Ayakudi Current Affairs 10-02-2019
Ayakudi Current Affairs 10-02-2019
- லோக்பால்:
அரசின் உயர்பதவிகளை வசிப்பவர்கள் மீதான லஞ்ச ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு கொண்டு வரப்பட்ட அமைப்பு லோக்பால்’, “லோக்’ என்றால் “மக்கள், பால்’ என்றால் ‘காவலன்’ “லோக்பால்’ என்ற வார்த்தையை கொணர்ந்தவர் சிங்வி.
|லோக்பால் அமைப்பு 8 உறுப்பினர்களைக் கொண்டது. லோக்பால் அமைப்பின் தேடுதல் குழுவின் தலைவர் நீதிபதி ரஞ்ஜனா பிரகாஷ் தேசாய் லோக்பால் அமைப்பின் தலைவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தகுதி பெற்றவர்கள். ஊழல் தடுப்பு, அரசு நிர்வாகம், விஜிலன்ஸ், வங்கி, இன்சூரன்ஸ் தொடர்பான சேவை மற்றும் சட்டம் தொடர்பான 25 ஆண்டு அனுபவம் தேவை. 45 வயதிற்கு மேற்பட்டவராக 4 உறுப்பினர்கள், சட்ட உறுப்பினர்கள் 50% உறுப்பினர்கள், SC/ST, OBC சிறுபான்மையினர், மகளிராக இருப்பர். பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 70 வயதுவரை, லோக்பால் சட்டம் 2013-ல் இயற்றப்பட்டு 2014-ல் குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கினார்.
ஜிசாட்-31 செயற்கைக்கோள் (8.2.2019) எடை 2535 கிலோ, ஆயுட்காலம் 15 ஆண்டுகள்
CBI புதிய இயக்குநர் ரிஷிகுமார் சுக்லா
பிப்ரவரி 4 சர்வதேச புற்றுநோய் தினத்தின் கருப்பொருள் “என்னால் முடியும்”
2019 – 2020 நிதியாண்டுக்கான மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் பியுஷ்கோயல் (1-2-2019)
இந்தியா சுதந்திரம் பெற்ற பின் முதல் பட்ஜெட்டை 1947-ல் தாக்கல் செய்தவர் ஆர்.கே.சண்முகம் செட்டி
பட்ஜெட் என்ற வார்த்தை பிரெஞ்ச் வார்த்தை. பாக்கெட் அல்லது தோல்பை என்று பொருள்
இந்தியாவின் 22-வது எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள மாநிலம் ஹரியானா
தமிழக மொத்த வாக்காளர்கள் 5 கோடியே 91 லட்சத்து. 23 ஆயிரத்து 197 பேர். 2,92,56,960 ஆண்கள், 2,98,60,765 பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் 5472 பேர்.
புவியின் வெப்பம் அதிகபட்ச் உயர்வு 2018
இந்தியாவுக்கான நேபாள தூதர் நீலாம்பூர் ஆச்சார்யா
Current Affairs 02-02-2019
[sociallocker id=2244]
DOWNLOAD MODEL QUESTION HERE
[/sociallocker]
Recent Comments