
Current Affairs 1 June 2020
உலக புகையிலை ஒழிப்பு தினம்
உலக புகையிலை ஒழிப்பு தினம் – மே 31
( கருப்பொருள்- இளைஞர்களை பாதுகாத்தல்). உலக சுகாதார அமைப்பு 1988 ம் ஆண்டு முதல் மே 31 ஐ உலக புகையிலை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகிறது.
பாண்ட்டெய்ல் ஸ்கார்பியன்
மன்னார் வளைகுடாவில் சேதுக்கரை கடலோரப் பகுதியில் தனது உடலின் வண்ணத்தை மாற்றிக் கொள்ளும் “பாண்ட்டெய்ல் ஸ்கார்பியன்” என்ற அறிய வகை மீனை இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் – கேரளா, கொச்சின்
ஸ்பேஸ் எக்ஸ்
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தை சேர்ந்த “டக் ஹர்லீ, பாப் பேன்கென்” என்ற இரு வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ஃபால்கன்-9 ரக ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை நோக்கி சென்றனர்.
தனியார்நிறுவனத்தின் ராக்கெட்டில் விண்வெளி வீரர்கள் விண்வெளிக்குச் செல்வது இதுவே முதல் முறை ஆகும்.
உலகிலேயே மிக வயதான நபர்
உலகிலேயே மிக வயதான நபராக கருதப்பட்ட 112 வயதான பாப் வெய்டன் உயிரிழந்தார்.
அவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்.
ஜல் ஜீவன் மிஷன்
பீகார் மாநிலத்தின் “ஜல் ஜீவன் மிஷன் (ஹர் கர் ஜல்)” என்ற திட்டத்தின் ஆண்டு செயல் திட்டத்திற்கு ஜல் சக்தி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
நோக்கம் -“ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர்”. மேலும் 2020-2021 ஆண்டிற்குள் 1.50 கோடி குடிமக்களுக்கு குடிநீர் இணைப்பு ஏற்படுத்த பீகார் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
ஜல் சக்தி துறை அமைச்சர் – கஜேந்திர சிங் ஷெகாவத்
ஆப்பரேஷன் “சமுத்திர சேது”
ஆப்பரேஷன் “சமுத்திர சேது” திட்டத்தின்கீழ் ஜூன் 1 2020 இலங்கை கொழும்பு நகரில் இருந்து 700 பேரை இந்திய கடற்படை “INS ஜலஸ்வா ” என்ற கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு அழைத்துவரும்.
திட்டத்தின் நோக்கம் – வெளிநாடுகளில் இருந்து இந்திய குடிமக்களை அழைத்துவர.
ஒரே இந்தியா சிறந்த இந்தியா
“ஒரே இந்தியா சிறந்த இந்தியா” என்ற உணர்வை பரப்புவதற்கும், அடிப்படை கடமைகள் பற்றி இளைஞர்களிடம் உணர்த்துவதற்கும் “அடிப்படை கடமைகள் பற்றிய நினைவூட்டல்” என்ற சிறு காணொளியை பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகத்தின் “ஒரே பாரதம் உன்னத பாரதம் மன்றம்” தொடங்கி வைத்துள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தொடங்கப்பட்டது.
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் இந்தியாவின் தேசிய செயற்கைபுலனறிவு வலைதளம் “www.ai.gov.in” ஐ தொடங்கிவைத்தார் .
மேலும் “இளைஞர்களுக்கான பொறுப்புள்ள செயற்கைபுலனறிவு” என்ற இளைஞர்களுக்கான தேசிய செயல் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
.
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்- ரவிசங்கர் பிரசாத்