Search
Generic filters
Exact matches only

10 Important Question – Group I Group II Group IV

0 2 years ago
10 IMPORTANT QUESTION

10 IMPORTANT QUESTION

10 Important Question – Group I Group II Group IV

 

10 Important Question

41. பரப்பொன்றின் நீர்மம் ஒன்றினால் ஈரமாகும் தன்மை முதன்மை நிலையில் இதனைச் சார்ந்தது -(Poperties of matter)
A) அடர்த்தி
B) பரப்பு மற்றும் நீர்மத்துக்கும் இடையேயான சேர் கோணத்தை சார்ந்தது
C) பாகுநிலை
D) பரப்பு இழுவிசை

 

42. விண்வெளிக் கப்பலின் தொடர்பை இழந்த இரு விண்வெளிப் பயணிகள் ஈர்ப்பு வெளியில் மிதக்கிறார்கள், இருவரும் -(Universe)
A) ஒருவரை ஒருவர் விட்டு விலகுவர்
B) இயங்கா நிலையை அடைவர்
C) இருவருக்குமிடையே ஒரே தொலைவில் மிதந்து கொண்டிருப்பர்
D) ஒருவரையொருவர் நெருங்கி வருவர்

 

43. …….. யிவ்விரண்டும்
கண்ணென்ப வாழு முயிர்க்கு’ -(Thirukkural)
மேற்காணும் திருக்குறளில் எவை இரண்டை திருவள்ளுவர் கண்களுக்கு ஒப்பாகக் கூறுகிறார்
A) அறமும் பொருளும்
B) நடுவு நிலைமையையும் அடக்கமுடைமையும்
C) பொருளும் இன்பமும்
D) எண்ணும் எழுத்தும்

10 Important Question

44. கீழ்க்கண்டவைகளை சரிபார்த்து விடையளிக்க
1. இரைப்பை அமிலம் என்பது வயிற்றில் சுரக்கும் சீரணத் திரவம் ஆகும். இதில், ஹைட்ரோ குளோரிக் அமிலம் உள்ளது
2. இரைப்பை அமிலத்தில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் செறிவு பொதுவாக 0.082 M என்ற அளவில் இருக்கும்.
3. அமிலத்தன்மையினைக் குணப்படுத்த பயன்படுத்தப்படும் அமிலநீக்கிகள் பெரும்பாலானவற்றில் மெக்னீசியம் ஹைட்ராக்ஸைடு மற்றும் அலுமினியம் ஹைட்ராக்ஸைடு அடங்கியுள்ளது.
4. அமில நீக்கிகள் அதிகப்படியான அமிலத்தை நடுநிலையாக்குகிறது ~(Acids) இவற்றில்
A) அனைத்தும் சரி
B) 1, 2, 3 மட்டும் சரி
C) 1 மற்றும் 2 மட்டும் தவறு
D) 1 மற்றும் 4 மட்டும் தவறு

 

45. ‘இரத்தத்திலும் நிறத்திலும் இந்தியராகவும், ரசனையில், கருத்தில், ஒழுக்கநெறிகளில், அறிவில் ஆங்கிலேயராகவும் இருக்கும் ஒரு மக்கள் பரிவினரை உருவாக்குதல்’ என்ற நோக்கத்தை கொண்டவர் -(Education)
A) டி.பி.மெக்காலே
B) ஹென்றி விவியன் டெரோசியோ
C) ஹெச். எஸ். ஆல்காட்
D) இராஜராம் மோகன் ராய்

 

46. தேசிய வாதச் செய்திகளை விரிந்து பட்டபார்வையாளர்களிடையே பரப்புரை செய்வதற்கு முதன் முதலில் செய்தித்தாள்களைப் பயன்படுத்திய தலைவராகத் திகழ்ந்தவர் ஜி.சுப்பிரமணியம் ஆவார். அவரால் நிறுவப்பட்ட செய்தித்தாள் எது ~(Agitation)
A) தி மெயில்
B) தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
C) தி இந்து
D) தி மெட்ராஸ் கூரியர்

