
TNPSC MODEL QUESTION DOWNLOAD
TNPSC MODEL QUESTION DOWNLOAD
91. ஒரு வரிசையில் சில பேர் நின்று கொண்டிருக்கின்றனர். ஒரு குழந்தை அந்த வரிசையில் இடமிருந்து 14வது இடத்திலும் ஒரு பெண் வலமிருந்து 8வது இடத்திலும் நிற்கின்றனர் குழந்தைக்கும், பெண்ணிற்கும் இடையில் 4 நபர் இருக்கும் அந்த வரிசையில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை என்ன ? – -(GMT)
- A) 25
- B) 26
- C) 29
- D) 32
92. தமிழ்நாட்டில் பிரம்ம சமாஜத்தின் ஆதரவாளராகத் திகழ்ந்த வர். …………… ஆவார் -(Diseaes)
- A) இராமலிங்க அடிகளார்
- B) காசி விஸ்வநாத முதலியார்
- C) அயோத்திதாச பண்டிதர்
- D) தேவேந்திரநாத் தாகூர்
93. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி -(Em. Personalities)
- A) அபிஷேக்சிங்
- B) சுரேஷ் சித்துரி
- C) பிராஜ் ராஜ் சர்மா
- D) பங்கஜ்குமார்
94. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த பாலைவனமாதல் நிலவரைப்படத்தின்படி மொத்த நிலப்பரப்பில் எத்தனை சதவீதம் நிலப்பகுதி பாலைவனமாதலால் சீரழிவடைவதாகக் கண்ட றியப்பட்டுள்ளது. -(Natural Calamity)
- A) 10
- B) 12
- C) 16
- D) 19
95. 1. கிழக்கு தக்காண பீடபூமி, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் காணப்படுவது செம்மண்.
2. கால்சியம், மக்னீசியம், இரும்பு, சுண்ணாம்பு, இலை மக்கு மிகுந்துள்ளது கரிசல் மண்ணில்.
3. காடு மற்றும் மலை மண் பௌதீகச் சிதைவினால் உருவாகிறது.
4. வண்டல் கங்கை, பிரம்மபுத்திரா ஆற்றுச் சமவெளியில் காணப்படுகிறது. -(Acids)
இவற்றில்
- A) அனைத்தும் சரி
- B) 1, 2, 3 மட்டும் சரி
- C) 1 மற்றும் 2 மட்டும் தவறு
- D) 1 மற்றும் 4 மட்டும் தவறு
96. சாதி இரண்டே இதுவே நீதி’ ‘ஏர் பிடித்தோர்க்கு இணையில்லை’ ‘வருவது வரும் வாடாதே’ என்ற அறக்கருத்துக்களை மனித சமுகத்திற்கு வழங்கியவர்/கள் -(Tamil Lit.)
- A) சமண முனிவர்கள்
- B) திருவள்ளுவர்
- C) கம்பர்
- D) ஔவையார்
97. உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான (பேலன்டிஆர்) விருதை மெஸ்ஸி எத்தனை முறை வென்றுள்ளார்~(Sports)
- A) ஆறு முறை கடைசியாக 2019
- B) ஐந்து முறை கடைசியாக 2020
- C) ஆறு முறை கடைசியாக 2020
- D) ஐந்து முறை கடைசியாக 2019
98. உற்பத்தியின் இயக்கத்தில் உள்ள எந்தவொரு உற்பத்திப் பொருட்கள் மீதும் விதிக்கப்படும் வரி
- A) நிறுவன வரி மற்றும் சொத்து வரி (Taxes)
- B) பொழுது போக்கு வரி
- C) முத்திரைத்தாள் வரி
- D) சுங்கத் தீர்வை அல்லது கலால் வரி
99. சுப்ரமணியம் பாலாஜி VS தமிழ்நாடு அரசு என்ற வழக்கிற்கு தொடர்புடைய விவகாரம் -(H.R.C)
- A) தேர்தல் அறிக்கையின் உள்ளடக்கம்
- B) தேர்தல் நடத்தை விதிகள்
- C) இடைத் தேர்தல்
- D) வேட்பாளரின் தகுதி
100. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுக்கான 2019 ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருதை முறையே பெற்றவர்கள் -(Books & Authors)
- A) சோ.தர்மன் மற்றும் சசி தரூர்
- B) சோ.தர்மன் மற்றும் ரவீந்தர்சிங்
- C) சோ.தர்மன் மற்றும் சேட்டன் பகத்
- D) சோ.தர்மன் மற்றும் ராகுல் பாரதி
TNPSC GROUP 1, 2,4 Model Questions
ANSWERS & EXPLANATIONS – விடை மற்றும் விளக்கம்
91. B) 26
92. B) காசி விஸ்வநாத முதலியார்
விளக்கம்
தமிழ்நாட்டில் பிரம்ம சமாஜத்தின் ஆதரவாளரானசைதைகாசி விஸ்வநாத முதலியார் சமாஜத்தின் கருத்துக்களை விளக்க பிரம்ம சமாஜ நாடகம்’ எனும் தலைப்பில் ஒரு நாடகத்தை எழுதினார்.
