Free Online TNPSC Biology Exam 09-05-2020

Free Online TNPSC Biology Exam 09-05-2020

Free Online TNPSC Biology Exam 09-05-2020

Table of Contents

 

ATTEND ALL QUESTIONS TO DOWNLOAD PDF

அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்கவும் 

கணைய நீரிலுள்ள நொதிகள் பற்றிய மிகச் சரியான தெரிவைக் காண்

Correct! Wrong!

*கணைய நீரில் அமிலேஸ், லிப்பேஸ், கார்பாக்ஸி பெப்டிடேஸ், நியூக்ளியேஸ் போன்ற என்சைம்கள் உள்ளன.
* அமிலேஸ் நொதி ஸ்டார்ச்சினை மால்டோசாக பகுக்கும்.
* டிரிப்சின், கைமோடிரிப்சின், கார்பாக்ஸி பெப்டிடேஸ் என்சைம்கள் புரோட்டீன்களைச் செரிக்கும் புரோட்டியேசுகளாகும்.
* இவை பாலி பெப்டைடுகளை பெப்டோன்கள், சிறிய பெப்டைடுகள், அமினோ அமிலங்களாக சிதைவுறச் செய்கின்றன. *லைப்பேஸ் கொழுப்பின் டிரைகிளிசரைடுகளை கொழுப்பு அமிலம், கிளிசரலாகப் பிரிக்கும்.

கீழ்க்கண்டவற்றில் எவை தாய்ப்பாலில் அதிக சதவீதம் காணப்படும் இம்யூனோ குளோபுலின் ஆகும்.

Correct! Wrong!

எதிர்பொருள் தூண்டிகளுக்கு எதிராக உற்பத்தி செய்யப்படும் புரத மூலக்கூறுகளே எதிர்பொருட்கள் அல்லது இம்யூனோகுளாபின் (Ig) எனப்படும்.
இவை எதனால் உருவாக்கப்பட்டதோ அந்த எதிர்ப்பொருள் தூண்டியோடு மட்டுமே வினைபுரியக்கூடியதாகும்.
நம் உடலுக்குள் நோயூக்கிகள் உள்நுழைந்தவுடன் அவற்றுக்கு எதிராக B-லிம்போசைட்டுகள், எதிர்பொருட்கள் (Antibody) என்னும் புரத பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
எனவே எதிர்பொருள் தூண்டிகளுக்கு எதிராக B-செல்கள் உற்பத்தி செய்யும் செல்கள் பிளாஸ்மா செல்கள் எனப்படும்.
உடற்செயலிய மற்றும் உயிர்வேதிய பண்புகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்பொருட்கள் IgG(காமா) IgM(மிய) IgA (ஆல்பா) Ig D (டெல்டா) மற்றும் IgE (எப்சிலான்) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மனித பாலில் எல்லாவிதமான இம்யூனோ குளோபுலின்களும் காணப்படுகின்றன.
அவைகளில் சிறப்பாக IgA அதிக அளவில் பாலில் காணப்படுகிறது
* IgA பல சரப்புகளில் உள்ளது.
* IgE ஒவ்வாமையில் ஈடுபடுகிறது.
* IgM தீடீரென்று ஏற்படும் நோய் தொற்றில் பங்கு கொள்கிறது.
* IgG நாட்பட்ட நோய் தொற்றில் பங்கு கொள்கிறது

செல்லுலோஸ் ஒரு

Correct! Wrong!

தாவரங்களில் காணப்படும் முக்கியமான பல படிசர்க்கரை செல்லுலோஸ் ஆகும்.
இது தாவரங்களின் அமைப்பு பொருளாகும். கிளைகளற்ற ஒரே வகை பலபடி சர்க்கரை (ஹோமோ பாலி சாக்கரைடு) ஆனது.
ஒரு செல்லுலோஸ் மூலக்கூறில் சுமார் 6000 குளுக்கோஸ் மூலக்கூறுகள் காணப்படு கின்றன.
இயற்கை பொருட்களிலேயே அதிக அளவு செல்லுலோஸ் (90 விழுக்காடு) காணப்படுவது பருத்தி ஆகும்.

ஐந்து உயிரிலகு கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர்

Correct! Wrong!

R.H. விட்டேக்கர் என்பவரால் 1969 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
ஐந்து உயிருலகங்கள்
(i). மோனிரா
(ii). புரோடிஸ்டா
(iii). பூஞ்சை
(iv). பிளான்டே
(v). அனிமாலியா
இந்த உயிருலக வகைப்பாடானது உயிரனங்களின் செல் அமைப்பு, உடலமைப்பு, உணவு உட்கொள்ளும் முறை வாழ்க்கை சுழற்சி மற்றும் மரபியல் தொடர்புகள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டது.