 

47. 1962-ஆம் ஆண்டுத் தேர்தலின் போது, திராவிட முன்னேற்றக் கழகத்தை சுதந்திராக் கட்சி ஆதரித்தது. அப்பொழுது சுதந்திராக் கட்சியின் தலைவராக இருந்தவர் யார்? -(Eme. Leaders)
A) ஈ.வே.கி. சம்ப த்
B) ச.இராஜகோபாலாச்சாரி
C) கு.காமராஜ்
D) ஓமந்தூர் இராமசாமி

 

48. கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறான சொற்றொடர் எது என கண்டறிக? ~(Tamil Literature)
A) கணவனுக்கும் மனைவிக்கும் பெரும் பொருள் கொடுத்து இல்லற வாழ்வில் இணைத்து வைத்த செல்லாச் செல்வன் கோவலன்.
B) கோவலன் ‘மணிமேகலா’ என்ற தெய்வத்தின் நினைவாகத் தன்மகளுக்குப் மணிமேகலை என்று பெயர் சூட்டியவன்
C) தலைவனை இழந்து தடுமாறும் குடும்பத்தாரையும் அவர்தம் சுற்றத்தாரையும் ஆறுதல் கூறி அரவணைத்த இல்லோர் செம்மல் கோவலன்
D) புலியிடமிருந்து முதியவரைக் காத்த கருணை மறவன்.

 

49. 2019 ம் ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்றவர்கள் -(Sports)
A) விமல் குமார் மற்றும் சஞ்சய் பரத்வாஜ்
B) சந்திப் குப்தா மற்றும் மொகிந்தர் சிங் தில்லான்
C) பஜ்ரங் பனியா மற்றும் தீபா மாலிக்
D) மனோஜ் குமார் மற்றும் சஞ்சய் பரத்வாஜ்

 

50. எதிர்குறி காந்த ஏற்புத்திறனைப் பெறும் பொருள் -(Magnetism)
A) ஃபெர்ரோ காந்த பொருள் மட்டும்
B) பாரா மற்றும் ஃபெர்ரோ காந்தப்பொருட்கள்
C) டயா காந்தப் பொருள் மட்டும்
D) பாரா காந்தப் பொருள் மட்டும்

TNPSC MODEL QUESTIONS GROUP I GROUP II GROUP IV WITH EXPLANATION

 

10 Important Question

 

41. B) பரப்பு மற்றும் நீர்மத்துக்கும் இடையேயான சேர் கோணத்தை சார்ந்தது

10 Important Question

விளக்கம்:
நீர்மத்தின் ஈரமாக்கும் தன்மை, நீர்மத்திற்கும், திண்ம பொருளின் பரப்பிற்கும் இடைப்பட்ட சேர் கோணத்தை சார்ந்துள்ளது.

42. D) ஒருவரையொருவா நெருங்கி வருவர்
விளக்கம்:
விண்வெளி வீரர்கள் ஈர்ப்பு விசை அற்ற வெளியில் மிதக்கும் போது, அவர்களின் மீது செயல்படும் ஒரே விசை ஈர்ப்பியல் கவர்ச்சி விசையாகும். எனவே – ஒருவரையொருவர் நெருங்கி வருவர்.

43. D) எண்ணும், எழுத்தும்
விளக்கம்:
எண் என்று சொல்லப்படும் அறிவியலும் (Science) எழுத்து என்று சொல்லப்படும் கலை இயலும் (Arts) உண்மையாக வாழ்கின்றவர்கட்குக்
கண்கள் என்று சொல்லுவார்கள்.

44. A) அனைத்தும் சரி

45. A) டி.பி.மெக்காலே
விளக்கம்:
இந்திய இலக்கியம், தத்துவம், மருத்துவம் இவற்றில் எதிலும் மெக்காலே நல்லவற்றை காணவில்லை . 1835-ஆம் ஆண்டு அவர் கல்வி குறித்த குறிப்பில் மெக்காலே மேற்கண்டாறு எழுதியது பெரும் விவாதத்திற்கு உரியது.

