
7 Important TNPSC Biology Questions
7 Important TNPSC Biology Questions
55. இயற்கையாக பாஸ்பரஸ் அதிகமாய் தேங்கியிருக்கும் இடம்
A) பாறை
B) கடல்நீ ர்
C) தொல்லுயிர் படிமங்கள்
D) விலங்குகளின் எலும்புகள்
56. சூழ்நிலை மண்டலம் (Eco System) என்ற சொல்லை உருவாக்கியவர் யார்?
A) E. ஹெக்கேல்
B) E.வார்மிங்
C) E. P. ஒடம்
D) A.G டான்சிலே
57. செல்லினுள் உள்ள தற்கொலை பைகள் உடைந்தால் அந்த செல்லின் நிலை எவ்வாறு இருக்கும்?
A) செல் இறந்து போகும்
B) செல் உப்பி காணப்படும்
C) செல் சுருங்கி காணப்படும்
D) எதுவும் நடப்பதில்லை .
58. வகைப்பாட்டியலில் இறங்கு வரிசை என்பது
A) உலகம் – வரிசை — வகுப்பு – பிரிவு – பேரினம் – சிற்றினம்
B) உலகம் – தொகுதி – வரிசை – வகுப்பு – சிற்றினம் – பேரினம்
C) உலகம் – தொகுதி – வரிசை – வகுப்பு – பேரினம் – சிற்றினம்
D) உலகம் – தொகுதி – வகுப்பு – வரிசை – பேரினம் – சிற்றினம்
59. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கவனிக்க.
1. இரத்தமானது நுரையீரலில் இருந்து இடது எட்ரியம் வழியாக சென்று இடது வென்டிரிக்களை அடைந்து பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்கு செல்கிறது.
2.உடலில் இருந்து பெறப்பட்ட இரத்தமானது வலது ஏட்ரியம் வழியாக சென்று வலது வென்டிரிக்களை அடைந்து பின்னர் நுரையீரலுக்கு செல்கிறது.
3. உடலில் இருந்து பெறப்பட்ட இரத்தமானது இடது ஏட்ரியம் வழியாக சென்று வலது வென்டிரிக்களை அடைந்து பின்னர் நுரையீரலுக்கு செல்கிறது
கீழே கொடுக்கப்பட்ட வாக்கியங்களில் எது , எவை சரியானவை.
A) 1 மட்டும்
B) 1 மற்றும் 2)
C) 2 மற்றும் 3
D) 1, 2 மற்றும் 3
60. பின்வருவனவற்றுள் உயிர்தோன்றலுக்கு மிக இன்றியமையாதது எது
A) மாவுப்பொருட்கள்
B) புரதங்க ள்
C) கொழுப்பு பொருட்கள்
D) நியூக்ளிக் அமிலங்கள்
7 Important TNPSC Biology Questions
TNPSC GROUP I, GROUP II, GROUP IV BIOLOGY QUESTION
55. A) பாறை
விளக்கம்: இயற்கையாக பாஸ்பரஸ் பாஸ்பேட் பாறைகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். ஏனெனில் சுழற்சி தான் நில சூழ்நிலை மண்டலத்தின் மண்ணாகவும் நீர் வாழிடத்தில் நீராகவும் அமைகிறது. குறைந்த அளவு பாஸ்பேட் எப்பொழுதும் இந்த சுழற்சியினால் பாறைகளிலிருந்து பாஸ்பரஸ் கிடைக்கிறது. பாஸ்பேட் எப்பொழுதும் கால்சியம், இரும்பு, அலுமினியத்துடன் இணைந்தே காணப்படும். வளிமண்டலம் அல்லது வாயு சுழற்சி பாஸ்பரஸ் மண்டலத்தில் சுழற்சியடைந்து லித்தோஸ்பியரிலும் (பாறை மண்டலம்) ஹைட்ரோஸ் பியரிலும்
(நீர்க்கோளம்) உள்ளது.
56. D) A.G டான்சிலே
விளக்கம்:
சூழ்நிலை மண்டலம் A.G டான்சிலே என்பவரால் 1935 பெயரிடப்பட்டது.
57. A) செல் இறந்து போகும்
விளக்கம்:
லைசோசோம்களை கிரிஸ்டியன் டி டுவி (1953) கண்டறிந்தார்.
இவை தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் நுண்ணுறுப்பு என்றும் அழைக்கப்படுகிறது.
இவை கோள வடிவம் கொண்டு ஒற்றைச் சவ்வால் ஆன அமைப்புகளாக யூகேரியாட்டிக் செல்களில் காணப்படுகின்றன.
கோல்கை உடலத்தின் முனை சிறு பைகளாகப் பிதுக்கப்பட்டு வெளியேறும் சிறிய வாக்குவோல்கள் லைசோசோம்களாக உருவாகின்றன.
லைசோசோம்மன் பணிகள் :
* செல்லிற்குள்ளே செரித்தல் சைட்டோபிளாசத்தில் காணப்படும் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் லிப்பிடுகளைச் செரித்தல்.
சுய அழிவு (Authophagy) :
சில சாதகமற்ற சூழ்நிலையில் – தன்னுடைய செல் நுண்ணுறுப்புகளான மைட்டோகாண்டியங்கள் மற்றும் எண்டோபிளாச வலை போன்றவற்றைச் செரிக்க செய்தல்.
சுயச்சிதைவு (Autolysis) :
நோயுற்ற செல்களைச் சிதைத்துச் செல் அழிவை ஏற்படுத்துதல்.
முதுமையடைதல் (Ageing) :
செல்லின் உட்புறத்தில் காணப்படும் மூலக்கூறுகளைச் சுயச் சிதைவைச் செய்யும் நொதிகளைப் பெற்றிருத்தல்.
உள் விழுங்குதல் செயல் (Phagocytosis) :
பெரிய செல்கள் அல்லது உட்பொருட்களைப் ஃபேகோசைட்டோசிஸ் உள்விழுங்கி செரித்துப் ஃபேக்கோசோம்மை சைட்டோபிளாசத்தினுள் உருவாக்குகிறது. இந்தப் ஃபேக்கோசோமானது லைசோசோமுடன் இணைந்து செரித்தலில் பங்கு கொள்கிறது.
புறத்தன்மை (Exocytosis):
லைசோசோம்களின் நொதிகள் செல்லிருந்து வெளியேற்றப்பட்டுச் செல்லின் வெளியில் உள்ள மற்ற செல்களைச் சதைவடைய செய்தல்.
7 Important TNPSC Biology Questions
58. D) உலகம் – தொகுதி – வகுப்பு – வரிசை – பேரினம் – சிற்றினம். உலகம் (Kingdom) – தொகுதி (Phylum) – வகுப்பு (Class) – வரிசை (Order) – பேரினம் (Genus) – சிற்றினம் (Species)
Handy Mnemonic: King Prefered Cola Order (Flavour) Grape Soda
59. B) 1 மற்றும் 2
60. D) நியூக்ளிக் அமிலங்கள்
விளக்கம்:
மற்றும் என்பவை இரு வகை நியூக்ளிக் அமிலங்கள் ஆகும்.
இவை ஆரம்பத்தில் செல்லின் நியூக்கிளியஸிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டன.
செல்கள் மற்றும் வைரஸ்களில் காணப்படுவதோடு அவற்றின் மரபு வெளிப்பாட்டிற்கான மரபுத் திட்டங்களையும் கொண்டுள்ளன.
7 Important TNPSC Biology Questions
DOWNLOAD OUR ANDROID APP
10 Important Question – Group I Group II Group IV