Don’t Waste Your Time for TNPSC Exam?
TNPSC தேர்வுகளுக்காக இனியும் படித்து நேரத்தை வீணாக்க வேண்டாம்???
Tnpsc exam தேர்வுக்காக தயாராகும் பலருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் வெளியானது ஒரு செய்தி…
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59 ஆக உயர்வு என்ற செய்தி.
உடனே பலரும் இனி தேர்வு அறிவிப்புகள் வராது, தேர்வுகள் நடக்காது என்று பரவும் வதந்திகளை நம்ப ஆரம்பித்தனர்.
இதன் விளைவு:
இந்த வதந்திகளை நம்பி சிலர் படிப்பதை மூட்டை கட்டினர், சிலர் படிப்பதை மூட்டை கட்டி வைக்கப்போகின்றனர்.
ஒவ்வொரு நாளுமே போட்டித்தேர்வுக்கு படிப்பவர்களில் சிலர் படிப்பதை நிறுத்துகின்றனர். சிலர் ஒருசில மதிப்பெண்களில் வேலை பெறும் வாய்ப்பை இழந்ததால் விரக்தியில் வேறு வேலைக்கு சென்றுவிடுகின்றனர்.
இந்த ஒரு சில மதிப்பெண்களில் வாய்ப்பிழந்தவர்கள் இன்னும் ஒரு சிலமுறை முயன்றிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார்கள்…
50அடியில் உள்ள தங்கப்புதையலை அடைய தோண்டியவன் 49 அடி தோண்டிய பின், இனி எங்கு கிடைக்கப்போகிறது என்ற அவநம்பிக்கையில் விட்டுச்செல்வதைப் போன்றது தான் இது…
இனி விசயத்துக்கு வருவோம்…
ஓய்வு வயது உயர்த்திய அறிவிப்பானது 2020-2021ல் ஓய்வுபெறுபவர்களுக்காக என்று உள்ளது.
இந்த காலிப்பணியிடங்கள் வருங்காலத்தில் கணக்கிடப்பட்டு தேர்வு நடத்த TNPSCக்கு அரசு உத்தரவிடும்.
2019-2020 ஆண்டுக்கான தோராய காலிப்பணியிடங்கள் எண்ணிக்கையானது ஏற்கனவே TNPSCவசம் உள்ளது. அதனடிப்படையிலேயே ஆண்டு தேர்வு அட்டவணையை TNPSC வெளியிட்டது.
குரூப் 2 தேர்வுகளில் மட்டுமே தோராயமாக 3000 பணியிடங்களுக்கு மேல் உள்ளதாக தகவல்.
2017க்குப் பிறகு குரூப்2 தேர்வுகள் நடைபெறவில்லை.
குரூப் 1 தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
குரூப் 7 & குரூப் 8,
குரூப் 4 விஏஓ தேர்வு களும் நடைபெற இருப்பதாக ஆண்டு தேர்வு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போதைய சூழ்நிலையில் புதிய தலைவர் நியமிக்கப்பட்ட பிறகு தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளின் புதிய ஆண்டு தேர்வுகால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என TNPSC அறிவித்துள்ளது.
நமக்கு தேவை ஒரு வேலை:
அடுத்த ஒரு வதந்தி
“தேர்வுகள் நடந்தாலும் குறைவான பணியிடங்களுக்கே நடைபெறும், வேலை கிடைக்கிறதெல்லாம் ரொம்ப கஷ்டம்”
நமக்கு தேவை ஒரு வேலை ஒரு பணியிடம்,
100 காலியிடம் வந்தா என்ன?
1000 காலியிடம் வந்தா என்ன?
5000 காலியிடம் வந்தா என்ன?
உறுதியாக இறுதியாக சொல்வது ஒன்று தான்:
தொடர்ந்து படித்தால் வெற்றி நிச்சயம்.
அரசு வேலை உறுதி…
அறிவிப்பு தாமதமானால் என்ன?
தேர்வு தாமதமானால் என்ன?
நடக்காமலா போய்விடும். நிச்சயம் நடக்கும்.