10 Important Question

46. C) தி இந்து
விளக்கம்:
ஜி. சுப்பிரமணிய ஐயர் செப்டம்பர் 20, 1878 இல் தி இந்து என்ற செய்தி இதழை நிறுவி 1898 வரை அதன் உரிமையாளர், மேலாண் இயக்குநர் மற்றும் பதிப்பாளராக இருந்தவர்.
சுதேசமித்திரன் என்ற தமிழ் வார இதழை மார்ச்சு, 1882 இல் தொடங்கியவர்.
சுப்பிரமணிய ஐயர் 1885 ஆம் ஆண்டில் பம்பாயில் இடம்பெற்ற இந்திய காங்கிரஸின் முதலாவது மாநாட்டில் அம்மாநாட்டின் தீர்மானமாக இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சியைப் பற்றி விசாரணை நடத்துவது சம்பந்தமாகக் கொண்டு வந்தார்.

47. B) ச.இராஜகோபாலாச்சாரி
விளக்கம்:
இராஜாஜி சிறு குறிப்புகள் :
* 1917இல் சேலம் நகராட்சி உறுப்பினராக பின்ன ர் நகர தந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1930ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையை ஒட்டி வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரம் நடத்தி சிறை சென்றார்.
1937 ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் முதன்மை மந்திரியாக பொறுப்பேற்று 1940 வரை பதவி விகித்தார்.
முகமது அலி ஜின்னாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி முடிவு காண (சி .ஆர். பார்முலா) விழைந்தார்.
1946ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், வழங்கல், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராகவும் 1947-1948 வரை மேற்கு வங்க ஆளுனராகவும் 1948-1950 வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் 1951-1952 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
ஜவஹர்லால் நேருவுடன் பிணக்கு ஏற்பட்டு 1959ல் சுதந்திரா கட்சியை நிறுவி 1962, 1967 மற்றும் 1972 பொது தேர்தல்களில் போட்டியிட்டார்.
1967ல் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸிற்கு எதிரான அணியை ஒருங்கிணைத்து திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியை பிடிக்க உதவினார்.

48. D) புலியிடமிருந்து முதியவரைக் காத்த கருணை
மறவன். விளக்கம்:
கோவலன் யானையிடமிருந்து முதியவரைக் காத்த கருணை மறவனாவான்.

10 Important Question

49. C) பஜ்ரங் பனியா மற்றும் தீபா மாலிக்
விளக்கம்: 2019 தேசிய விளையாட்டு விருதுகள்
Rajiv Gandhi Khel Ratna

Bajrang Punia – Wrestling
Deepa Malik – Para Athletics

Dronacharya Award (regular category for coaches)

Vimal Kumar – Badminton
Sandeep Gupta – Table tennis
Mohinder Singh Dhillon – Athletics

Dronacharya Award (lifetime category)

Sanjay Bhardwaj -Cricket
Rambir Singh Khokar -Kabaddi
Mezban Patel – Hockey

Dhyan Chand Award

Manoj Kumar -Wrestling
C Lalremsanga -Archery
Arup Basak -Table tennis
Nitten Kirrtane -Tennis
Manuel Fredricks- Hockey

50. C) டயா காந்தப் பொருள் மட்டும்
விளக்கம்:
டயா காந்தப் பொருட்களுக்கு மட்டுமே காந்த ஏற்புத்திறனின் மதிப்பு எதிர்குறியாகும்.

10 Important Question

[sociallocker id=5075]

DOWNLOAD MODEL QUESTION

[/sociallocker]

10 IMPORTANT QUESTION

DOWNLOAD OUR ANDROID APP

10 Important Question - Group I Group II Group IV 1

TNPSC MODEL QUESTION – GROUP I GROUP II GROUP IV 28 DOWNLOAD

 

 

Leave a Reply