Current Affairs 04.02.2018

கோவை ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக யுடியூப் சேனலை தொடங்கி உள்ளது

19வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்டில் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது

பிட்காயினில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் வரி செலுத்த வேண்டும் என மத்திய நேரடி வரி ஆணையத் தலைவர் சுஷில் சந்திரா கூறியுள்ளார்

ஓட்டுக்கு பணம் வாங்கலாம் என்று கூறிய டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு கோவா நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது

இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் விமானத்தில் அமெரிக்க படைத் தலைவர் டேவிட் எல்.கோல்டுஃபின் பயணம் மேற்கொண்டார்

ஜம்மு காஷ்மீர் பகுதியில் போடப்பட்ட ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை ரத்து செய்ய முடியாது என மெகபூபா முப்தி கூறியுள்ளார்

நெடுஞ்சாலையை பராமரிக்கா விட்டால் சுங்க கட்டணம் பாதியாக குறைக்கப்படும் என ஒப்பந்ததாரர்களுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு நடைமுறை பயிற்ச்சிகளை 10நாட்களுக்களுக்குள் முடக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

புதுடெல்லியில் நடைபெற்ற க்ரிசிடெக்ஸ் விழாவில் சிறு குறு நிறுவனங்களின் வளர்ச்சியே பொருளாதாரத்திற்கு அடிப்படை என அருண் ஜேட்லி கூறியுள்ளார்

அஸ்ஸாமில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோம் செய்யப்படும் என பெட்ரோல் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்

Leave a Reply

Close Menu