Current Affairs 13.02.2018

Current Affairs 13.02.2018

தமிழகத்தில் கோவில் சொத்துகளுக்கு தற்போதைய சந்தை மதிப்பில் வாடகை நிர்ணயம் செய்ய தனி குழு அமைக்க அறநிலைத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சட்டபேரவை அரங்கில் ஜெயலலிதா உருவப்படத்தை பேரவை தலைவர் தனபால் திறந்து வைத்தார்.

நாகலாந்தில் பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நீபியூ ரீயோ வடக்கு அங்கமி-2 தொகுதியில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்

இணைய வழி ஆவண பதிவை தொடர்ந்து,பதிவுக்கான கட்டணத்தை இணையவழி கட்டும் வசதி 11 வங்கிகளை பதிவுத்துறை சேர்த்துள்ளது

டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் 23 எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்தது

அரசு இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை அச்சிட்டு வழங்கும் சேவையை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் நிறுத்தியுள்ளது

கல்பாக்கம் உள்ளிட்ட அணுமின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வழங்கியதற்காக ரூபாய் ஆயிரம் கோடியை செலுத்துமாறு தமிழ்நாடு மின்சாரவாரியத்தை,மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது

பத்திரபதிவை எளிதாக்கும் ஸ்டார்ட்2.0 திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி நேற்று தொடங்கிவைத்தார்

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஸ்னோ போர்டு விளையாட்டில் அமெரிக்காவின் ஜெமி ஆண்டர்சன் தங்கபதக்கம் வென்றார்

இந்தோனேசியாவை சேர்ந்த நிதி அமைச்சர் ஸ்ரீ முல்யானி இந்திராவதி உலகிலேயே சிறந்த அமைச்சர் விருது வழங்கப்பட்டது

ஸ்டார்லிங் செயற்கைகோளை விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செய்து வருகிறது

Leave a Reply

Close Menu