கைம்பெண் மறுமணத்திற்கு ஆதரவாக ஒரு ஆய்வுக் கட்டுரையும் எழுதினார்.
1864ல் இதே நோக்கத்திற்காக ‘தத்துவ போதினி’ எனும் தமிழ் இதழ் தொடங்கப்பட்டது.
பிரம்ம சமாஜம் பெருமளவிலான மக்களை ஈர்க்கவில்லை . எனினும், அது அறிவு ஜீவிகளின் மேல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
தொடக்கத்தில் முற்போக்குக் கருத்துக்களால் கவரப்பட்ட பல இளைஞர்கள் ஆர்வத்தோடு அவற்றை பரப்பினர்.
தாகூரின் குடும்பம் ஒரு பிரம்ம சமாஜக் குடும்பம். அதன் செல்வாக்கை தாகூருடைய கருத்துக்களிலும் எழுத்துக்களிலும் காணலாம்.
93. D) பங்கஜ்குமார்
விளக்கம்
நபர்கள் மற்றும் அவர்களது பதவிகள்
- பிராஜ் ராஜ் சர்மா- மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர்
- அபிஷேக் சிங் – மை கவர்மண்ட் இந்தியாவின் CEO
- சுரேஷ் சித்துரி – சர்வதேச முட்டை ஆணையத்தின் தலைவர்
- பங்கஜ் குமார் -இந்திய தனித்துவ அடையாள ஆணைத்தின் CEO
94. B) 12 சதவீதம்
விளக்கம்
பாலைவனமாதல் என்பது தட்ப வெப்பநிலை மாற்றத்தினாலும் மற்றும் மனித நடவடிக்கைகளாலும் ஏற்படுகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த பாலைவனமாதல் நிலவரைப்படத்தின்படி மொத்த நிலப்பரப்பில் 12 சதவீதம் நிலப்பகுதி பாலைவனமாதலால் சீரழிவடைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
தேனி, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகியவை அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாகும்.
95. A) அனைத்தும் சரி
விளக்கம்
இந்திய மண் வகைளின் பண்புகள் மற்றும் பரவல் :
வண்டல் மண் :
பொட்டாசியம், பாஸ்போரிக் அமிலம் சுண்ணாம்பு மிகுந்து காணப்படுகிறது. கங்கை, பிரம்மபுத்திரா ஆற்றுச் சமவெளியில் காணப்படுகிறது.
கரிசல் மண் :
கால்சியம், மக்னீசியம், இரும்பு, சுண்ணாம்பு, இலை மக்கு மிகுந்துள்ளது. ஈரமாக இருக்கும் போது சேறாக உள்ளது. ஈரத்தை தக்க வைக்கும் தன்மை உடையது. மகாராஷ்டிரா, கத்தியவார் தீபகற்பம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் பகுதிகளில் கரிசல் மண் காணப்படுகிறது.
செம்மண் :
இரும்பு மற்றும் மக்னீசியம் அதிகம். கிழக்கு தக்காண பீடபூமி, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் காணப்படுகிறது.
சரளை மண் :
இரும்பு மற்றும் அலுமினியம் உள்ளது. அசாம், கேரளா, கர்நாடக மற்றும் ஒடிசா மாநிலங்களில் காணப்படுகிறது.