ரயில்வே தேர்வு, அஞ்சலக தேர்வு, வங்கி தேர்வு, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தேர்வு, வனத்துறை தேர்வு, SSC தேர்வு, வங்கி தேர்வுகள் என நிறைய வாய்ப்புகள் வரிசை கட்டி காத்திருக்கின்றன.
வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தினால் எந்நாளும் வெற்றியே…
இந்த நேரத்தை மிகச்சரியாக திட்டமிடுங்கள்.
மாதத்திட்டம், வாரத்திட்டம் தீட்டி பாடங்களை படித்து முடியுங்கள்,
எதைப்படிப்பது? எதைப்படிக்கத்தேவையில்லை என்பதை கண்டுபிடியுங்கள்.
முந்தைய தேர்வு வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து பயிற்சி செய்து பாருங்கள்.
பொது அறிவுப் பகுதியில் புதிய மாற்றங்கள் கொண்டு வந்த பிறகு இதுவரை 3 தேர்வுகள் நடந்துள்ளன. 3 தேர்வுகளின் வினாத்தாள்களும் இணையத்தில் கிடைக்கின்றன. படித்து பயன்பெறுங்கள்.
தமிழ், தமிழர் வரலாறு, திருக்குறள் தொடர்பான அலகு 8 மற்றும் அலகு 9 அனைத்து TNPSC தேர்வு பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 60-65 வினாக்கள் வருகின்றன. இதைவிட மகிழ்ச்சியான ஒன்று வேறென்ன இருக்கப்போகிறது.
பாடப்புத்தகங்கள் இல்லையென்றால் தமிழ்நாடு பாடநூல் கழக இணையத்திற்கு சென்று Pdf வடிவில் பதிவிறக்கம் செய்து படியுங்கள்.
TNPSC புதிய பாடத்திட்டம் பொது அறிவுப்பிரிவில் அனைத்து தேர்வுக்கும் ஒரே பாடத்திட்டமே பின்பற்றப்பட உள்ளது.
தேர்வைப்பொறுத்து படிக்கும் அளவு மாறுபடும், குரூப் 1 & 2 க்கு 12ம் வகுப்பு வரையிலும்,
குரூப் 4க்கு 10ம் வகுப்பு வரையிலும் படிக்க வேண்டி இருக்கும்.
பாடத்திட்டம் ஒன்றுதான்.
நம்பிக்கையோடு தொடர்ந்து படிப்பவர்கள் வெற்றி பெறுவது உறுதி.
அவர்கள் வதந்திகளை நம்புவதுமில்லை, பரப்புவதுமில்லை.
விரக்தியின் உச்சத்தில் சிலர் கடவுளை வசைபாடும் கொடுமைகளும் காணநேர்கிறது…
என்னை மட்டும் ஏன் இப்படி சோதிக்குறே?
ஏன் இவ்ளோ தாமதப்படுத்துறேன்னு? சில புலமபல்களும் கேட்கிறது.
ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்
கடவுள் தாமதப்படுத்துகிறார் என்றால் தரவே மாட்டார் என்று அர்த்தமல்ல..
மிகச்சிறப்பான ஒன்றை தருவதற்காகவே நம்மை தயார்படுத்துகிறார் என்று அர்த்தம்.
வதந்திகளை பரப்புபவர்கள்…
படிக்க விரும்பாதவர்கள்…
தேர்வு அறிவிப்பு வரட்டுமே என்று பொழுது போக்குபவர்கள்…
நிறைய வசதிவாய்ப்புகள் இருப்பவர்களும், பொழுது போக்கிற்காக படிக்கிறேன் என்று சொல்லித்திரியும் பேர்வழிகளும் அப்படியே மேலே போய் தலைப்பை கொஞ்சம் படியுங்களேன்…
நம்பிக்கையை விதைப்போம்
நாளும்
உற்சாகப்படுத்துவோம் உற்சாகமாய்
என்றென்றும் அன்புடன்…
ரா.தட்சிணாமூர்த்தி….
#வெற்றிநிச்சயம்…
படிக்க பகிர…
Recent Comments