் தேர்வுக்கு தகுதி பெறலாம். தற்போது TNPSC-ல் நடைபெறும் குளறுபடிகள் குறித்த கவலைகளை மறந்து தேர்வுக்கு நேர்மறை சிந்தனையுடன் தயாராகவும்.
Recent Comments