தேசிய சுகாதார பாதுகாப்பத்திட்டம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும்.
கோவையில் உள்ள அரசு அச்சகத்தை மூட மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது
முத்தலாக் மசோதாவை உடனடியாக சட்டமாக்குங்கள் என லக்னோ மாவட்ட பெண்கள் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளனர்
நேபாள மற்றும் இந்திய உறவை வலுப்படுத்த இரண்டு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது
பில்டு இன்டெக் 2018 கோவை கொடிசியா வளாகத்தில் இன்று தொடங்கியது
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் குழந்தைகள் அதிக அளவில் பாலியல் வன்முறைக்கு உள்ளாவது அதிர்ச்சி அளிக்கிறது என ஐ.நா கூறியுள்ளது
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை தியாகராய நகரில் ரூ36 கோடியில் 9அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது
பசு பாதுகாப்பு மசோதாவை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி திரும்ப பெற்றார்
தமிழகத்தில் மாணவர்களின் அறிவை மேம்படுத்த 12மாவட்டங்களில் நடமாடும் நூலகம் அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்