காடு மற்றும் மலை மண் :
பௌதீகச் சிதைவினால் உருவாகிறது பொட்டாஷ், பாஸ்பரஸ் சுண்ணாம்பு சத்து குறைவு. இலை மக்குச் சத்துக்கள் உடையது.
96. D) ஒளவையார்
விளக்கம்
ஔவையார் தமது ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற அறநூல்கள் வாயிலாக வாழ்வியல் அறங்களான கற்பு, தர்மம், கல்வி, பிறருக்கு உதவும் மனப்பான்மை போன்றவற்றை எளிமையாக கடைப்பிடிக்கும் நோக்கில் விளக்கியுள்ளார். மேலும், நல்வழி என்ற அறநூலில் சாதி இரண்ட ேஇதுவே நீதி’, ‘வருவது வரும் வாடாதே’, ஏர் பிடித்தோருக்கு இணையில்லை ‘, ‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும்’ போன்ற உயர்ந்த அறக்கருத்துக்களை
மனித சமுதாயத்திற்கு வழங்கியுள்ளார்.
97. A) ஆறு முறை கடைசியாக 2019
விளக்கம்
உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை (பேலன்டிஆர்) ஆர்ஜென்டீனாவின் கால்பந்து ஜாம்பாவான் லியோனல் மெஸ்ஸி 6வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.
பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு சார்பில் ஆண்டு தோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரர் (பேலன்டிஆர்) வழங்கப்படுகிறது.
ஏற்கனவே அவர் 2009, 2010, 2011, 2012, 2015-இல் இந்த விருதை கைப்பற்றியுள்ளார்.
ரொனால்டோ, மெஸ்ஸி இருவரும் 5 முறை மாறி மாறி இந்த விருதை வென்றுள்ளார்.
98. D) சுங்கத் தீர்வை அல்லது கலால் வரி
விளக்கம்
வரிகள்
பொழுது போக்கு வரி :
எந்தவொரு பொழுதுபோக்கு மூலங்களாக இருந்தாலும், அரசாங்கத்தால் விதிக்கின்ற வரி பொழுதுபோக்கு வரியாகும்.
சுங்கத் தீர்வை அல்லது கலால் வரி :
சுங்கத் தீர்வை என்பது உற்பத்தியின் இயக்கத்தில் உள்ள எந்தவொரு உற்பத்திப் பொருட்கள் மீதும் விதிக்கப்படும் வரியாகும்.
நேர்முக வரி :
நேர்முக வரி என்பது ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் மீது நேரடியாக விதிக்கப்படும் வரியாகும்.
வருமான வரி :
இந்தியாவில் தனிநபர் மீது விதிக்கப்படுகின்ற மிக முக்கியமான வரியாகும். இது தனிநபர் பெறுகின்ற வருமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது.
நிறுவன வரி :
இது நிறுவனங்கள் மீது விதிக்கப்படுகிறது
சொத்து வரி :
தனது சொத்திலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்காக சொத்து வரி விதிக்கப்படுகிறது.
மறைமுக வரிகள் :
ஒருவர் மீது விதிக்கப்பட்ட வரிச்சுமை மற்றொருவருக்கு மாற்றப்பட்டால் அது மறைமுக வரி எனப்படுகிறது.
முத்திரைத்தாள் வரி :
.அரசாங்க ஆவணங்கள் மீது விதிக்கப்படுகின்ற விதிக்கப்படுகின்ற வரி முத்திரை தாள் வரி ஆகும்.
99. A) தேர்தல் அறிக்கையின் உள்ளடக்கம் 100.
100.D) சோ.தர்மன் மற்றும் சசி தரூர்
விளக்கம்
தமிழ் எழுத்தாளர் சோ.தர்மனுக்கு அவர் எழுதிய ‘ஆழ்’ நாவலுக்காக 2019-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டது.
1947-ஆம் ஆண்டில் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் கிடைத்த போது இங்கிருந்த 39,640 கண்மாய்களின் இன்றைய நிலை என்ன என்பதை மையக்கருவாக கொண்டது
இந்நாவல். சசிதரூருக்கு அவர் எழுதிய An Era of Darkness என்ற நூலுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.